Worksheetsவாக்கிய வகை
Total questions: 15
Worksheet time: 8mins
கர்ணன் சிறந்த கொடையாளி மட்டுமல்லன்; சிறந்த போர் வீரனும் ஆவான்.
இது எந்த வகை வாக்கியம்?
தனி
தொடர்
கலவை
செய்தி
எறும்புகளும் தேனீக்களும் இனிப்பினை விரும்பி உண்ணும்.
இது எந்த வகை வாக்கியம்?
தனி
தொடர்
விழைவு
கலவை
மாலினி ஆலயத்திற்குச் சென்றாள்; இறைவனைத் தொழுதாள்; மன அமைதிப் பெற்றாள்.
இது எந்த வகை வாக்கியம்?
கலவை
தனி
செய்தி
தொடர்
விளையாட்டுத்துறையில் நம் நாடு வெற்றிக்கொடி நாட்ட இந்நாட்டுக் குடிமக்களான நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.
இது எந்த வகை வாக்கியம்?
தனி
தொடர்
கலவை
தனி வாக்கியத்தில் பல பயனிலைகள் இருக்கும்.
சரி
பிழை
கலவை வாக்கியம் பல முதன்மைக் கருத்துகளும் ஒரு சார்பு கருத்தும் கொண்டிருக்கும்.
சரி
பிழை
ஒன்றுக்கும் மேற்பட்ட தகவல்களை அல்லது செய்திகளை ஒரே வாக்கியத்தில் தருவது கலவை வக்கியமாகும்.
சரி
பிழை
நாடு முன்னேற வேண்டுமென்றால், மக்கள் அயராது உழைக்க வேண்டும்.
இதில் எது சார்பு வாக்கியம்?
மக்கள் அயராது உழைக்க வேண்டும்
நாடு முன்னேற வேண்டும்.
நான் குறித்த நேரத்தில் வந்தேன்; எனினும் , கதிரைக் காண முடியவில்லை.
இது எந்த வகை வாக்கியம்?
தனி
தொடர்
கலவை
ஒரே பயனிலையைக் கொண்டு முடிவதுதான் தொடர் வாக்கியமாகும்.
சரி
பிழை
அமைப்பு அடிப்படையில் வாக்கியங்கள் 3 வகைப்படும். அவை___________, _________,_________.
தனி , தொடர் , செய்தி
தனி , தொடர் , கலவை
செய்தி , வினா , கலவை
உணர்ச்சி , தனி , தொடர்
இளவேந்தனும் இளமாறனும் பாடங்களை முறையாகப் படித்தனர்; தேர்வினைச் சிறப்பாகச் செய்தனர்.
இது எந்த வகை வாக்கியம் ஆகும்?
தனி
தொடர்
கலவை
உணர்ச்சி
கீழே கொடுக்கப்பட்டுள்ள தனி வாக்கியங்களைத் தெரிவு செய்க.
திவாகரன் புத்தகம் படித்தான்.
கதிரவனும் ,ஷாரங்கினும் ஒன்றாகப் பந்து விளையாடினர்.
டர்மின் கடைக்குச் சென்று புத்தகத்தை வாங்கினான்.
சூரியன் தோன்றியது : ஆகையால் , பனி மறைந்தது.
கீழ்க்காணும் தனிவாக்கியங்களைத் தொடர்வாக்கியமாக மாற்றுக.
கம்பர் சடையப்ப வள்ளலின் ஊருக்குச் சென்றார். கம்பர் இராமாயணத்தை இயற்றினார்.
கம்பர் சடையப்ப வள்ளலின் ஊருக்குச் சென்றதோடு இராமாயணத்தை இயற்றினார்
சடையப்ப வள்ளல் கம்பரின் ஊருக்குச் சென்றதும் கம்பர் இராமாயணத்தை இயற்றினார்.
இராமாயணத்தை இயற்றுவதற்காகக் கம்பர் சடையப்ப வள்ளலின் ஊருக்குச் சென்றார்.
கம்பர் சடையப்ப வள்ளலின் ஊருக்குச் சென்று இராமாயணத்தை இயற்றினார்.
அமைப்பு அடிப்படையில் வாக்கியங்கள் எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
1
2
3
4
