Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

செய்யுள் படிவம் 4&5

Total questions: 51

Worksheet time: 38mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் செய்யுளில் விடுப்பட்டுள்ள சொல்லை நிரப்புக.


சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை ___________

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்

a)

அரங்கிடப்பத்

b)

அறங்கிடப்பத்

c)

அறங்கிடப்ப

2.

மேற்காணும் படம் உணர்த்தும் சொல் __________

a)

மாதர்

b)

பூந்தாரான்

c)

தனிக்காத்தான்

3.

செய்யுளில் விடுப்பட்டுள்ள சொற்றொடரை தேர்ந்தெடுக.


சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்

அருகூட்டும் ______________ ________________

ஒரு கூட்டில் வாழ உலகு

a)

பைங்கிளியும் ஆடற்பருந்தும்

b)

கிளியும் ஆடற்பருந்தும்

c)

பைங்கிளியும் பருந்தும்

4.

கீழ்க்காணும் செய்யுள் அடிகளின் பொருள்___________


அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்

ஒரு கூட்டில் வாழ உலகு.

a)

பாலும் பழமும் ஊட்டி வளர்க்கும் மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமை நீங்கி ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

b)

மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமை நீங்கி ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

c)

மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

5.

சரியான இணைகளைத் தேர்ந்தெடுக.

a)

சீத மதிக் = நிலவு போன்ற

b)

தாதவிழ் = மகரந்தப்பொடி சிந்துகின்ற

c)

செம்மை அறங்கிடப்பத் = சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும்

6.

செய்யுள் அடிகளை வரிசைப்படுத்துக.


1. அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்


2 சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்


3. ஒரு கூட்டில் வாழ உலகு.


4. தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்

a)

1, 2, 3, 4

b)

4, 2, 1, 3

c)

2, 4, 1, 3

7.

கீழ்க்காணும் பொருள் உணர்த்தும் செய்யுள் அடியைத் தேர்ந்தெடுக.


"குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன் ஆவான். அவன் சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும் வகையில் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான். "

a)

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்

அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்

b)

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்

c)

அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்

ஒரு கூட்டில் வாழ உலகு.

8.

கீழ்க்காணும் செய்யுளின் பொருளைத் தேர்தெடுக.

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்

அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்

ஒரு கூட்டில் வாழ உலகு.

a)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன் ஆவான். அவன் சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும் வகையில் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான். அவன் நாட்டில் பெண்கள் பாலும் பழமும் ஊட்டி வளர்க்கும் மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமையுடன் ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

b)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன் ஆவான். அவன் சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும் வகையில் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான். அவன் நாட்டில் பாலும் பழமும் ஊட்டி வளர்க்கும் வன்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமை நீங்கி ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

c)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன் ஆவான். அவன் சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும் வகையில் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான். அவன் நாட்டில் பெண்கள் பாலும் பழமும் ஊட்டி வளர்க்கும் மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமை நீங்கி ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

9.

இச்செய்யுளடிகளின் விளக்கம் என்ன?


பயில்சிறை அரச அன்னம்

பன்மலர் பள்ளி நின்றும்

a)

குயிலினம் தன் இணைகளோடு சேர்ந்து இருக்கவும்

b)

நெருங்கிய சிறகுகளையுடைய அன்னப்பறவையானது

c)

நெருங்கிய சிறகுகளையுடைய அன்னப்பறவையானது

தாமரை மலர்கனின்றும்

d)

துயில் எழவும் அக்காலை வேலையில்

வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை.

10.

யாதும் ஊரே யாவரும் கேளிர்


இவ்வடிகளின் பொருள் என்ன?

a)

எல்லா ஊரும் எமக்குச் சொந்தமான ஊரே, இதை அனைவரும் கேளுங்கள்

b)

எல்லா ஊர்மக்களும் எமக்கு உதவி செய்தவர்களே

c)

ஊர்மக்கள் அனைவரும் உறவுக்காரர்போல் இருந்து எனக்கு உதவி செய்தார்கள்

d)

எல்லா ஊரும் எமக்குச் சொந்தமான ஊரே.

எல்லாரும் எம் சுற்றத்தார்களே

11.

