wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் & இலக்கியம் புதிர்க் கேள்விகள்-பகுதி 2

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கேமரன் மலைக்குச் செல்லும் வழியில் மரங்கள் ____________ வென சரிந்து விழுந்தன.

a)

தரதர்

b)

மளமள

c)

மடமட

2.

இப்படம் உணர்த்தும் ஆத்திசூடி யாது?

a)

ஐயமிட்டுண்

b)

ஏற்பது இகழ்ச்சி

c)

ஒப்புர ஒழுகு

d)

ஊக்கமது கைவிடேல்

3.

சரியான இணையைக் கண்டறிக

a)

ஏறுபோல நட

b)

ஐம்பொறி தவிர்

c)

ஒற்றுமை திறன்

4.

திரு கணேசன் விசாரிக்காமல் பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார்.


கொடுக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்வு செய்க.

a)

புத்திமான பலமான்

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

c)

வெள்ளம் வருமுன் காலை விடாதே

5.

இப்படம் உணர்த்தும் உலகநீதியைத் தேர்ந்தெடுக.

a)

போகாத விடந்தனிலே போக வேண்டாம்

b)

தருமத்தை யொருநாளும் மிருக்க வேண்டாம்

c)

ஓதாம லொருநாளும் மறக்க வேண்டாம்

6.

நாம் பிழையற பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பாகும்.


மேற்கண்ட பொருளுக்கேற்ற வெற்றி வேற்கையைக் கண்டறிக.


a)

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

b)

கல்விக் கழகு கசடற மொழிதல்

c)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

d)

பெருமையும் சிறுமையும் தான் தர வருமே

7.

இப்படம் உணர்த்தும் இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

அல்லும் பகலும்

b)

தாயும் சேயும்

c)

நன்மை தீமையும்

8.

கொடுக்கப்பட்ட திருக்குறளின் இரண்டாம் அடியைத் தெரிவு செய்க.


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதென்றும்

_________________________________________________________

a)

எழுமையும் ஏமாப் புடைத்து

b)

மாடல்ல மற்றை யவை

c)

தீமை இலாத சொலல்

9.

அடக்க முடையா __________________ றெண்ணிக்

கடக்க __________ வேண்டா- மடைத்தலையில்

ஓடுமீ னோட உறுமீன் __________________________

வாடி யிருக்குமாங் கொக்கு.

a)

ரறிவிலரென்,கருதவும்,வருமளவும்

b)

வருமளவும்,ரறிவிலரென்,கருதவும்

c)

கருதவும்,வருமளவும்,ரறிவிலரென்

10.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


மருத்துவமனையில் இருந்த தன் தாயார் மரணமுற்ற செய்தியைக் கேட்ட வாணி ____________துடித்துடித்துப் போனாள்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

அனலில் இட்ட மெழுகு போல

c)

காட்டுத் தீ போல

d)

இலைமறை காய் போல

11.

'நேற்று கடலுக்குச் சென்ற உல்லாசக் கப்பல் காணாமல் போய்விட்டது' என்று கடல்காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.

a)

செய்தி

b)

கட்டளை

c)

உணர்ச்சி

d)

வேண்டுகோள்

12.

மாணவர்களாகிய நீங்கள் நூல்நிலையத்தின் சட்ட விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் புத்தகங்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். புத்தகங்களைத் தொலைக்கவோ கிழிக்கவோ கூடாது.

a)

கட்டளை

b)

வேண்டுகோள்

c)

உணர்ச்சி

d)

வினா

13.

தனது ___________ போன வீட்டை எண்ணி திருமலை மிகவும் கவலை கொண்டார்.

a)

எரிந்து

b)

எரியும்

c)

எரிந்த

d)

எரிந்து கொண்டிருக்கிற

14.

தமிழ் மக்கள் காளை மாட்டை ____________ வீர விளையாட்டை நடத்தினார்கள்.

a)

அடக்கி

b)

அடக்கிய

c)

அடக்கும்

d)

அடக்கி கொண்டிருக்கிற

15.

இங்குள்ள சங்கிலிகளில் _________ சங்கிலி உனக்கு பிடிக்கிறது என்று மலர்விழியின் தந்தை கேட்டார்.

a)

எது

b)

எவை

c)

எந்த

d)

எதற்கு

16.

எதிர்காலத்தில் சிறந்த நல்வாழ்க்கையைப் பெற நன்றாகக் கல்வி பயிலுங்கள். __________ ஒளிமயமான எதிர்காலம் அமையாது

a)

ஆகவே

b)

இல்லையென்றால்

c)

ஆனால்

d)

லிருப்பினும்

17.

