wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Revision

Total questions: 43

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

1. உணவிலிருந்து மனிதனுக்குக் கிடைக்கும் சக்தியின் வகை என்ன?

a)

இயக்க சக்தி

b)

அணு சக்தி

c)

இரசாயன சக்தி

d)

வெப்ப சக்தி

2.

2. ஒலி சக்தி அதிரும் பொருள்களிலிருந்து உண்டாகின்றது.கீழ்க்காணும் பொருள்களில் எது ஒலி சக்தியை வெளியிடும்?

a)

கைமின்விளக்கு

b)

மின்னாக்கி

c)

இசைக்கருவி

d)

தெரு விளக்கு

3.

3. படம்,தென்னை மரத்திலிருந்து விழும்போது ஏற்படும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன?

a)

இயக்க சக்தி ------------ உள்நிலை சக்தி

b)

உள்நிலை சக்தி ---------- இயக்க சக்தி

c)

இரசாயன சக்தி ----------- உள்நிலை சக்தி

d)

உள்நிலை சக்தி ----------- இரசாயன சக்தி

4.

4. சூரிய சக்தி ------------ மின்சக்தி --------- இயக்க சக்தி


படம் X பொருளின் சக்தி வடிவ மாற்றத்தைக் காட்டுகின்றது. X பொருள் என்ன?

a)

சூரிய சக்தி மகிழுந்து

b)

கணிப்பொறி

c)

சூரிய சக்தி தெருவிளக்கு

d)

சூரிய அடுப்பு

5.

5. படம்,கைமின்விளக்கு ஒளிர்வதைக் காட்டுகின்றது. இதில் காணும் சக்தியின் வடிவ மாற்றம் என்ன?

a)

இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி + வெப்ப சக்தி

b)

இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி

c)

இரசாயன சக்தி ----------- மின்சக்தி ----------- ஒளி சக்தி -------------- வெப்ப சக்தி

d)

மின்சக்தி ------------- ஒளி சக்தி + வெப்ப சக்தி

6.

6. சூரியன் அனைத்து சக்திகளுக்கும் மூலமாக விளங்குகிறது.சூரியன் மொத்தம் எத்தனை சக்தியின் வகையை நமக்குக் கொடுக்கின்றது?

a)

ஒன்று

b)

மூன்று

c)

இரண்டு

d)

நான்கு

7.

7. கீழ்காணும் அனைத்தும் சக்தியின் மூலங்கள் ஆகும்,ஒன்றைத் தவிர.

a)

காற்று

b)

நீர்

c)

சூரியன்

d)

மழை

8.

8. சக்தி என்றால் என்ன?

a)

ஓரு வேலையைச் செய்வதற்கான வேகம்

b)

ஒரு வேலையைச் செய்வதற்கான நினைவு

c)

ஒரு வேலையைச் செய்வதற்கான ஆற்றல்

d)

ஒரு வேலையைச் செய்வதற்கான தொழில்நுட்பம்

9.

9. படத்தில் காணப்படும் பொருள் எந்த சக்தியைக் கொண்டுள்ளது ?

a)

மின்சக்தி

b)

இரசாயனச் சக்தி

c)

வெப்பச்சக்தி

d)

ஒளிச்சக்தி

10.

10. கொடுக்கப்பட்டுள்ள பொருள் எந்த சக்தியின் துணையுடன் இயங்குகின்றது ?

a)

வெப்பச்சக்தி

b)

அணு சக்தி

c)

மின் சக்தி

d)

ஒசிச்சக்தி

11.

11. வானொலியின் சரியான சக்தியின் உருமாற்றத்தைத் தெரிவு செய்க.

a)

மின்சக்தி --> ஒலிச்சக்தி

b)

வெப்பச்சக்தி --> ஒலிச்சக்தி

c)

இரசாயனச் சக்தி --> ஒலிச்சக்தி

d)

மின்சக்தி --> ஒளிச்சக்தி

12.

12. கைமின் விளக்கின் சக்தியின் உருமாற்றம் யாது ?

a)

மின்சக்தி --> வெப்பச்சக்தி --> ஒளிச்சக்தி

b)

இரசாயனச்சக்தி--> மின்சக்தி --> ஒளிச்சக்தி

c)

இரசாயனச்சக்தி-->மின்சக்தி--> ஒலிச்சக்தி

d)

இரயாசனச்சக்தி --> ஒளிச்சக்தி

13.

