Worksheetsகாலங்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
நேற்று சிறுவர்கள் குளத்தில் நீந்தி ________________.
மகிழ்கிறார்கள்
மகிழ்ந்தனர்
மகிழ்ந்தான்
மாணவர்கள் தேசிய கீதத்தை உற்சாகத்துடன் ________________________.
பாடுகின்றன
பாடுகின்றனர்
பாடினான்
திடலில் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்கள் மழை பெய்ய தொடங்கியதும் வீட்டிற்கு ___________________.
ஓடினர்
ஓடுவர்
ஓடுவான்
நாம் வாழும் பூமியில் பல உயிரினங்களும் ______________________.
வாழும்
வாழ்ந்தன
வாழ்கின்றன
சிங்கபூரில் வேலை செய்யும் அப்பா அடுத்த மாதம் வீடு __________________.
திரும்பினார்
திரும்புகிறார்
திரும்புவார்
பறவைகள் வானில் சிற்க்கடித்துப் ___________________.
பறந்தது
பறக்கின்றது
பறந்தன
நர்மதா புத்தகங்களை இரவல் வாங்க நூல்நிலையத்திற்குச் ____________________.
செல்கிறாள்
செல்வர்
சென்றான்
அடுத்த ஆண்டு நாங்கள் ஆறாம் ஆண்டில் ______________________.
பயின்றோம்
பயில்கிறோம்
பயில்வோம்
செழிலன் கடந்த விடுமுறையைப் பயனான வழியில்
________________________.
கழிப்பான்
கழித்தான்
கழிக்கிறான்
இளவரசனின் தேர்க்கால் பட்டு பசுவின் கன்று _____________________.
இறக்கும்
இறக்கிறது
இறந்தது.
மாற்றுத் திறனாளியான அப்பெரியவர் சிறிய அளவிலான வியாபாரம் _____________________.
செய்கிறார்
செய்தனர்
செய்வார்கள்
துளசி அம்மா வேக வைத்த பருப்பை மத்துக் கட்டையால் _________________.
கடைந்தான்
கடைகிறாள்
கடைக்கின்றனர்
பாரதிதாசன் பல இலக்கிய நூல்களைப் __________________.
படைக்கிறார்
படைத்துள்ளார்
படைப்பார்
அன்பழகன் துன்பத்தில் வாடிய நண்பனுக்குப் பணம் கொடுத்து ____________________.
உதவுவான்
உதவினான்
உதவி செய்வான்
வரவேற்பறையில் அமர்ந்திருக்கும் தாத்தா தொலைகாட்சியில் ஒளிப்பரப்பட்ட செய்திகளைப் __________________.
பார்க்கிறார்
பார்த்தார்
பார்ப்பார்
