wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL FRM 2

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

குழந்தைகள் எப்பொழுதும் எவ்விதக்

கவலையும் இல்லாமல் __________________ மகிழ்ந்து இருப்பர்.

a)

வாடி வதங்கி

b)

ஆடிப்பாடி

2.

மோகன்

:

அந்த பிச்சைக்காரரைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் அருவறுப்பாய்

உள்ளது சாந்தி.

சாந்தி

:

நீ சொவ்வது தவறு மோகன். நாம் ஒருவருரிடம் பழகும்போது

எவ்வித பாகுபாடும் பார்க்கக் கூடாது.

மேற்காணும் சூழலுக்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

கள்ளங் கபடு

b)

உயர்வு தாழ்வு

3.

ஆசிரியர் வகுப்பில் பாடம் போதிக்கப்படும்போது முழு கவனம் செலுத்தியதால், அன்றைய கணிதப்பாடம் _________________________________ மனதில் பதிந்ததாக மாதவன் உணர்ந்தான்.


a)

பசுமரத்தாணி போல

b)

மணியும் ஒலியும் போல

4.

உள்ளங்கை நெல்லிக்கனி போல


மேற்காணும் உவமைத்தொடருக்கு ஏற்ற பொருத்தமான பொருளை அடையாளம் காண்க


a)

ஒன்றைப் பற்றி மிகவும் தெளிவாகத் தெரிதல்

b)

ஒன்றைப் பற்றி மேலோட்டமாக மட்டும் தெரிந்து கொள்ளுதல்

5.

ஆசிரியர் : யாரைப் பார்க்க இவ்வவளவு

அவசர அவசரமாகச் செல்கிறாய்

ரமணா?

மாணவன் : மன்னிக்க வேண்டும் ஐயா. நான்

உங்களைப் பார்க்கத் தான்

சென்றுக் கொண்டிருந்தேன். நீங்களே

எதிரில் வருகிறீர்கள்.

மகிழ்ச்சி.

மேற்காணும் சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரை

தெரிவு செய்க.

a)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

b)

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த்தது போல

6.

இக்கால இளையோர் ______________________ பேசியே தங்கள் பொன்னான பொழுதைக் கழித்து வருவது மன வருத்தத்தை

அளிக்கிறது.

a)

வெட்டிப் பேச்சு

b)

அரைப்படிப்பு

7.

அம்பு எறியும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற சுரேஸின் வெற்றிச் செய்தியைக் கேட்டு அவரது பெற்றோர்கள் பெரு மகிழ்ச்சி அடைந்தனர்.


-மலேசிய நண்பன்


மேற்காணும் நாளிதழ் செய்தியில் ந்தனர்.கருமையாக்கப்பட்ட சொற்களுக்குத் தொடர்புடைய மரபுத்தொடரை அடையாளம் காண்க.

a)

உச்சிக் குளிர்தல்

b)

எள்ளளவும்

8.

பாட்டு வாங்குதல்


மேற்காணும் மரபுத்தொடரின் பொருளைத் தெரிவு செய்க.

a)

துணையாக இருத்தல்

b)

திட்டப்படுதல்

9.

ஆசிரியர் கற்பித்த செய்யுளடிகளை மாணவன் ______________________என ஒப்புவித்தான்.

மேற்காணும் வாக்கியத்திற்குப் பொருந்தி

வரும் இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

சிகிடுகிடு

b)

கடகட

10.

வீட்டிற்கு வரும் உறவினரை _____________________ மலர வரவேற்பது தமழர்களின் உயரிய பண்பாடாகும்.

a)

அகமும் புறமும்

b)

உயர்வு தாழ்வு