wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

சிலை மேல் எழுத்துப் போல

a)

மனதில் அழியாமல் பதிந்திருப்பது

b)

மிகவும் பாதுகாப்பாக

c)

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

2.

கண்ணினைக் காக்கும் இமை போல

a)

மனதில் அழியாமல் பதிந்திருப்பது

b)

மிகவும் பாதுகாப்பாக

c)

ஒரு செய்தி விரைவாகப் பரவுதல்.

3.

திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து பிறந்த தங்கள் பிள்ளையைக் _______________________________காத்து வந்தனர் திரு.குமுதன் தம்பதியினர்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

4.

கபிலன் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தாலும், வெளிநாட்டில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு அவன் தாயகம் திரும்பும் செய்தி __________________ ஊரெங்கும் பரவியது.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

5.

வளர்ந்து வரும் நாடுகளிடையே, நம் நாட்டின் ஒற்றைக் கோபுரமும் இரட்டை கோபுரமும் மலேசியர்களின் திறமையை ___________ மிளிரச் செய்துள்ளன.

a)

இலைமறைக் காய் போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

வேலியே பயிரை மேய்ந்தது போல

d)

சூரியனைக் கண்ட பனி போல

6.

இலைமறைக் காய் போல என்ற உவமைத்தொடருக்கு எதிரான பொருள் தரும் உவமைத்தொடர் யாது?

a)

பசுத்தோல் போர்த்திய புலி போல

b)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

c)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

d)

அனலில் இட்ட மெழுகு போல

7.

கீழேயுள்ள படங்களில் ஒரு பொருள் சேதமடைவதைத் தடுக்க முடியாமை என்பதை விளக்கும் உவமைத்தொடருக்குத் தொடர்புடைய படம் எது?

a)
b)
c)
d)
8.

____________ இருந்த மாலதியும் ரேவதியும் சிறு பிரச்சனையால் இன்று ______________ ஆகிவிட்டனர்.

a)

நகமும் சதையும் போல, எலியும் பூனையும் போல

b)

எலியும் பூனையும் போல, நகமும் சதையும் போல

c)

நகமும் சதையும் போல, மலரும் மணமும் போல

d)

எலியும் பூனையும் போல, மலரும் மணமும் போல

9.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க


காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

வேலியே பயிரை மேய்வது போல

c)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

d)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

10.

இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய மனிதக்குலமே அதன் அழிவுக்குக் காரணமாகி இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று.

a)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

b)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

c)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

d)

தூண்டில்காரனுக்குத் தக்கைமேல் கண் போல

11.

பார்வை இழந்து, சிரமப்பட்ட மஸ்லான் கண் தானம் பெற்று உலகை இரசித்தார். அவரது கவலைகள் யாவும் ________________ மறைந்தன.

a)

இலைமறை காய் போல

b)

காய்மறை இலை போல

c)

சூரியனைக் கண்ட பனி போல

d)

மழையைக் கண்ட பனி போல

12.

விளக்கத்திற்கு ஏற்ற உவமைத்தொடர் யாது?


சிறுவயதில் என் ஆசிரியர் கூறிய சில அறிவுரைகள் இன்னமும் என் மனத்தினின்று நீங்காமல் பதிந்திருக்கின்றன.

a)

காட்டுத் தீ போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

மலரும் மணமும் போல

d)

சிலை மேல் எழுத்து போல

13.

பெற்றோர் தங்கள் பிள்ளைகள் அனைவரையும் _________ பாதுகாத்து வருவதைக் கடமையாகக் கொண்டவர்கள்.

a)

சிலை மேல் எழுத்துப் போல

b)

கண்ணினைக் காக்கும் இமை போல

c)

காட்டுத் தீ போல

14.

இவற்றில் எது உவமைத்தொடர்?

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

ஆழம் அறியாமல் காலை விடாதே

15.

அஸிஸுல் அஸ்னி அவாங் தனது அயாராத உழைப்பால் ஒலிம்பிக் 2021-ல் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரின் இத்திறமையை உலக மக்கள் அனைவரும் அறிந்தனர்.

மேற்காணும் வாக்கியம் குன்றின் மேலிட்ட விளக்குப் போல எனும் உவமைத் தொடருக்குப் பொருந்தும்

a)

சரி

b)

பிழை