wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இணைமொழிகள் ஆண்டு 4

Total questions: 9

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முதியோர் இல்லத்தில் கலை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இசைக் கலைஞர்கள் பலர் மேடையில் பாடி முதியோர்களை மகிழ்ச்சிப்படுத்தினர். கலைஞர்களுடன் சேர்ந்து முதியோர்கள் சிலரும் _______________ மகிழ்ந்தனர்.

a)

ஆடிப்பாடி

b)

அன்றும் இன்றும்

c)

அருமை பெருமை

2.

பள்ளிக்குப் பேராசிரியர் ஒருவர் வந்திருந்தார். 'மொழியின் கதை' எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ்மொழியின் __________________ களை எடுத்துரைத்தார்.

a)

அன்றும் இன்றும்

b)

அருமை பெருமை

c)

ஆடிப்பாடி

3.

பாட்டி, மூலிகை மருத்துவத்தில் கை தேர்ந்தவர். பலவித மூலிகைகளை உண்பதன் மூலம் நாம் நோய்களைத் தவிர்க்கலாம் என்பார். _____________ மூலிகை மருத்துவமே சிறந்தது என்பது என் பாட்டியின் நம்பிக்கையாகும்.

a)

ஆடிப்பாடி

b)

அருமை பெருமை

c)

அன்றும் இன்றும்

4.

தமிழர் திருநாளை முன்னிட்டு யாயாஹ் அவால் தமிழ்ப்பள்ளியில் பல போட்டி விளையாட்டுகள் நடைப்பெற்றன. மாணவர்கள் போட்டி விளையாட்டில் கலந்துக்கொண்டது மட்டுமல்லாமல் இரவில் நடைப்பெற்ற கலை நிகழ்ச்சியிலும் ________________________ மகிழ்ந்தனர்.

a)

அன்றும் இன்றும்

b)

ஆடிப்பாடி

c)

அருமை பெருமை

5.

உலகில், 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள் ஆகும். திருவள்ளுவர் எழுதிய 1330 குறளில் பல அறநெறிகள் புகித்திருப்பதை நாம் காணலாம். ஆனால், திருக்குறளின் ___________________ அறியாத நாம், அதனை வாழ்க்கையில் பின்பற்ற தவறுகிறோம்.

a)

அன்றும் இன்றும்

b)

ஆடிப்பாடி

c)

அருமை பெருமை

6.

சிறுவயது முதலே நடிப்பு துறையில் ஆர்வம் காட்டிய பத்மஸ்ரீ கமல் ஹாசன் தொடர்ந்து பல வெற்றி படங்களைக் கொடுத்த ஒரு நடிகர் ஆவார். அவரது நடிப்பு திறனால் ____________________ மக்கள் மனதில் நீங்காத இடம்பெற்றவர் ஆவார்.

a)

அன்றும் இன்றும்

b)

அருமை பெருமை

c)

ஆடிப்பாடி

7.

பிரபல 'பாப்' பாடகரான 'மைக்கல் ஜாக்சன்' அவர்களின் நினைவு நாளின் போது லண்டனில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து, அவர்களது பாடல்களைக் கேட்டு ஆயிரக்கணக்கான இரசிகர்கள் ___________________ மகிழ்ந்தனர்.

a)

அருமை பெருமை

b)

ஆடிப்பாடி

c)

அன்றும் இன்றும்

8.

கவிஞர் வைரமுத்து அவர்களின் கவிதைகளை இரசிக்காதவர்களே கிடையாது. அவர் கவிதை, சிறுகதை, நாவல், போன்ற படைப்புகளைத் தந்துள்ளார். இவரது ______________ பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டன.

a)

அன்றும் இன்றும்

b)

ஆடிப்பாடி

c)

அருமை பெருமை

9.

இறைவனின் ஆசியுடன் நிகழ்ச்சியைத் தொடங்குவதற்காக இறைவாழ்த்து பாடுவது தமிழர்களின் பழக்கமாகும். இது _____________ தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

a)

அன்றும் இன்றும்

b)

ஆடிப்பாடி

c)

அருமை பெருமை