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே - இதன் பொருள் என்ன?

a)

ஓரறிவு பெற்ற உயிர் எனபது உற்று அறியும் இயல்பு உடையது

b)

ஓரறிவு பெற்ற உயிர் எனபது உடம்பினால் அறியும் இயல்பு உடையது

c)

ஓரறிவவு உயிர் என்றால் மனத்தின் வழி அறிந்து கொள்ளும் இயல்பு கொண்டதாகும்.

d)

ஓரறிவு என்பது உயிரில்லாத பொருள்களுக்கு மட்டுமே எனத் தொல்காப்பியர் கூறுகிறார்.

12.

துயிழெல, தும்பி காலை

செவ்வழி முரல்வ சோலை


இந்த அடிகளுக்கான விளக்கம் என்ன?

a)

துயிழெலவும் அக்காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை

b)

துயிழெலாமல் இருக்க, அக்காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை

c)

துயிழெலவும் ஆடிப் பாடவும் அக்காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை

d)

துயிழெலவும் அக்காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் அழகான காட்சியைக் கொண்ட சோலை

13.

பின்வரும் செய்யுளடிகளின் பொருள் என்ன?


சீத மதிக்குடைக்கிழ்ச் செம்மை அறங்கிடப்பத்

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்

a)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடைநிழலில் வீற்றிருக்கின்றான் நளமன்னன்.

b)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடைநிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான்.

c)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடைநிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன்.

d)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடைநிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன். அவன் சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும் வகையில் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான்.

14.

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே


இவ்வடிகளின் பொருள்?

a)

அவனுடன் நான் கொண்ட அன்பானது இந்த பிரபஞ்சத்தைவிடப் பெரியது; வானத்தைவிட உயர்ந்தது; கலடைவிட ஆழமானது

b)

அவனுடன் நான் கொண்ட அன்பானது பூமியைவிடப் பெரியது; வானத்தைவிட உயர்ந்தது; கலடைவிட ஆழமானது

c)

அவனுடன் நான் கொண்ட அன்பானது பூமியைவிடப் பெரியது; வானத்தைவிட உயர்ந்தது; நீரைவிட ஆழமானது

d)

அவனுடன் நான் கொண்ட அன்பானது பூமியைவிடப் பெரியது; வானத்தைவிட உயர்ந்தது அன்று; கலடைவிட ஆழமானது

15.

கடுங்கதிர் வெம்மையில் காதலன் தனக்கு


இவ்வடிகளின் சரியான விளக்கத்தைத் தெரிவு செய்க

a)

கடுங்கதிர் வெயிலால் நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து

b)

கடுங்கதிர் வெயிலால் நடுங்கிப்போய்ப் பெரிய துயரத்தை அடைந்து

c)

தன் கணவன் பொருட்டு, கடுங்கதிர் வெயிலால் நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து

d)

கடுங்கதிர் வெயிலால் நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து போதிலும் எதற்கும் கவலைபடாமல்

16.

...மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இழமே

சிறியோரை இகழ்தல் அதனிலும் இழமே

a)

சிறப்புடைய பெருமை விளங்கும் மாந்தரைக் கண்டு பாராட்டுதலும் இல்லை

b)

சிறப்புடைய பெருமை விளங்கும் மாந்தரைக் கண்டு பாராட்டுதலும் இல்லை; சிறுமையுடையோராய்த் தூற்றுதலும் இல்லை

c)

சிறப்புடைய பெருமை விளங்கும் மாந்தரைக் கண்டு பாராட்டுதலும் இல்லை; சிறுமையுடையோராய்த் தாழ்ந்து அழிபவர்களைக் கண்டு இகழ்ந்து தூற்றுதலும் இல்லை

d)

சிறப்புடைய பெருமை விளங்கும் பெரியவரைக் கண்டு பாராட்டுதலும் இல்லை; சிறுமையுடையோராய்த் தாழ்ந்து அழிந்து போகும் சிறியோர்களைக் கண்டு இகழ்ந்து தூற்றுதலும் இல்லை

17.

