NEW
Font size
Worksheetsகுன்றியவினை, குன்றாவினை
Total questions: 10
Worksheet time: 5mins
1. குன்றியவினை என்றால் என்ன?
வாக்கியத்தில் எழுவாய் இன்றி வருவது
வாக்கியத்தில் செயப்படுபொருள் இன்றி வருவது
வாக்கியத்தில் பயனிலை இன்றி வருவது
2. குன்றாவினை என்றால் என்ன?
வாக்கியத்தில் எழுவாய் இடம்பெறும்
வாக்கியத்தில் செயப்படுபொருள் இடம்பெறும்
வாக்கியத்தில் பயனிலை இடம்பெறும்
3. செயப்படுபொருளைக் கண்டறிய கேட்க வேண்டிய கேள்விகள்
எதை,எவற்றை,எவ்வாறு
யாரை,எப்படி,எதை
எதை,எப்பொழுது,யாரை
எதை,எவற்றை,யாரை
4. குன்றியவினை வாக்கியம் எது?
முகுந்தன் மழையில் நனைந்தான்.
இராமன் சீதையைக் கண்டான்.
5. குன்றியவினை வாக்கியம் எது?
அம்மா காலையில் சந்தைக்குச் சென்றார்.
தம்பி வீட்டுப்பாடங்களைச் செய்தாள்.
6. குன்றாவினை வாக்கியங்களைத் தேர்ந்தெடுக்கவும்
மாலதி தன் தாய் தந்தையரின் ஆசிர்வாதத்தைப் பெற்றாள்.
நாம் ஒரு நாளைக்குக் குறைந்தது 8 மணி நேரம் உறங்க வேண்டும்.
தம்பி பாம்பைக் கண்டு ஓடினான்.
7. எது குன்றியவினை வாக்கியம் அல்ல?
மன்னர் போரில் வென்றார்
கந்தன் மழையில் நனைந்தான்
நாங்கள் விடுமுறையில் சுற்றுலாவிற்குச் சென்றோம்.
8. எது குன்றாவினை வாக்கியம் அல்ல?
சிறுவர்கள் கதைப்புத்தகங்களை விரும்பிப் படிப்பார்கள்.
காவல்துறையினர் அத்திருடனை வலைவீசி தேடுகின்றனர்.
அப்பா தவறு செய்தால் கடுமையாகத் திட்டுவார்.
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது.
9. குன்றியவினை வாக்கியங்கள் யாவை?
i. ஆசிரியர் கணிதம் போதித்தார்.
ii.காட்டில் மான்குட்டி துள்ளி ஓடியது.
iii.தம்பி பேச்சுப் போட்டியில் வென்றான்.
iv. தேன்மொழி பூங்காவில் விளையாடினாள்.
i,ii
ii,iv
iii,iv
i,iii
10. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
அணில் பழம் சாப்பிட்டது - குன்றியவினை
குழந்தை பசியால் அழுதது -குன்றாவினை
என் பிறந்தநாளுக்கு என் தோழி கடிகாரம் பரிசளித்தாள்- குன்றாவினை
