NEW
Font size
WorksheetsTamil Vocabulary and Idioms
Total questions: 30
Worksheet time: 15mins
சரியான பொருளைக் கொண்ட இணைமொழியைத் தெரிவு செய்க.
மூலை முடுக்கு – கொடை தருதல்
பழக்க வழக்கம் – எல்லா இடத்திலும்
வரவு செலவு – வருமானமும் செலவினமும்
தான தரம் – தொடர்ந்து பின்பற்றப்பட்டு வரும் நடைமுறை
கீழ்க்காணும் பொருளுக்கேற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
நல்லவன் போல் நடிக்கும் தீய குணம் உள்ளவன்
அனலில் இட்ட மெழுகு போல
குடத்திலிட்ட விளக்குப் போல
சூரியனைக் கண்ட பனி போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
படத்திற்கு ஏற்ப சரியான இடைக்க்கிளவியைத் தெரிவு செய்க.
சிடுசிடு
மினுமினு
பளீர்பளீர்
பளார்பளார்
வாக்கியத்திற்குப் பொருந்தும் சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
முகிலன் தீய நண்பர்களுடன் சேர்ந்துப் போதைப்பொருளுக்கு அடிமையானான். இதனை கேள்விப்பட அவனின் அப்பா ____________________.
கை கழுவினார்
ஆழம் பார்த்தார்
தலை குனிந்தார்
எடுப்பார் கைப்பிள்ளை
கீழ்க்காணும் பழமொழியை நிறைவு செய்க.
______________ தூண்டுகோள் தேவை .
தனிமரம்
பதறாத காரியம்
சுடர் விளக்காயினும்
கரைப்பார் கரைத்தால்
கொடுக்கப்பட்ட செய்யுள் அடியின் பொருளைத் தெரிவு செய்க.
கல்லார்க்கும் கற்றவர்க்கும் ……..........
மனிதர், தேவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் நல்லதைத் தருகின்ற கருணையானவன் இறைவன்.
கற்றவர், கல்லாதவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் இன்பத்தைத் தருகின்ற பேரின்பமானவன் இறைவன்.
தன்னை உணர்ந்தவர்களுக்கும் உணராதவர்களுக்கும் வேறுபாடின்றி அகக்கண்களை கொடுக்கின்ற அருட்கண்ணாளன் இறைவன்.
வலிமையுள்ளவர், வலிமையற்றவர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லார்க்கும் கேட்பவற்றைத் தந்தருள்பவன் இறைவன்.
சூழலுக்கு ஏற்ற செய்யுளின் முதல் அடியைத் தெரிவு செய்க.
மாணவன் யாஷ்வன் அனைத்துலகப் பூப்பந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்றான். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் அப்பள்ளிக்குப் பூப்பந்தாட்ட அரங்கினைக் கட்டிக் கொடுத்தனர். இன்று அப்பள்ளி மாணவர்கள் அனைவரும் பயனடைகின்றனர்.
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்...
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்...
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை..
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்...
கொடுக்கப்பட்ட சொற்களுக்குத் தொடர்புடைய செய்யுளைத் தெரிவு செய்க.
சந்திரன்
இருட்டு
துன்பம்
பிறர் நலம்
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
வாக்கியத்தில் கருமையாக்கப்பட்டுள்ள சொற்றொடரின் இலக்கணக் கூறு யாது ?
நெடுஞ்சாலை நேரான பாதை என்பதால் வாகன ஓட்டுனர் வேகமாகச் செல்லக் கூடாது.
பெயரடை
வினையடை
பெயரெச்சம்
வினையெச்சம்
பின்வரும் வாக்கியங்களில் வினையடையை ஏற்றிருக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.
பெற்றோர்கள் மகிழ்ச்சியான குடும்பத்தை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளனர்.
மலேசியாவில் மிக உயரமான மலைச் சிகரம் கினபாலு சிகரம் ஆகும்.
சாலையைக் கவனமாகக் கடக்க வேண்டும்.
திரு.அமரன் அழகான வீட்டை வாங்கினார்.
பெயரெச்சத்தைக் கொண்ட சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
பாடிய புலவர்
கற்று முடித்தான்
திறமையான வீரன்
இனிமையாகப் பாடினான்
சேர்த்தெழுதுக
தீ + பொறி
தீ பொரி
தீ பொறி
தீப்பொரி
தீப்பொறி
சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அப்பா தாமதமாக வீடு போய் சேர்ந்தார்.`
கவிதா மேடையில் இனிமையானப் பாடல் பாடினாள்.
மாணவர்கள் குழு வேலைகளில் ஒற்றுமையாய் செயல்பட்டனர்.
பசியுடன் வீடு திரும்பிய அண்ணன் அம்மாவிடம் கடுகடுவெனப் பேசினார்.
வலிமிகா இலக்கண விதிக்கு ஏற்ற சொற்றொடரைத் தெரிவு செய்க
பூக்கடை
அறிந்து கொள்
போய் செய்தான்
மென்றுத் தின்றான்
கீழ்க்காணும் வாக்கியம் விளக்கும் சரியான இலக்கண விதி யாது?
