wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி ஆண்டு 4 உதயன்

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

சான்றோர் கூறிய பண்பாடு எனப்படுவது யாது?

a)

மக்களின் சமூக வாழ்க்கையின் வளர்ச்சி கருதி செயல்படுவதுதான் பண்பாடு என்றனர் சான்றோர்

b)

மக்களின் சமூக வாழ்க்கையின் வளர்ச்சி கருதி , பாங்கு அறிந்து , பெருமை உணர்ந்து , பயன் தெரிந்து ஒழுகும் பண்பைதான் சான்றோர் பண்பாடு என்றனர்.

2.

தமிழ் மன்னர்களின் சிறப்புகளைக் குறிப்பிடுக.

a)

புலவர்களைப் போற்றிப் பரிசளிப்பதே தமிழ் மன்னர்களின் சிறப்புகள் ஆகும்.

b)

புலவர்களைப் போற்றுவதே தமிழ் மன்னர்களின் சிறப்புகள் ஆகும்.

c)

புலவர்களுக்குப் பரிசளிப்பதே தமிழ் மன்னர்களின் சிறப்புகள் ஆகும்.

3.

நமது அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமானது என்ன? ஏன்?

a)

நமது அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமானது உடை ஆகும். நம் மானத்தைக் காக்க உடை மிக அவசியம்.

b)

நமது அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமானது உணவு ஆகும். நாம் உயிர் வாழ உணவு மிக அவசியம்.

c)

நமது அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமானது வீடு ஆகும். நாம் பாதுகாப்பாகத் தங்குவதற்கு வீடு மிக அவசியம்.

4.

பெண்களின் நான்கு குணங்களைப் பட்டியலிடுக?

a)

அச்சம், கோபம், நாணம், பயிர்ப்பு ஆகியவையே பெண்களின் நான்கு குணங்கள் ஆகும்.

b)

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகியவையே பெண்களின் நான்கு குணங்கள் ஆகும்.

c)

அச்சம், மடம், நாணம், விளையாட்டு ஆகியவையே பெண்களின் நான்கு குணங்கள் ஆகும்.

5.

தமிழர்களின் முக்கியத் தொழில்கள் யாவை?

a)

விவசாயம், மாடு மேய்த்தல்,தானியங்கள் சேகரித்தல்

போன்றவையே தமிழர்களின் முக்கியத் தொழில்கள் ஆகும்.

b)

விவசாயம், மாடு வளர்த்தல், பயிரிடுதல்,தானியங்கள் சேகரித்தல்

போன்றவையே தமிழர்களின் முக்கியத் தொழில்கள் ஆகும்.

c)

விவசாயம், மாடு வளர்த்தல், பயிரை விற்றல்,தானியங்கள் சேகரித்தல் போன்றவையே தமிழர்களின் முக்கியத் தொழில்கள் ஆகும்.

6.

நமது பண்பாடு ஏன் காக்கப்பட வேண்டும்?

a)

பண்பாடு நமது அடையாளம் என்பதால் அது காக்கப்பட வேண்டும்.

b)

பண்பாடு காப்பது நமது கடமை என்பதால் அது காக்கப்பட வேண்டும்.

c)

பண்பாடு நமது கண் போன்றது என்பதால் அது காக்கப்பட வேண்டும்.

7.

கீழ்க்காண்பவை தமிழர்களின் திருமணச் சடங்குகள் ஆகும். ஒன்றைத் தவிர.

a)

மஞ்சள் பூசுதல்

b)

குங்குமப் பொட்டு வைத்தல்

c)

தலைப்பாகை அணிதல்

d)

கொலுசு அணிதல்

8.

ஆண்கள் ____________, ______________ அணிந்து கொண்டு பண்பாட்டை நிலைப்படுத்தினர்.

a)

ஜீன்ஸ், சட்டை

b)

வேட்டி, கைக்கடிகாரம்

c)

வேட்டி , சால்வை

9.

"யாதும் ஊரே யாவரும் கேளீர் " எனும் பாடலைப் பாடியவர் யார்?

a)

கணியன் பூங்குன்றனார்.

b)

கவிஞர் வாலி

c)

கவிஞர் வைரமுத்து

10.

ஆள் பாதி, ________ பாதி.

a)

ஆடை

b)

வீடு

c)

கல்வி