13. பின்வருவனவற்றுள் எது புதுப்பிக்கக்கூடிய சக்தியாகும் ?

a)

நிலக்கரி

b)

அணு சக்தி

c)

காற்று

d)

பெட்ரோலியம்

14.

14. புதுப்பிக்க இயலாத சக்தியைத் தெரிவு செய்க.

a)

நிலக்கரி

b)

சூரியன்

c)

கடல் அலை

d)

காற்று

15.

15. உணவு எவ்வகை சக்தியைக் கொண்டுள்ளது ?

a)

மின்சக்தி

b)

உள்நிலைச்சக்தி

c)

இரசாயனச்சக்தி

d)

ஒளிச்சக்தி

16.

16. புதுப்பிக்க இயலாத சக்தி என்றால் என்ன?

a)

சூரியனிடமிருந்து கிடைக்கக்கூடிய சக்தி.

b)

பயன்படுத்திய பிறகு மீளாக்கம் செய்ய இயலும் சக்தி

c)

பயன்படுத்திய பிறகு மீளாக்கம் செய்ய இயலாத சக்தி.

d)

தொடர்ச்சியாக கிடைக்கக்கூடிய சக்தி

17.

17. நகரும் பொருள் கொண்டுள்ள சக்தி யாது ?

a)

மின்சக்தி

b)

இயக்கச்சக்தி

c)

இரசாயனச்சக்தி

d)

வெப்பச்சக்தி

18.

18. படம், ஒரு நொய்வத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு நடவடிக்கையைக் காட்டுகிறது. கல்லை விட்டவுடன் கல்லில் ஏற்படும் சக்தி மாற்றம் என்ன?

a)

உள்நிலை சக்தி ---> இயங்கு சக்தி

b)

உள்நிலை சக்தி ---> ஒலிச் சக்தி

c)

இயங்கு சக்தி ---> இரசாயன சக்தி

d)

இயங்கு சக்தி ---> உள்நிலை சக்தி

19.

19. பின்வரும் கூற்றுகளில் புதுப்பிக்க இயலாத சக்தியை ஒட்டிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.

a)

மீளாக்கம் செய்ய முடியாது

b)

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது

c)

தொடர்ச்சியாக்க் கிடைக்கக் கூடிய சக்தி

d)

மீளாக்கம் செய்யக்கூடிய சக்தி

20.

20. நிழல் எவ்வாறு உருவாகிறது?

a)

ஒளி ஒரு பொருளின் மீது படும் போது

b)

ஒளி தடைப்படும் போது

c)

ஒளி ஊடுருவும் போது

21.

21. உலகத்தின் முதன்மை ஒளி மூலம் என்ன?

a)

சூரியன்

b)

நிலவு

c)

நட்சத்திரங்கள்

22.

22. மெழுகுவர்த்தியின் ஒளி தடுக்கப்பட்டால் நிழல் உண்டாகுமா?

a)

ஆம்

b)

இல்லை

23.

23. எல்லா ஒளி மூலங்களும் தடைப்படும் போது__________________ உண்டாக்கும்.

a)

நெருப்பு

b)

ஒளி

c)

நிழலை

24.

24. நிழல் _____________________ அளவில் காட்சியளிக்கும்.

a)

ஒரே

b)

பெரியதாக

c)

வெவ்வேறு

25.

25. ஒளியின் மூலம் ஒன்றைத் தெரிவு செய்க?

a)

புட்டி

b)

விளக்கு

c)

மரம்

26.

26. அக்காலத்தில் நிழலைக் கொண்டு நேரத்தைக் கணக்கிட்டனர்.

a)

ஆம்

b)

இல்லை

27.

27. ஒளியின் அமைவிடத்திற்கு ஏற்ப நிழலின் அளவு வேறுபடும்.

a)

ஆம்

b)

இல்லை

28.

28. பொருள்களின் வடிவத்திற்கேற்ப நிழல் அமைந்திருக்கும்.

a)

ஆம்

b)

இல்லை

29.

29. ஒளி ____________ செல்லும்.

a)

வளைந்து

b)

நேர்க்கோட்டில்

c)

பல கோட்டில்

30.

