Worksheetsபடிவம் 1
Total questions: 11
Worksheet time: 6mins
1. கனத்த மழையில் நனைந்ததால் பாரதி குளிரால் _______________ வென
நடுங்கினாள்.
வெட வெட
கிடு கிடு
நச நச
கடகட
1. சீனப் பண்டிகைக் காலத்தின் போது ,அத்தியாவசியப் பொருள்களின் விலை
______________வென உயர்வு கண்டது.
கட கட
நச நச
வெட வெட
கிடு கிடு
1. கீழ்க்காணும் செய்திக்கேற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.
மக்கள் முறையான உணவு,உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம்.
நோய் நொடி
அகமும் புறமும்
கள்ளங் கபடு
தங்கு தடை
நம் நாட்டின் பிரதமர் மூவின மக்களிடையே பாகுபாடின்றி_________ பாராமல் அனைத்து உதவிகளையும் செய்கிறார்.
தங்கு தடை
உயர்வு தாழ்வு
நோய் நொடி
அகமும் புறமும்
தமிழ்மொழிக் கழகத்தின் பொங்கல் விழா எவ்வித ___________யின்றி சிறப்பாக
நடைப்பெற்றது
உயர்வு தாழ்வு
நோய் நொடி
தங்கு தடை
அகமும் புறமும்
ஐந்து ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டில் மருத்துவத்துறையில் பட்டப்படிப்பை முடித்து இல்லம் திரும்பபிய மலர் ,தன் பெற்றோரைப் பார்த்ததும்
_______________________அவர்களைக் கட்டித் தழுவிக் கொண்டாள்
பசுமரத்தாணி போல
தாயைக் கண்ட சேயைப் போல
இலைமறை காய் போல
பழம் நழுவி பாலில் விழுந்தாற் போல
அர்வின் தன் நண்பர்களுடன் நீண்ட நேரம் _________________ தேவையற்ற பேசிக் கொண்டிருந்தான்.
வாழையடி வாழை
தோள் கொடுத்தல்
ஏட்டிக்குப் போட்டி
வெட்டிப் பேச்சு
-----------------இல்லாமல் பழகும் மதியழகி அனைவராலும் பாராட்டப்பட்டாள்
உயர்வு தாழ்வு
தங்கு தடை
நோய் நொடி
சீரும் சிறப்பும்
வஞ்சக எண்ணத்துடன் நடமாடிக் கொண்டிருக்கும் கும்பலிடமிருந்து நாம் எப்போதும் விழிப்பாக இருப்பது அவசியம்.
தங்கு தடை
கள்ளங் கபடு
உயர்வு தாழ்வு
நோய் நொடி
வெளித்தோற்றத்தை நம்பி ஒருவருடன் பழகுவது எப்பொழுதுமே துன்பத்தைத் தரும் என்பதால் ஒருவரோடு பழகும்போது மன உணர்வுகளைப் புரிந்து பழகுவது நன்று.
அகமும் புறமும்
தங்கு தடை
நோய் நொடி
நோய் நொடி
செந்தமிழ் விழா பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ___________வென கருத்துகளை முன்வைத்துப் பேசிய பேச்சு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
கிடுகிடு
வெடவெட
கடகட
நசநச
