wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Pendidikan Moral Tahun 4

Total questions: 30

Worksheet time: 3600secs

Name
Class
Date
1.

சரவாக் மாநிலத்தில் வாழும் கடாசான், பூர்வீகக் குடிமக்களால் கொண்டாடப்படும் பண்டிகை என்ன?

a)

தாடாவ் கெஅமாத்தான்

b)

அறுவடை திருநாள்

c)

விசாக தினம்

2.

இந்து மதத்தினரின் வழிப்பாட்டித் தளத்தில் செய்யக்கூடாதது எது?

a)

பாரம்பரிய உடை அணிந்து செல்வது

b)

காலணியுடன் உள்ளே நுழைவது

c)

இறைவனை அமைதியாக வணங்குவது

3.

இந்து மதத்தை சேர்ந்த நம் அண்டை அயலார்கள் பால் குடம் எடுப்பதற்கான காரணம் என்ன?

a)

மற்ற செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்பதற்காக

b)

அவர்களுக்கு பேரும் புகழும் கிடைக்கும்

c)

தாங்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பதற்காக

4.

அண்டை அயலாரின் வழிப்பாட்டு முறைகளையும் நம்பிக்கைகளையும் நான் இவ்வாறு மதிப்பேன்.

a)

பல காரணங்கள் கூறிச் செல்லமாட்டேன்

b)

அழைப்பை ஏற்றுச் செல்வேன்.

c)

பல காரணங்கள் கூறிச் செல்லமாட்டேன்

5.

அண்டை அயலாருக்கு நன்மனதுடன் உதவுவதால் உனக்கு என்ன நன்மை கிட்டும்?

a)

எனக்கு பேரும் புகழும் கிட்டும்

b)

நான் பெருமையாக எல்லாரிடமும் சொல்லிக் கொள்வேன்

c)

எனக்கு மகிழ்ச்சியையும், என் பெற்றோருக்கு நற்பெயரும் பெற்றுத் தரும்

6.

உன் அண்டை வீட்டார் நோன்பு பெருநாளைக் கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் சென்று விட்டனர். நீ ஆற்ற வேண்டிய கடமை என்ன?

a)

நான் எந்த உதவியும் செய்ய மாட்டேன்

b)

நான் அவர்களின் இல்லத்தின் பாதுகாப்பை உறுதி செய்வேன்

c)

நான் அவர்களின் அனுமதியின்றி பொருளை பயன்படுத்துவேன்

7.

அயலாரிடையே நன்மனத்தைக் காட்டும் நடவடிக்கை என்ன?

a)

அக்கம் பக்கத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைக்க உதவுவது.

b)

அண்டை வீட்டாரின் அனுமதியின்றி அவரது பொருளை பயன்படுத்துவது

c)

அண்டை வீட்டாரின் அனுபதியின்றி அவரது மகனை வெளியே அழைத்துச் செல்வது.

8.

உன் அண்டை வீட்டுச் சிறுவன் கீழே விழுந்து காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவனின் பெற்றோர் அந்நேரம் வீட்டில் இல்லை. நீ என்ன செய்வாய்?

a)

அவனின் பெற்றோர் வரும்வரை காத்திருக்க சொல்வேன்

b)

நான் அவனுக்கு முதலுதவி செய்வேன்

c)

நமக்கு ஏன் வம்பு என நினைத்துக் கொள்வேன்

9.

உன் நண்பன் வீட்டின் முன்புறம் மரம் ஒன்று விழுந்து இடையூறாக இருக்கிறது. நீ அவனுக்கு எப்படி உதவி செய்வாய்?

a)

அதனால் நமக்கு என்ன நன்மை என்று இருந்து விடுவேன்

b)

மற்ற நண்பர்களின் உதவியுடன் கூட்டுப்பணி செய்வேன்

c)

மனமகிழ்ச்சி அடைவேன்

10.

அண்டை அயலாருடன் கடமையுணர்வோடு நடப்பதன் முக்கியத்துவம் என்ன?

a)

ஒற்றுமையுணர்வு குறையும்

b)

புரிந்துணர்வு இருக்காது

c)

நட்பை வளர்க்கலாம்

11.

கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்திட்ட அண்டை வீட்டு நண்பனுக்கு நன்றி கூறுவது அவசியம்..ஏன் ?

a)

அது நட்பையும் வெறுப்பையும் வளர்க்கும்

b)

அது நட்பையும் பாசத்தையும் வலுப்படுத்தும்

c)

அது நட்பையும் பொறாமையும் உண்டாக்கும்

12.

நன்றியின்மையால் ஏற்படும் விளைவுகள்

a)

பரிவு ஏற்படும்

b)

நம்பிக்கை இருக்காது

c)

மனநிம்மதி ஏற்படும்

13.

அம்மா மருத்துவமனையில் இருந்த போது திருமதி ஹானிம் எங்களை அன்புடன் கவனித்துக் கொண்டார்.

a)

அவருக்கு நன்றி கூறி வாழ்த்து அட்டை அனுப்பினேன்

b)

எதுவும் செய்யவில்லை

c)

அம்மா மட்டும் அவருக்கு நன்றி கூறினார்.

14.

குடியிருப்புக்கழகம் ஏற்பாடு செய்யும் துப்புரவுப் பணியில் ______________ கலந்துக் கொள்ள வேண்டும்.

a)

நன்றி உணர்வுடன்

b)

ஒற்றுமை உணர்வுடன்

c)

பொறாமை உணர்வுடன்

15.

அண்டை அயலாரிடம் உயர்வெண்ணத்தைக் கடைப்பிடிப்பதனால் என்ன நன்மை ஏற்படும் ?

a)

நம்மிடையே நல்லுறவு வளரும்

b)

ஒற்றுமை வளராது

c)

நம்மிடம் அன்பாக பழக மாட்டார்

16.