30. பொருள் ஒளி மூலத்தின் அருகில் இருந்தால், நிழல் _____________ இருக்கும்.

a)

பெரியதாக

b)

சிறியதாக

c)

சமமாக

31.

31. இவற்றுள் எது தாவரங்களின் அடிப்படைத் தேவை?

a)

மண்

b)

நீர்

c)

உரம்

d)

பூச்சாடி

32.

32. மானுக்கு ஏன் கொம்புகள் உள்ளது?

a)

உணவைக் கிழிப்பதற்காக

b)

வேகமாக ஓடுவதற்காக

c)

தற்காத்துக் கொள்ள

33.

33. கீழ்க்காண்பவற்றுள் எது அறிவியல் செயற்பாங்குத் திறன் அல்ல?

a)

வகைப்படுத்துதல்

b)

பரிசோதனை செய்தல்

c)

அறிக்கை தயாரித்தல்

d)

முன் அனுமானித்தல்

34.

34. வெடித்துச் சிதறுவதன் மூலம் பரவும் தாவரத்தின் விதை எது?

a)

தாமரை

b)

தேங்காய்

c)

நொய்வ விதை

d)

பப்பாளி

35.

35. வெப்பமானியில் உள்ள திரவம் யாது?

a)

எண்ணெய்

b)

புளிக்காடி

c)

பாதரசம்

d)

மெழுகு

36.

36. தாவரங்கள் வெளியிடும் காற்றின் பெயர் என்ன?

a)

உயிர்வளி

b)

வெப்பக் காற்று

c)

கரிவளி

d)

புகை

37.

37. அறிவியல் அறையில் பின்பற்ற வேண்டிய சரியான விதிமுறையைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

உணவருந்துதல்

b)

ஆசிரியர் அனுமதியுடன் செயல்படுதல்

c)

அரட்டை அடித்தல், ஓடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல்

d)

சத்தம் போடுதல்

38.

38. படம் எந்தச் சக்தியைக் குறிக்கிறது?

a)

கடல் அலை

b)

நீர்

c)

சூரிய சக்தி

d)

உயிரினத் தொகுதி

39.

39. சுவாசத்தின் வீதம் என்றால் ?

a)

ஒரு நிமிடத்தில் நெஞ்சின் அசைவின் எண்ணிக்கை

b)

ஒரு நிமிடத்தில் இருதய துடிப்பின் எண்ணிக்கை

c)

ஒரு நிமிடத்தில் நுரையீரல் சுருங்கி விரிவடையும் எண்ணிக்கை

d)

ஒரு நிமிடத்தில் மூக்கின் வாயிலாக மூச்சை உள்வாங்கி வெளியிடும் எண்ணிக்கை.

40.

40. கீழ்க்காணும் நடவடிக்கைகளில் நமது நுரையீரலுக்குத் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கை எது?

a)

புகைப்பிடித்தல்

b)

மதுபானம் அருந்துதல்

c)

போதைப்பொருள் உட்கொள்ளுதல்

d)

சமசீரற்ற உணவை உண்ணுதல்

41.

‘நெகிழ் திறம்” என்றால் என்ன?

a)

மிதக்கும் தன்மைக் கொண்ட பொருள்

b)

இழுவைத் தன்மைக் கொண்ட பொருள்

c)

நீரை உறிஞ்சும் தன்மைக் கொண்டது

d)

மூழ்கும் தன்மைக் கொண்டது

42.

ஐம்புலன்களைக் கொண்டு நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அல்லது நிகழும் சம்பவங்கள் பற்றிய தகவல்களை அறிந்து திரட்டுவது _________________ எனப்படுகிறது.

a)

உற்றறிதல்

b)

ஊகித்தல்

c)

வகைப்படுத்துதல்

d)

முன் அனுமானித்தல்

43.

பின்வருபவை யாவும் மாணவர்கள் அறிவியல் அறையில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், ஒன்றைத் தவிர

a)

ஆசிரியர் அனுமதியின்றி பரிசோதனையை மேற்கொள்ளக் கூடாது.

b)

இரசாயனக் கழிவுகளைச் சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

c)

பரிசோதனைக்குப் பயன்படுத்திய கருவிகளைச் சுத்தம் செய்யக் கூடாது.

d)

மாணவர்கள் அறிவியல் அறையில் உணவு உண்ணக்கூடாது.