NEW
Font size
Worksheetsபுதிர் கேள்விகள் - சுற்று 2
Total questions: 40
Worksheet time: 20mins
கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
திரு.மாணிக்கம் தம் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக _________________ உழைத்து வருகிறார்.
மேடு பள்ளம்
அல்லும் பகலும்
சுற்றும் முற்றும்
ஆடை அணிகலன்
காலியான இடத்திற்குப் பொருத்தமான இரட்டைக் கிளவியினைத் தெரிவு செய்க.
மேடையில் சிறப்பாக நடனம் ஆடிச் சென்ற சரன்யாவின் கால் சலங்கைகள் _____________________வென ஓசை எலுப்பின.
கல கல
மட மட
சல சல
தட தட
அகிலன் எந்தப் பாடத்தையும் ___________ செய்வதால் அவனது கையெழுத்து வடிவத்துடன் இருக்காது. விடைகளும் சரியாக இருக்காது.
அள்ளி இறைத்துச்
அரக்கப் பரக்கச்
குரங்குப் பிடியாகச்
கிணற்றுத் தவளையாகச்
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.
விருப்பு வெறுப்பு அற்ற கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்களுக்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
கீழ்க்காணும் படத்திற்குப் பொருத்தமான உலகநீதியைத் தெரிவு செய்க.
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம் .
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்.
கீழ்க்காணும் பொருளுக்குப் பொருந்தும் செய்யுளின் இரண்டாம் அடியைத் தெரிவு செய்க.
நல்லவர்களுக்குப் பயன் கருதாமல் நாம் செய்கின்ற உதவி நிச்சயமாக நமக்குப் பயன் தரும்.
நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா - நின்று
கடக்க கருதவும் வேண்டா - மடைத்தலையில்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாய் - தெல்லுலகில்
கீழ்க்காணும் செய்யுளில் கோடிடப்பட்ட சொல்லின் பொருள் யாது?
நரர்களுக்கும் சுரர்களுக்கும்
நலங்கொடுக்கும் நலமே
தேவர்களுக்கும்
மனிதர்களுக்கும்
அரக்கர்களுக்கும்
முனிவர்களுக்கும்
கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
ஆசிரியரின் விரிவான விளக்கத்திற்குப் பிறகு குமுதினியால் புணரியல் பற்றி அறிந்துகொண்டு கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளிக்க வேண்டும்.
முழு மூச்சு
கண்ணும் கருத்தும்
தெள்ளத் தெளிதல்
கரைத்துக் குடித்தல்
கீழ்க்காணும் சூழலில் காலியிடத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
யாருக்கும் தெரியாமல் இருந்த நந்தினியின் ஆடல் திறன், தனித்திறமை போட்டியின்போது _________________ அனைவராலும் அறியப்பட்டது.
இலைமறை காய் போல
காட்டுத் தீ போல
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
மேற்கண்ட சூழலுக்குப் பொருத்தமான செய்யுளின் இறுதி அடியைத் தெரிவு செய்க.
பரவாயில்லையே சுந்தர், விஷக்காய்ச்சலில் அவதிப்பட்டாலும் சொன்னதுபோல யூ.பி.எஸ்.ஆரில் 8-ஏக்கள் பெற்று சாதனை படைத்துவிட்டாய். உன் மனவுறுதிதான் உன் வெற்றிக்குக் காரணம்.
கருமமே கண்ணாயினார்.
புல்லிதழ் பூவிற்கும் உண்டு.
நிறையிருளை நீக்குமே நின்று.
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
பிழையான விளக்கம் கொண்டுள்ள மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
அள்ளி இறைத்தல் ****உறுதி பூணுதல்
அரக்கப்பரக்க ***** அவசரமும் பதற்றமும்
அவசரக் குடுக்கை****ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்து விடுபவன்
அள்ளி விடுதல் ****ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
அம்மா : அமுதா, அப்பொழுதே அப்பா வெளியே செல்ல வேண்டாமென சென்னார். நீ கேட்கவில்லை. இப்பொழுது பார் காலில் அடிபட்டு வந்திருக்கிறாய்!
அகிலன் : மன்னித்து விடுங்கள் அம்மா.
ஏவா மக்கள் மூவா மருந்து.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை.
தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை.
'கல்லார்க்கும் கற்றவர்க்கும்' எனத் தொடங்கும் செய்யுளை இயற்றியவரையும் அச்செய்யுள் இடம்பெற்ற நூலையும் தெரிவு செய்க.
