NEW
Font size
Worksheetsபண்பு நலன்கள் - குழந்தைவேல்
Total questions: 15
Worksheet time: 4mins
கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?
தான் வாங்கி வந்த காய்கறிகளை வேண்டாமெனக் கூறிய சித்தியின் கோபத்திலிருந்து தானப்பனைக் காப்பாற்ற தன் தாயிடன் கூறி அக்காய்களை எடுத்துக் கொண்டு காசு கொடுத்துவிடுவோமென வழி கூறுகிறான்.
நட்பைப் போற்றுபவன்
உதவும் மனப்பான்மை கொண்டவன்
பெற்றோரைப் போற்றுபவன்
கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?
தந்தைக்குப் பிடிக்காத விசயங்களைச் செய்யத் துணியாததால் தேர்தலில் நிற்கும்படி தானப்பனின் கட்சிக்காரர்கள் வற்புறுத்தியபொழுது மறுக்கிறான்.
நட்பைப் போற்றுபவன்
உதவும் மனப்பான்மை கொண்டவன்
பெற்றோரைப் போற்றுபவன்
கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?
நண்பனின் இல்லற வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள சிக்கலை எண்ணிவருந்துகிறான்; தீர்க்கும் வழி தேடுகிறான்.
நட்பைப் போற்றுபவன்
உதவும் மனப்பான்மை கொண்டவன்
பெற்றோரைப் போற்றுபவன்
கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?
தானப்பனுடன் சேர்ந்து பலவித விளையாட்டுகளை விளையாடுகிறான்.
நட்பைப் போற்றுபவன்
விளையாட்டில் ஆர்வம் கொண்டவன்
பெற்றோரைப் போற்றுபவன்
கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?
மகப்பேற்றுக்குப் பிறகு சுடர்விழியைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால் தன் தாயை உதவி செய்ய வேண்டுகிறான்.
இரக்க மனம் கொண்டவன்
இசை நாட்டம் கொண்டவன்
எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன்
கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?
இரவு உணவுக்குப் பிறகு வீணையை எடுத்து வந்து கொடுத்து எதாவது பாடச் சொல்லி கேட்கிறான்.
இரக்க மனம் கொண்டவன்
இசை நாட்டம் கொண்டவன்
எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன்
கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?
தாய் வீட்டிற்குச் சென்ற பூங்கொடி மீண்டும் தன்னோடு வர மறுத்ததைத் தன் தாயிடம் சொன்னால் அவர் மனம் வருத்தம் கொள்ளுமே என எண்ணி துயரம் தாளாது அழுகிறான்
இரக்க மனம் கொண்டவன்
இசை நாட்டம் கொண்டவன்
எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவன்
கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?
இரயில் பயணத்திற்குத் தானப்பன் முதல் வகுப்பு டிக்கெட் வாங்கியதை வீண் செலவு எனக் கூறுகிறான்.
இரக்க மனம் கொண்டவன்
ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவன்
அரசியலில் நாட்டம் இல்லாதவன்
கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?
தேர்தலில் உதவி செய்யுமாறு தானப்பன் வேண்டிய பொழுது உறுதியாய் மறுக்கிறான்
ஒழுக்கத்தைப் போற்றுபவன்
ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவன்
அரசியலில் நாட்டம் இல்லாதவன்
கீழ்க்காணும் கூற்றுகள் குழந்தைவேலுவின் எந்த பண்பு நலத்தைக் குறிக்கிறது?
தானப்பன் நீட்டிய சிகரெட் பெட்டியை வேண்டாமென மறுக்கிறான்.
ஒழுக்கத்தைப் போற்றுபவன்
ஆடம்பர வாழ்க்கையை விரும்பாதவன்
அரசியலில் நாட்டம் இல்லாதவன்
குழந்தைவேலிடம் காணப்படும் பண்புநலத்தைத் தேர்ந்தெடு.
முரட்டுக்குணம் கொண்டவன்
தமிழ்ப்பற்றுக் கொண்டவன்
உடன்பிறப்புகளின் மேல் பாசம் கொண்டவன்
குழந்தைவேலிடம் காணப்படும் பண்புநலத்தைத் தேர்ந்தெடு.
கல்வியில் அக்கறை கொண்டவன்
போராட்டங்களைத் துணிவுடன் எதிர்கொள்பவன்
சுயகாலில் நிற்க விரும்புபவன்
குழந்தைவேலிடம் காணப்படும் பண்புநலத்தைத் தேர்ந்தெடு.
பேராசை மிகுந்தவன்
போராட்டங்களைத் துணிவுடன் எதிர்கொள்பவன்
பிறர் நலத்தில் அக்கறை கொண்டவன்
குழந்தைவேலிடம் காணப்படும் பண்புநலத்தைத் தேர்ந்தெடு.
பேராசை மிகுந்தவன்
அரசியலில் நாட்டம் இல்லாதவன்
வாசிப்புப் பழக்கம் உடையவன்
குழந்தைவேலிடம் காணப்படும் பண்புநலத்தைத் தேர்ந்தெடு.
இசை நாட்டம் கொண்டவன்
வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்பவன்
வாசிப்புப் பழக்கம் உடையவன்