வயதில் மூத்த அண்டை அயலாரைக் கண்டதும் ________________ கூறுவது சிறப்பு.

a)

மன்னிப்பு

b)

வணக்கம்

c)

வாழ்த்து

17.

அண்டை அயலாரிடையே நல்லுறவை ஏற்படுத்தும் செயல்கள் யாவை?

a)

பிற சமயத்தவரின் பண்பாடுகளை மதித்தல்

b)

அண்டை அயலாரைக் கண்டும் காணமலிருத்தல்

c)

பிறரைக் கேலி செய்து பேசுதல்

18.

உங்கள் எதிர்வீட்டு நண்பன் சாலை விபத்தில் இறந்து விட்டான். அவனது இறுதி சடங்கில் நீங்களும் கலந்துகொள்ள எண்ணுகிறீர்கள். இறப்பு வீட்டில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்வீர்கள்?

a)

இறப்பு வீட்டில் அமைதி காப்பேன்

b)

அண்டை அயலாரிடம் நகைச்சுவையாகப் பேசுவேன்

c)

பலவித உணவு பொருட்களைக் கொண்டு செல்வேன்

19.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற மனவுனர்வைத் தேர்ந்தெடுக.

பக்கத்துவீட்டுத் தாத்தாவின் அறிவுரையைக் கேட்டு நடப்பேன்.

a)

மகிழ்ச்சி

b)

சோகம்

c)

வெறுப்பு

20.

அண்டை அயலாரிடம் மரியாதையுடன் பேசினால் _________________ .

a)

புரிந்துணர்வு ஏற்படாது

b)

உறவு வலுப்படாது

c)

நற்பெயர் கிட்டும்

21.

அண்டை வீட்டாரின் மேல் அதிருப்தி கொண்ட அம்மா, எப்பொழுதும் அவர்களின் ஏதேனும் குறைகளைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பார். இச்சூழலுக்கு எவ்வாறு தீர்வு காண இயலும்?

a)

அம்மாவுடன் சேர்ந்து அவர்களைக் குறைக்கூறுவேன்

b)

வீடு மாறி செல்வேன்

c)

அம்மாவின் தவற்றை மனம் நோகாதவாறு சுட்டிக் காட்டுவேன்

22.

பக்கத்து வீட்டினர் வேலைக்குச் சென்று விட்ட போது அவர்களின் வளர்ப்பு பூனை பசியால் கத்துகிறது. நீங்கள் எவ்வாறு பூனையிடம் அன்பு செலுத்துவீர்கள்?

a)

பூனையைக் கண்டும் காணாமல் இருப்பேன்

b)

அண்டை வீட்டாரிடம் கூறி பூனையை வேறு இடத்தில் வளர்க்க கூறுவேன்

c)

பூனைக்கு உணவளிப்பேன்

23.

கீழே கொடுக்கப்பட்ட பாடல் வரிகளுக்கு ஏற்ற விடையைத் தெரிவு செய்க.

அன்பு என்பதே தேய்வமானது,

அன்பு என்பதே இன்பமானது.

மதத்தின் மீது வைத்த அன்பு _______________

மனிதன் மீது வைத்த அன்பு ________________

a)

இன்பமானது, தேய்வமானது

b)

பக்தியானது, பாசமானது

c)

இறை நம்பிக்கையானது, வேதனையானது

24.

செயல்பாட்டிலும் முடிவெடுத்தலிலும் சார்பின்றிச் செயல்படுவது _____________ .

a)

நடுவுநிலைமை

b)

நேர்மை

c)

நன்மனம்

25.

அண்டை வீட்டாருடன் ஏற்படும் சிக்கல்களை_______________ இருந்து களைய வேண்டும்

a)

கோபமாக

b)

வெறுப்புடன்

c)

நடுவுநிலையாக

26.

அண்டை அயலாரிடையே நடுவுநிலைமையுடன் செயல்படுவ்வதால் நாம் ______________ கொள்ளலாம்.

a)

பெருமை

b)

பொறாமை

c)

அச்சம்

27.

உன் அண்ணன் இரு அண்டை வீட்டுப் பிள்ளைகளுள் ஒருவருக்கு மட்டுமே பாடம் சொல்லிக் கொடுத்தால் என்ன விளைவு ஏற்படும்?

a)

மற்றோர் அண்டை வீட்டுப் பிள்ளைக்கு அண்ணன் மீது மரியாதை ஏற்படும்

b)

அது மற்றோர் அண்டை வீட்டுப் பிள்ளையின் மனத்தைப் புண்படுத்தும்

c)

மற்றோர் அண்டை வீட்டாருக்கு அண்ணன் மீது கோபம் வரும்

28.

அண்டை அயலார் செய்யும் தவறுகளுக்கு நாம் துணை நிற்க _________________ .

a)

கூடாது

b)

வேண்டும்

c)

சில வேலைகளில் துணையாக இருக்கலாம்

29.

பாலன் துணிச்சலுடன் அண்டை வீட்டுத் தாத்தாவை எதிர்ட்த்துப் பேசினான். அக்கனம் தாத்தாவின் மனவுணர்வு எவ்வாறு இருந்திருக்கும்?

a)

மனநிறைவு

b)

பெருமிதம்

c)

வேதனை

30.

அண்டை வீட்டாரின் மாடுகள் உங்கள் பயிர்களை மேய்கின்றன. நீ என்ன செய்வாய்?

a)

மாடுகளை அடித்து விரட்டுவேன்

b)

கண்டும் காணாமல் விட்டு விடுவேன்

c)

துணிச்சலுடன் மாடுகளின் உரிமையாளரிடம் எடுத்துர்ரைப்பேன்.