ஒளவையார் ***மூதுரை
சமண முனிவர்கள்***நாலடியார்
குமர குருபர சுவாமிகள்***நீதிநெறி விளக்கம்
வள்ளலார் இராமலிங்க அடிகளார்***திருவருட்பா
சூழலுக்குப் பொருத்தமான வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
கந்தனின் குடும்பம் வறுமையில் வாடியது. ஒருவேளை சோற்றுக்குக் கூட வழியிலாமல் பட்டினி கிடந்தாலும் கல்வியின் அவசியத்தை உணர்ந்த அவன் பெற்றோர் கந்தனைப் பள்ளிக்கு அனுப்பினார்.
கல்விக்கழகு கசடற மொழிதல்
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்
எழுத்தறிவித்தவன் இறைவனாகும்.
கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.
நகமும் சதையும் போல
இலை மறை காய் போல
மலரும் மணமும் போல
எலியும் பூனையும் போல
சரியான விடையைத் தெரிவு செய்க.
அப்பா கடையில் _______ கதைப்புத்தகம் வாங்கினார்.
ஒரு
ஓர்
ஒற்றை
அஃது
அமுதா பள்ளியில் நடைபெற்ற கவிதை எழுதும் போட்டியில் கலந்து கொண்டாள்.
கோடிடப்பட்டச் சொல்லுக்குப் பொருந்தும் பெயர்ச்சொல் எது?
சினைப்பெயர்
பண்புப்பெயர்
இடப்பெயர்
காலப்பெயர்
______________பள்ளிக்கு நடந்து வருவார்கள்.
அவள்
அவர்கள்
அவர்
அவன்
சரியான வேற்றுமை உருபை ஏற்று வராத வாக்கியத்தைத் தெரிவு செய்க.
ஆசிரியர் தமிழரசைப் பாராட்டினார்.
இந்தியாவின் தலைநகரம் புதுடில்லி.
கந்தனிடம் இரண்டு உணவுப் பொட்டலங்கள் உள்ளன.
சுபரமணிக்குப் பதவி உயர்வு கிடைத்தது.
கீழ்க்காண்பனவற்றுள் மூன்றாம் வேற்றுமை உருபைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மீனா வீணை மீட்டினாள்.
மாலதி மலர்களைக் கொய்தாள்.
முருகன் தமிழ்பால் பற்றுக் கொண்டான்.
கவிதா அம்மாவோடு கோயிலுக்குச் சென்றாள்.
கண்மணி ஏழை மாணவர்களின் கல்விக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தாள்.
செய்தாள்
கண்மணி
ஏழை மாணவர்கள்
உதவிகளை
சமமான பொருளைக் கொண்ட இணைமொழியைத் தெரிவு செய்க.
மூலை முடுக்கு – எவ்விடத்தும்
மேடு பள்ளம் – சம்மான நிலப்பகுதி
சுற்றும் முற்றும் – சில இடங்களில்
அங்கும் இங்கும் – எல்லா இடங்களில்
கீழ்க்கண்ட கூற்றில் கோடிட்ட சொல்லுக்குப் பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க.
வளவன் சிறுவயதிலிருந்தே தன் பெற்றோர்கள் கற்றுக் கொடுத்த நடைமுறைகளை இன்றும் தொடர்ந்து பின்பற்றி வருகிறான்.
நன்மை தீமை
பழக்க வழக்கம்
அருமை பெருமை
அன்றும் இன்றும்
கீழ்கண்ட கூற்றுக்கு ஏற்றச் சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.
மாணவர்களாகிய நாம் எந்த ஒரு செயலையும் செய்யும்போது,
பெற்றோர்களிடம்______கூறவேண்டும். இல்லையேல், சிக்கலில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
ஒளிவு மறைவின்றி
நன்மை தீமைகளை
அருமை பெருமைகளை
அரை குறைகளை
சரியான விதியைத் தெரிவு செய்க.
பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது தொகுதிப் பெயர் ஆகும்.
பொருள்களைப் பலவகையாகப் பிரிப்பது தொகுதிப் பெயர் ஆகும்.
ஒரு பொருளின் பெயரைக் குறிப்பது தொகுதிப் பெயர் ஆகும்.
தொகுதியைக் குறிக்கும் பெயர் தொகுதிப் பெயர் ஆகும்
கீழ்க்காணும் செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மல்லிகா நளினமாக நாடியம் ஆடுகிறாள்.
நளினமான நாட்டியம் மல்லிகாவால் ஆடப்படும்.
நாடியம் மல்லிகாவால் நளினமாக ஆடப்படுகிறது.