" ___________ அனைவரும் ஒவ்வொரு நாளும் பள்ளியில் பயிலும் பாடங்களை மீள்பார்வை செய்ய வேண்டும்.அப்பொழுதுதான் சிறந்த தேர்ச்சியைப் பெற முடியும்" என்றான் மணிசேகர்.

a)

நாங்கள்

b)

அவர்கள்

c)

நீங்கள்

d)

தாங்கள்

18.

__________ சுற்றுப்புறத் தூய்மையில் கவனம் செலுத்துவேன். ___________ என்னை அனைவரும் பாராட்டுவர்.

a)

நாங்கள்- அதனால்

b)

நான் -அதனால்

c)

நம்- ஆனால்

d)

நீங்கள்-ஆயினும்

19.

உத்தமன் _________ அப்போட்டியில் வெற்றி பெற்றான்.

a)

தான்

b)

தன்

c)

உம்

d)

தம்

20.

கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்தக் கட்டட வேலை நேற்றுதான் ______________

a)

முடிவடையும்

b)

முடியும்

c)

முடிவடைந்தது

d)

முடிவடைகிறது

21.

நான் இன்று உன்னோடு வரமுடியாது.________ என் அப்பா என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவிருக்கின்றார்.

a)

ஆனால்

b)

ஆகையால்

c)

ஏனென்றால்

d)

ஆகவே

22.

_______ மின்சாரம், பூமிக்குப் பாயும் போது காற்றைக் __________ கொண்டு செல்கிறது.

a)

மேகத்திலிருந்து............கிழித்துக்

b)

மேகத்தை.............கிழிந்து

c)

மேகம் ............. கிழிய

d)

மேகத்துடன்................கிலித்துக்

23.

அனாதை என்று வந்த அச்சிறுவனை அம்முதியவர் ஆதரித்து ____________ஆனால் இப்பொழுது அவன் சொல்லிக் கொள்ளாமல் வேறிடத்திற்குப் _________________

a)

வந்தேன்.............போனேன்

b)

வந்தார் ...........போனான்

c)

வருவேன்...........போவேன்

d)

வருவார்..........போவான்

24.

கீழ்க்காண்பனவற்றுள் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

விவசாயிகள் தாங்கள் பயிர்செய்த நெல்லை விற்றான்.

b)

பரமேஸ்வரி தன் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடியது.

c)

நேற்று என் அண்ணன் மேற்படிப்பைத் தொடர இந்தியாவிற்குப் புறப்பட்டார்.

d)

என் தங்கை பந்தை விளையாடினான்.

25.

கீழ்க்காண்பனவற்றுள் சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.

b)

குயில்கள் இனிமையாகப் பாடியது.

c)

புலிகள் மானை விரட்டியது.

d)

பறவைகள் விண்ணில் பறந்தார்கள்.

26.

கீழ்க்காண்பனவற்றுள் பிழையுள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

செங்கல் செய்வதற்குக் களிமண் தேவை.

b)

எங்கள் பள்ளி நூலகத்தில் அதிகமான நூல்கள் உள்ளன.

c)

அமிழ்தினும் இனியது தமிழ்மொழி.

d)

பலவகையான ஆற்றல்கள் நம்முள் நிரம்பிக் கிடக்கிறது.

27.

நேர்கூற்றுக்குப் பொருந்தும் அயற்கூற்று வாக்கியம் எது?


"வள்ளி! தேநீர் கொண்டு வா" என்றார் அப்பா.

a)

அப்பா கொண்டு வா தேநீர் என்றார்.

b)

அப்பா வள்ளியைத் தேநீர் கொண்டு வரச் சொன்னார்.

c)

அப்பா வள்ளிக்குத் தேநீர் கொண்டு வரக் சொன்னார்.

d)

அப்பா தேநீர் கொண்டு வா வள்ளிக்கு என்றார்.

28.

போட்டியில் வெற்றி பெற்ற ___________ பரிசு வழங்கப்பட்டது.

a)

கண்ணகியின்

b)

கண்ணகியுடைய

c)

கண்ணகி

d)

கண்ணகிக்கு

29.

"இன்னும் சில வினாடிகளில் நாம் கடற்கரைக்குச் செல்லவிருக்கிறோம். __________ அனைவரும் தயாராகுங்கள்" என்றார் ஆசிரியர்.

a)

எனினும்

b)

ஏனென்றால்

c)

ஆனால்

d)

ஆகவே

30.

"உனக்கு உடல்நிலை சரியில்லை. __________ நீ வெளியில் எங்கும் செல்ல வேண்டாம்", என்றார் அண்ணன்.

a)

ஆனால்

b)

ஏனென்றால்

c)

இருப்பினும்

d)

ஆகவே