அம்மா சுவையான முறுக்குகளை அண்டை வீட்டாருக்குக் கொண்டு சென்றார்.
ஆய், போய், என, ஆக என்று முடியும் வினையெச்சங்களுக்குப் பின் வலிமிகும்.
ண்டு, ய்து என முடியும் வினையெச்சங்களுக்குப் பின் வலிமிகாது.
அன்று, இன்று, என்று என்பனவற்றுக்குப் பின் வலிமிகாது.
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகும்.
கீழ்காணும் பொருளுக்கேற்ற இணைமொழியைத் தெரிவு செய்க:
கொடை தருதல்
பழக்க வழக்கம்
தான தர்மம்
ஒளிவு மறைவு
பேரும் புகழும்
கீழ்க்காணும் உவமைத்தொடரில் விடுபட்ட சொல் யாது?
பசுத்தோல் போர்த்திய ________________ போல
தவளை
காளை
மான்
புலி
சரியான இணையைத் தேர்வு செய்க.
பளார்பளார்
சாட்டையால் அடிக்கும்போது ஏற்படும் ஒலி
பளீர்பளீர்
சினக்குறிப்புக் காட்டுதல்
மினுமினு
விட்டு விட்டுப் பிரகாசத்துடன் ஒளிர்தல்
சிடுசிடு
கன்னத்தில் தொடர்ச்சியாய் விழும் அறை
கீழ்க்காணும் வாக்கியத்திற்கு ஏற்ற மரபுத்தொடரை தெரிவு செய்க.
தொழில்நுட்பதைச் சிறப்புறக் கற்ற விமலன் பல புதிய உருவாக்கங்களை உருவாக்கிப் பலரின் பாராட்டுகளைப் பெற்றான்.
ஈடு கட்டுதல்
கை கழுவுதல்
கரை கண்டவர்
வெளுத்து வாங்குதல்
கீழ்க்காணும் பழமொழியில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.
முன் வைத்த _________ பின் வைக்காதே.
விரலைப்
காலைப்
கையைப்
தலையைப்
பின்வரும் பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
எதை அடக்கியாளாவிட்டாலும் நாக்கை அடக்கியாள வேண்டும். அவ்வாறு அடக்கியாளாவிட்டால் குற்றமான சொல்லைப் பேசித் துன்பப்படும் நேரிடும்.
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
கீழ்க்காணும் கவிதைக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.
பூமி செழிக்க நீ வேண்டும்!
வறட்சியைப் போக்க நீ வேண்டும்!
என்னைப் போன்ற விவசாயிகளுக்கு நீ வேண்டும்!
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
வெற்றி வேற்கையின் பொருளைத் தெரிவு செய்க.
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.
எத்தகைய வறுமை நிலையிலும் சாப்பிடுவதை விடலாகாது
எத்தகைய வறுமை நிலையிலும் பேசுவதை விடலாகாது.
எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடலாகாது.
Aஎத்தகைய வறுமை நிலையிலும் விளையாடுவதை விடலாகாது.
வினையடையைக் கொண்ட சொற்றொடரைத் தெரிவு செய்க.
எழுதிய கவிதை
உயரமான மலை
வேகமாக ஓடினான்
விளையாடி மகிழ்ந்தாள்
சரியான இலக்கண விதியை எற்று வந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
அறிந்துக் கொண்டான்
வருவதாய் கூறினான்
போய் பார்த்தான்
எனப் பேசினான்
பெயரெச்சத்தை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கழுகு வானத்தில் வட்டமிட்டுப் பறந்தது.
பீமன் தன் தாயை வாழ்த்தி வணங்கினான்.
அக்காள் கீரையைத் தண்ணீரில் கொட்டி அலசினார்.
வானத்தில் பறந்த புறாவை அனைவரும் பார்த்தனர்.
கீழ்க்காணும் காலியிடத்திற்கு ஏற்ற வினையெச்சத்தைத் தெரிவு செய்க.
சுவையான உணவுகள் அனைத்தையும் அம்மா _____________ முடித்தார்.
சமைத்து
உண்டு
விற்று
வீசி
சரியாக வலிமிகுந்துள்ள சொற்றொடரைத் தெரிவு செய்க.
கைதுச் செய்தனர்
மறந்துப் போனேன்
சென்றுக் கண்டேன்
சோகமாய்ப் பேசினார்
ஓரெழுத்து ஒரு சொல்லுக்குப் பின் வலிமிகும் விதியைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நான் பூக்கடைக்குச் சென்று பூக்கள் வாங்கினேன்.
நேற்று நடந்த அத்தீவிபத்தில் பலர் பாதிப்படைந்தனர்.
பூங்காவில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கி மணம் வீசின.
செடிகளுக்குப் போதிய அளவு நீரும் சூரிய ஒளியும் உரமும் தேவை.
வலிமிகா இலக்கண விதிக்கு ஏற்ற சொற்றொடரைத் தெரிவு செய்க.
வென்று குவித்தான்
அத்துணை பேர்
அப்படி சொல்
அங்கு பார்
