wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இரட்டைக்கிளவி படிவம் 2

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மேற்காணும் படம் உணர்த்தும் இரட்டைக்கிளவி யாது?

a)

தொணதொன

b)

விறுவிறு

c)

தொணதொண

d)

சடசட

2.

சடசட எனும் இரட்டைக்கிளவியின் மிகச் சரியான பொருள் யாது?

a)

சத்தமான ஓசை

b)

கடுமையான ஓசை

c)

காற்றின் ஓசை

d)

மரக்கிளை முறியும் ஓசை

3.

தொணதொண எனும் இரட்டைக்கிளவியின் மிகச் சரியான பொருள் யாது?

a)

கோவம் உண்டாக்கும்படி ஓயாமல் பேசுவது

b)

வெறுப்பு உண்டாக்கும்படி ஓயாமல் பேசுவது

4.

தங்கை தம்பியுடன் தொணதொன வெனப் பேசிக் கொண்டிருந்ததால் அப்பா அவர்களை அமைதி காக்குமாறு வேண்டினார்.

மேற்காணும் சூழலில் பயன்படுத்தப்பட்டுள்ள இரட்டைக்கிளவி அச்சூழலுக்கு ஏற்புடையதாக அமைந்துள்ளதா?

a)

இரட்டைக்கிளவியின் பயன்பாடு ஏற்புடையதாக அமைந்துள்ளது. ஆனால், இரட்டைக்கிளவியில் எழுத்துப் பிழை உள்ளது. ஆகையால் இந்தச் சூழல் அமைப்பு தவறு என்றே கருத வேன்டும்.

b)

இரட்டைக்கிளவியின் பயன்பாடு ஏற்புடையதாக அமைந்துள்ளது. ஆனால், இரட்டைக்கிளவியில் எழுத்துப் பிழை உள்ளது. இருப்பினும் இந்தச் சூழல் அமைப்பைத் சரி என்று கருத இயலும்.

c)

இரட்டைக்கிளவியின் பயன்பாடு ஏற்புடையதாக அமையவில்லை

5.

மேற்காணும் படத்திற்கேற்ப இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

சடசட

b)

விறுவிறு

c)

தடதட

d)

விடையில்லை

6.

கடுங்காற்று வீசியதால் மாமரத்தின் கிளை சடசடவென முறிந்து விழுந்தது.

மேற்காணும் வாக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள இரட்டைக்கிளவியானது அச்சூழலுக்கு ஏற்புடையதாக அமைந்துள்ளதா?

a)

ஆம்

b)

இல்லை

7.

தொணதொண என்ற இரட்டைக்கிளவி, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்துக் கூற மட்டுமே பயன்படுத்தப்படும்.

இந்தக் கூற்றானது சரியா தவறா?

a)

சரி

b)

தவறு

8.

தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கும் தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் _________________ வென வெளியேறினர்.

மேற்காணும் சூழலுக்கு ஏற்ப இரட்டைக்கிளவி ஒன்றனைத் தெரிவு செய்க.

a)

விறுவிறு

b)

திமுதிமு

c)

சடசட

d)

தொணதொண

9.

கீழ்க்காணும் இரட்டைகிளவியின் பொருள் யாது?

விறுவிறு

a)

விரைவாக

b)

கடுமையான ஓசை

c)

வெறுப்பு உண்டாக்கும்படி ஓயாமல் பேசுவது

d)

பலரோ மிருகங்களோ கூட்டமாகச் செல்லுதல்

10.

வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அமலா, மழை பெய்யத் தொடங்கியதால் வீட்டை நோக்கி ___________ வென நடந்தாள்.

சரியான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

விறுவிறு

b)

திமுதிமு