wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

anu1804

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் எழுத்தியல் இலக்கணத்தில் சரியானதைத் தெரிவு செய்க.

a)

மெல்லினம்

க்,ச்,ட்,த்,ப்,ற்

b)

இடையினம்

ய்,ர்,ல்,வ்,ழ்,ள்

c)

வல்லினம்

ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்

d)

அ,இ,ஃ,உ,ஞ

2.

இக்கால அருணகிரி,தெய்வக் கவிராயர் என்று போற்றப்படுபவர் யார்?

a)

தாயுமானவர்

b)

இராமலிங்க அடிகளார்

c)

குமரகுருதாசர்

3.

எட்டுத்தொகை நூல்களுள் பாண்டியர்களைப் பற்றி மட்டும் பாடும் நூல்

a)

கலித்தொகையும்,பரிபாடலும்

b)

குறுந்தொகை

c)

குறுந்தொகையும்,பதிற்றுப்பத்தும்

4.

முதலில் பதிப்பித்த காப்பியம் எது?

a)

குண்டலகேசி

b)

சீவக சிந்தாமணி

c)

வளையாபதி

5.

இரட்டை காப்பியங்கள் என்று எதனைக் கூறுவர்?

a)

மணிமேகலை

b)

இளங்கோவடிகள்

c)

சிலப்பதிகாரம்

6.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தேரிவு செய்க.

உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்

a)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

b)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

c)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

7.

கீழ்க்கண்ட குறளில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருளைத் தெரிவு

செய்க.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்

a)

பேராசை

b)

கோபம்

c)

நற்காரியம்

8.

கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி அல்ல?

a)

அச்சம் தவிர்

b)

ஊண்மிக விரும்பு

c)

ஓதுவ தொழியேல்

9.

சங்க காலத்தில் மலையும் மலையைச் சார்ந்த இடங்களையும் இவ்வாறு அழைப்பர்.

a)

முல்லை

b)

குறிஞ்சி

c)

நெய்தல்

10.

திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

a)

1330

b)

13

c)

133

11.

திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?

a)

வியாசகி

b)

வாசுகி

c)

அகல்யா

12.

படம் உணர்த்தும் உலகநீதியைத் தெரிவு செய்க.

தம்பி! நீ அந்த போக்கிரிப் பையனோடு ஊர் சுற்றுவதாகக் கேள்விப்பட்டேன்.அது நல்லதல்ல ; விட்டுவிடு.

a)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்

b)

வஞ்சனைகள் செய்வாரோடிணங்க வேண்டாம்

c)

போகாத விடத்தனிலே போகவேண்டாம்.

13.

இலக்கணப் பிழையை அடையாளம் காண்க.

வாசுகி அரிசி மூட்டையைத் தம் தோளில் சுமந்து சென்றாள்.

a)

மூட்டையைச்

b)

சுமந்து

c)

தம்

14.

சரியான பொருள் கொண்ட இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

தாயும் சேயும்- தாயும் மகளும்

b)

நன்மை தீமை- நல்லதும் தீங்கும்

c)

ஆடை அணிகலன் - உடையும் நகையும்

15.

படத்திற்கு ஏற்ற சரியான சொல் யாது?

a)

அரிதல்

b)

அறிதல்

c)

நடுதல்

16.

சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியம் எது?

a)

கோபி அந்த கடையில் பழங்கள் வாங்கினான்.

b)

முரளி எந்த பள்ளியில் பயில்கிறான்?

c)

மாலதி தனது வீட்டுப்பாடத்தைச் செய்து காட்டினாள்.

17.

வாக்கியத்திற்குச் சரியான இணைமொழியைத் தெரிவு செய்க.

-____________யாகப் பாடங்களைச் செய்திருந்த கவிதாவை ஆசிரியர் கண்டித்தார்.

a)

கல்வி கேள்வி

b)

அரை குரை

c)

மேடு பள்ளம்

18.

மெய்யெழுத்து இல்லாத சொல் யாது?

a)

படகு

b)

பிஞ்சு

c)

காய்

19.

சரியான அடிச்சொல்லைத் தெரிவு செய்க.

கொடுக்கப்பட்ட

a)

கொடுக்க

b)

கொடு

c)

கொடி

20.

சேர்ந்தெழுதுக

கல் + கோவில்

a)

கல்கோவில்

b)

கட்கோவில்

c)

கற்கோவில்

21.

திருவள்ளுவர் மொத்தம் எத்தனை குறளை இயற்றியுள்ளார்?

a)

1330

b)

1303

c)

133

22.

முப்பாநூல் என எதனைக் குறிப்பிடுவர்?

a)

திருவெண்பா

b)

திருக்குறள்

c)

திருமந்திரம்

23.

ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றை இயற்றியவர்?

a)

கண்ணகி

b)

இளங்கோவடிகள்

c)

திருவள்ளுவர்

24.

தந்தையை இப்படியும் அழைக்கலாம்.

a)

தாயார்

b)

புத்தர்

c)

தகப்பனார்

25.

கருமையாக்கப்பட்ட சொல்லுக்கு ஏற்ற வேற்றுமை உருபு சேர்த்து வாக்கியத்தை முறைப்படுத்துக.

சிறுவன் கால்கள் வலித்தன.

a)

நின்று

b)

உடைய

c)

ஓடு

26.

வேற்றுமை உருபுகள் எத்தனை வகைப்படும்?

a)

5

b)

8

c)

9

27.

செயப்பாட்டுவினையை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

படம் வரைந்த ஓவியர்.

b)

ஓவியரால் வரைந்த படம்.

c)

படம் ஓவியரால் வரையப்பட்டது.

28.

கொடுக்கப்பட்ட படத்தைப் பற்றிய மிகச் சரியான விடை எது?

a)

அஃறிணை , ஒன்றன்பால்

b)

அஃறிணை , பலர்பால்

c)

உயர்திணை , ஒன்றன்பால்

29.

பிரித்து எழுதுக.

தேவாரம்

a)

தேவா + ரம்

b)

தே+ஆரம்

c)

தே+வாரம்

30.

உயிர் எழுத்துகளின் சரியான எண்ணிக்கையைத் தெரிவு செய்க.

a)

5 குறில் 12 நெடில்

b)

7 குறில் 5 நெடில்

c)

5 குறில் 7 நெடில்