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே-

இவ்வடியின் பொருள் என்ன?

a)

மரபுகளை நேர்மை பெற உணர்ந்து நெறிப்படுத்த வேண்டும்.

b)

மரபுகளை நேர்மை பெற உணர்ந்து நெறிப்படுத்த தவறிவிட்டனர்.

c)

மரபுகளை நேர்மை பெற உணர்ந்தவர்கள் நெறிப்படுத்தியுள்ளனர்.

d)

மரபுகளை நேர்மை பெற உணராதவர்களுக்கு நெறிப்படுத்தியுள்ளனர்.

18.

பின்வரும் செய்யுளடியின் விளக்கம் என்ன?


ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

a)

ஐந்தறிவு பெற்ற உயிர் என்பது செவியால் அறிவது

b)

ஐந்தறிவு பெற்ற உயிர் என்பது எல்லாவற்றுக்கும் செவிசாய்த்து வாழ்வது.

c)

ஐந்தறிவு உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் செவியினாலும் மனத்தாலும் அறியும் இயல்பு உடையது

d)

ஐந்தறிவு பெற்ற உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் மூக்கினாலும் கண்ணாலும் செவியினாலும் அறியும் இயல்பு உடையது

19.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


யாதும் ஊரே

a)

எல்லா ஊரும் எமக்குச் சொந்தமான ஊரே

b)

எல்லாரும் எம் சுற்றத்தார்களே

20.

பொருள் கூறுக :

புறநானூறு (பெரியோர் சிறியோர் )


யாவரும் கேளிர்

a)

எல்லா ஊரும் எமக்குச் சொந்தமான ஊரே

b)

எல்லாரும் எம் சுற்றத்தார்களே

21.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


தீதும்

a)

தீமையும்

b)

தீர்வும்

22.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


நன்றும்

a)

நல்வாழ்வும்

b)

நன்மையும்

23.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


பிறர்தர வாரா

a)

பிறர் கொடுப்பதால் வருவது

b)

பிறர் கொடுப்பதால் வருவன அல்ல

24.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


நோதலும்

a)

துயரமும்

b)

மனம் தளர்வதும்

25.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


தணிதலும்

a)

ஆறுதல் அடைதலும்

b)

தீர்வு பிறப்பதும்

26.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


அவற்றோ ரன்ன

a)

அவற்றைப் போன்றே பிறரால் ஆவது

b)

அவற்றைப் போன்றே பிறரால் அல்ல

27.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


சாதலும் புதுவது அன்றே

a)

உலகத்தில் இறத்தல் என்பது புதுமையானது அன்று

b)

உலகத்தில் புதுமை காண்பது அரிதானது அன்று

28.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


வாழ்தல் இனிது என

a)

வாழ்க்கை இன்னலானது என்று

b)

வாழ்க்கை இனிதானது என்று

29.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


மகிழ்ந்தன்றும் இலமே

a)

மகிழ்ச்சி அடைந்ததும் இல்லை

b)

வாட்டமுற்றதும் இல்லை

30.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


முனிவின்

a)

முடிவு கண்டதும்

b)

வெறுப்பு வந்ததும்

31.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


இன்னா

a)

வாழ்க்கை இன்பம்

b)

வாழ்க்கை துன்பம்

32.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


என்றலும் இலமே

a)

என்று ஒதுக்குதலும் இல்லை

b)

என்று தூற்றுதலும் இல்லை

33.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


மின்னொடு வானம்

a)

மின்னலினால் வானத்தில்

b)

மின்னலும் வானமும்

34.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


தண்துளி தலைஇ

a)

பெரும் மின்னல் தோன்றும்

b)

பெருமழை தோன்றும்

35.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


கல்பொருது

a)

ஆறு கல்லை உடைக்கும்

b)

ஆறு கல்லை உருட்டும்

36.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


இரங்கும்

a)

ஒலி எழும்

b)

ஒளி தோன்றும்

37.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


பேர்யாற்று

a)

பெரிய கடலில்

b)

பெரிய ஆற்றில்

38.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


நீர்வழிப் படூஉம் புணைபோல்

a)

நீரில் செல்லும் மிதவைப் போல

b)

நீர்ல் நீந்தும் மீன்களைப் போல

39.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


ஆருயிர் முறைவழிப் படூஉம்

a)

இவ்வுயிரானது ஊழ்வினை செலுத்தும் வழியில் செல்வதாகும்

b)

