wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேண்டுகோள் வாக்கியங்கள்

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இதில் எது வேண்டுகோள் வாக்கியம்?

a)

உன் வயது என்ன?

b)

தயவுசெய்து நூலகம் செல்ல அனுமதி தாருங்கள்.

c)

இங்கே வா

2.

இதில் எது வேண்டுகோள் வாக்கியம் அல்ல

a)

இது வேண்டுகோள் வாக்கியம்.

b)

அப்பா, என் தோழிகளுடன் வெளியே செல்ல அனுமதி தாருங்கள்.

3.

தயவு செய்து மேலேயுள்ள பெட்டியை எடுத்துத் தாருங்கள். இவ்வாக்கியம் எந்த வகையைச் சார்ந்தது?

a)

கட்டளை வாக்கியம்

b)

வினா வாக்கியம்

c)

வேண்டுகோள் வாக்கியம்

4.

நான் நூலகம் செல்ல ஆசிரியரிடம் அனுமதி கேட்பேன்.

a)

நான் வெளியேச் செல்ல வேண்டும்

b)

தயவு செய்து நூகலம் செல்ல அனுமதி தாருங்கள்.

c)

நான் நூலகம் போகனும்

5.

அப்பாவிடம் திடலில் விளையாடச் செல்ல அனுமதி கேள்.

a)

அப்பா திடலில் விளையாடப் போகனும்

b)

அப்பா தயவுசெய்து திடலில் விளையாட அனுமதி தாருங்கள்.

6.

தம்பியிடம் உள்ள கதைப் புத்தகம் ஒன்றைக் கேள்.

a)

கதைப் புத்தகம் தா

b)

தம்பி உன்னிடம் உள்ள கதைப் புத்தகத்தைத் தா.

7.

மீன் வளர்க்க அப்பாவிடம் ஒரு மீன் தொட்டி வாங்கித் தரக் கேள்.

a)

மீன் தொட்டி வேண்டும் மீன் வளர்க்க.

b)

அப்பா நான் மீன் வளர்க்க ஒரு மீன் தொட்டி வாங்கித் தாருங்கள்.

8.

பிடித்த பலகாரம் ஒன்றனைச் செய்து தர வேண்டி அம்மாவிடம் கேள்.

a)

அம்மா எனக்குப் பிடித்தப் பலகாரம் செய்து தாருங்கள்.

b)

எனக்குப் பிடித்த பலகாரம் வேண்டும்.

9.

பிறந்த நாள் விழாவை நண்பர்களுடன் கொண்டாட உன் அப்பாவிடம் அனுமதி கேள்.

a)

அப்பா நான் என் பிறந்த நாள் விழாவை என் நண்பர்களுடன் கொண்டாட அனுமதி வேண்டும்.

b)

நான் பிறந்தநாள் விழா கொண்டாட வேண்டும்.

10.

படித்துக் கொண்டிருக்கும் போது வானொலியின் ஒலியைக் குறைக்கச் சொல்லி அக்காவிடம் கூறு.

a)

வானொலியின் ஒலியைக் குறையுங்கள்.

b)

அக்கா நான் படித்துக் கொண்டிருப்பதால் தயவுசெய்து வானொலியின் ஒலியைக் குறையுங்கள்.

11.

வேண்டுகோள் வாக்கியம் எப்படி இருக்க வேண்டும்?

a)

கோபமாக

b)

பணிவாக

c)

பயமாக

d)

கவலையாக