Worksheetsஇயக்கம்
Total questions: 20
Worksheet time: 10mins
திசைவேகம் – காலம் வரைபடம் உள்ளடக்கும்
பரப்பளவு எதனைப் பிரதிபலிக்கிறது?
நகரும் பொருளின் திசைவேகம்
நகரும் பொருள் அடைந்த இடப்பெயர்ச்சி
நகரும் பொருளின் வேகம்
நகரும் பொருளின் முடுக்கம்
கீழ்க்கண்டவற்றில் எது பெரும்பாலும் சீரான
வட்ட இயக்கம் அல்ல ?
சூரியனைச் சுற்றி வரும் பூமியின் இயக்கம்
வட்டப் பாதை யில் சுற்றி வரும் பொம்மை
ரயிலின் இயக்கம்.
வட்டப் பாதை யில் செல்லும் பந்தய
மகிழுந்து
கடிகாரத்தில் மணி முள்ளின் இயக்கம்
கீழ்வரும் வரைபடத் தில் சீரான இயக்கத்தில்
நகரும் ஒரு பொருளைக் குறிப்பிடுவது எது?
வேகம் ஒரு _________ அளவு. அதேசமயம் திசைவேகம் ஒரு ___________ அளவு.
வெக்டார் ஸ்கேலார்
ஸ்கேலார் வெக்டார்
சரியான தவறான
தவறான சரியான
தொலைவு- கால வரைபடத்தின் எந்த ஒரு புள்ளியிலும் சாய்வின் மதிப்பைத் தருவது ___________
திசைவேகம்
வேகம்
இடப்பெயர்ச்சி
முடுக்கம்
எதிர்மறை முடுக்கத்தை ___________ என்றும் கூறலாம்.
வேக ஏற்றம்
வேக இறக்கம்
திசைவேக ஏற்றம்
திசைவேக இறக்கம்
இடப்பெயர்ச்சி – காலம் வரைபடத்தில் உள்ள
பரப்பளவு குறிப்பிடுவது ___________
திசைவேகம்
வேகம்
முடுக்கம்
அழுத்தம்
நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கிடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் சீரான இயக்கத்துக்கு ஒரு உதாரணம்.
சரி
தவறு
முடுக்கம் எதிர்மறை மதிப்பும் பெறும்.
சரி
தவறு
எந்தவொரு கால இடைவெளியிலும் ஒரு பொருள் கடந்த தூரம் சுழி ஆகாது. ஆனால் இடப்பெயர்ச்சி சுழி ஆகும்.
சரி
தவறு
ஈர்ப்பு விசையால் தடையின்றி தானே விழும் ஒரு பொருளின் திசைவேகம் – காலம் வரைபடமானது x - அச்சுக்கு இணையாக ஒரு நேர்கோடாக இருக்கும்.
சரி
தவறு
ஒரு பொருளின் திசைவேகம் - காலம் வரைபடம் ஒரு நேர்கோடாக இருந்து, அது காலத்தினுடைய அச்சுக்கு சாய்வாக இருந்தால் அதன் இடப்பெயர்ச்சி - காலம் வரைபடம் ஒரு நேர்கோடாக அமையும்.
சரி
தவறு
கூற்று: மகிழுந்து அல்லது மோட்டார் சைக்கிளில் உள்ள வேகமானி அதன் சராசரி வேகத்தை அளவிடுகிறது.
காரணம்: மொத்த தூரத்தை நேரத்தால் வகுத்தால் அது சராசரி திசைவேகத்துக்கு சமம்.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும்
உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான
விளக்கம்.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும்
உண்மை. ஆனால், காரணம் கூற்றின்
தவறான விளக்கம்.
கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.
கூற்று: ஒரு பொருளின் இடப்பெயர்ச்சி சுழி ஆனால் அப்பொருள் கடந்த தூரம் சுழி இல்லை.
காரணம்: இடப்பெயர்ச்சி தொடக்க நிலைக்கும் முடிவு நிலைக்கும் இடையே உள்ள குறுகிய பாதை ஆகும்
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும்
உண்மை. மேலும், காரணம் கூற்றின் சரியான
விளக்கம்.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும்
உண்மை. ஆனால், காரணம் கூற்றின்
தவறான விளக்கம்.
கூற்று உண்மை. ஆனால் காரணம் தவறு.
கூற்று தவறு. ஆனால் காரணம் உண்மை.
சமகால அளவுகளில் சம இடைவெளியைக்கடக்கும் ஒரு பொருளின் இயக்கம்.
சீரற்ற முடுக்கம்
நிலையான எதிர்மறை முடுக்கம்
சீரான முடுக்கம்
நகரத்தின் நெருக்கடி மிகுந்த கடுமையான போக்குவரத்திற்கிடையே செல்லும் ஒரு பேருந்தின் இயக்கம் _______ இயக்கத்துக்கு ஒரு உதாரணம்.
சீரான
சீரற்ற
நேரான
வளைந்த
ஈர்ப்பு விசையால் தடையின்றி தானே விழும் ஒரு பொருளின் திசைவேகம் – காலம் வரைபடமானது x - அச்சுக்கு _________ ஒரு நேர்கோடாக இருக்கும்.
சாய்வாக
இணையாக
நேராக
வளைந்த