இவ்வுயிரானது திட்டமிடப்பட்ட முறையில் செல்வதாகும்

40.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


திறவோர் காட்சியின் தெளிந்தனம்

a)

திறமைசாலிகளின் அறிவுரையைப் பின்பற்றி

b)

அறிஞர்களின் கருத்துகளால் தெளிவுப் பெற்று

41.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


மாட்சியின் பெரியோரை

a)

சிறப்புடைய பெருமை விளங்கும் மாந்தரை

b)

சிறப்பான பாராட்டுகளைப் பெற்ற மாந்தரை

42.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


வியத்தலும் இலமே

a)

பாராட்டுதலும் இல்லை

b)

பெருமையடைதலும் இல்லை

43.

பொருள் கூறுக : புறநானூறு (பெரியோர் சிறியோர் )


சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

a)

சிறுமையுடையோராய்த் தாழ்ந்து அழிபவர்களைக் கண்டு மிரட்டிப் பேசுவதும் இல்லை

b)

சிறுமையுடையோராய்த் தாழ்ந்து அழிபவர்களைக் கண்டு இகழ்ந்து தூற்றுதலும் இல்லை

44.

தொல்காப்பியர் கூறியுள்ள உயிர்களின் பகுப்பும் அறிவுநிலையும் எத்தனை?

a)

1

b)

4

c)

6

d)

7

45.

ஓரறிவு உயிரைக் கண்டிபிடிக்கவும்

a)

அனிச்சப்பூ

b)

மண்

c)

நீர்

d)

குருவி

46.

பின்வருவனவற்றுள் எது ஐந்தாம் அறிவைக் காட்டுகிறது?

a)

விழாமல் தடுத்துக்கொள்ளல்

b)

ஓசையை உணர்தல்

c)

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்

d)

உணவை எடுத்து உண்ணல்

47.

'சிறந்தவர்களைப் பாராட்டுவது தேவையில்லாதது; சாதாரணமானவர்களைக் கேவலமாகப் பார்ப்பதும் தவறு'

இப்பொருள் வெளிப்படுகிற செய்யுள் வரிகளைத் தேர்ந்தெடுக்கவும்

a)

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே

b)

பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

c)

ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம்

d)

இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்

48.

பொருள் கூறுக :


குயிலினம் வதுவை செய்ய (கம்பராமாயணம்)

a)

குயிற்கூட்டம் இணைந்திருக்கவும்

b)

குயிற்கூட்டம் ஓசை எழுப்பவும்

c)

குயிற்கூட்டம் பறக்கவும்

49.

பாடல் வரியைத் தெரிவு செய்க :


வேல் போன்ற கூர்விழியுடைய நாட்டியப் பெண்கள் ஆடலரங்கத்திற்கு அழகு செய்ய ஆடுவதைப் போன்று மயில்கள் நாட்டியமாடவும் (கம்பராமாயணம்)

a)

பயில்சிறை அரச அன்னம்

பன்மலர் பள்ளி நின்றும்

b)

மஞ்ஞை அயில்விழி மகளிர் ஆடும்

அரங்கினுக்கு அழகு செய்ய

c)

துயிலெழ, தும்பி காலைச்

செவ்வழி முரல்வ சோலை

50.

பாடல் வரியைத் தெரிவு செய்க :


அரச அன்னப்பறவை தாமரை மலர்களினின்றும் துயில் எழவும் (கம்பராமாயணம்)

a)

பயில்சிறை அரச அன்னம்

பன்மலர் பள்ளி நின்றும்

b)

மஞ்ஞை அயில்விழி மகளிர் ஆடும்

அரங்கினுக்கு அழகு செய்ய

c)

துயிலெழ, தும்பி காலைச்

செவ்வழி முரல்வ சோலை

51.

பாடல் வரியைத் தெரிவு செய்க :


காலை வேளையில் வண்டுகள் உதயராகம் பாடவும் உடைய சோலை (கம்பராமாயணம்)

a)

பயில்சிறை அரச அன்னம்

பன்மலர் பள்ளி நின்றும்

b)

மஞ்ஞை அயில்விழி மகளிர் ஆடும்

அரங்கினுக்கு அழகு செய்ய

c)

துயிலெழ, தும்பி காலைச்

செவ்வழி முரல்வ சோலை