நளினமான நாட்டியம் மல்லிகாவால் ஆடப்படுகிறது.
நாட்டியம் மல்லிகாவால் நளினமாக ஆடப்படும்.
கீழ்க்காணும் படத்திற்குப் பொருந்தும் தொழிற்பெயரைத் தெரிவு செய்க.
உதைக்கிறான
உதை
உதைக்க
உதைத்தல்
கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையைத் தெரிவு செய்க.
பத்மாவதி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றாள்.
பத்மாவதி
அரிவியல் துறையில்
இளங்களை பட்டம்
பெற்றாள்
இரணாடம், நான்காம் வேற்றுமை உருபுகளுக்குப் பின் வலிமிகும் விதியைக் காட்டும் வாக்கியங்களைத் தெரிவு செய்க.
i. பீமன் பலகாரங்களை விரும்பிச் சாப்பிட்டான்.
ii. தருமன் சூதாட்டத்தில் பாங்சாலியைப் பணயம் வைத்தான்.
iii. கிருஷ்ணன் அர்ஜூனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார்.
iv. பாரத போரில் கெளரவர்கள் தோற்றுப் போயினர்.
i,ii
iii, iv
ii, iii
i, iv
சேர்த்தெழுதுக.
ஒன்று + ஒன்று
ஓரொன்று
ஒவ்வொன்று
ஒன்றொன்று
ஒன்றுவொன்று
பாரதியார் உலகப் புகழ்பெற்ற கவிஞராகத் திகழ்ந்தார். _________________அவர் தன்னடக்கம் மிகுந்தவர்.
எனவே
இருப்பினும்
ஆகவே
அதற்காக
அணிற்பிள்ளை
அணி+பிள்ளை
அணிற்+பிள்ளை
அணிப்+பிள்ளை
அணில்+பிள்ளை
புறம் + நானூறு =
புறம்நானூறு
புறந்நானூறு
புறநானூறு
புறந்நானூறு
செய்வினை வாக்கியத்திற்குப் பொருத்தமான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தீபாவளிக்கு அம்மாவால் சுவையான அணிச்சல் செய்யப்பட்டது.
அம்மாவால் தீபாவளிக்குச் சுவையான அணிச்சல் செய்யப்பட்டது.
சுவையான அணிச்சல் தீபாவளிக்கு அம்மாவால் செய்யப்பட்டது.
தீபாவளி சுவையான அணிச்சல் அம்மாவால் செய்யப்பட்டது.
அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
இசை ஆசிரியர் மாணவர்களிடம், நாள்தோறும் பாடிப் பழகும்படி கூறினார்.
மாணவர்களே நாள்தோறும் பாடிப் பழகும்படி கூறினார்.
இசை ஆசிரியர் மாணவர்களே பாடி பழகுங்கள்.
"மாணவர்களே! நீங்கள் நாள்தோறும் பாடிப் பழக வேண்டும்", என்றார் இசை ஆசிரியர்.
"மாணவர்களை நாள்தோறும் பாடிப் பழக வேண்டும்" என இசை ஆசிரியர் கூறினார்.
தனக்குக் கிடைத்த வெளியூர் சென்று கல்வி கற்கும் வாய்ப்பைத் தன் நண்பன் மோகனுக்கு ______________மகிழ்ச்சியடைந்தான்.
விட்டுக்கொடுத்து
விட்டுக்கொடுத்ததில்
விட்டுக்கொடுத்து
விட்டுகொடுத்ததில்
பாட்டி தான் சமைத்த உணவைத் ___________போட்டு வேலைக்குச் செல்லும் தாத்தாவிற்குக் கொடுத்தார்.
தூக்குச் சட்டி
தூக்கு சட்டியில்
தூக்கு சட்டி
தூக்குச் சட்டியில்
கீழ்க்காண்பவற்றுள் எது திரிதல் சொற்களில் அடங்கும் ? ஒன்றைத் தவிர.
கற்றூண்
மரவேர்
பொற்றகடு
பொற்காசு
விடுபட்ட இடத்தில் சரியான நிறுத்தக் குறிகளைத் தெரிவு செய்க.
"மாலதி_________கேமரன் மலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கக் காரணம் என்ன______________" என்று வினவினாள் ராணி.
! - ?
? - !
, - ?
, - !
கீழ்க்காணும் படம் காட்டும் திணையைத் தெரிவு செய்க.
பலர்பால்
பன்மை
படர்க்கை
???????
பன்மை
அஃறிணை
உயர்திணை
தன்மை
