wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி செய்வினை செயப்பாட்டுவினை

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

கண்ணகி மதுரையை எரித்தாள்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

2.

திருக்குறள் உலக மக்களால் புகழப்படுகிறது.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

3.

மலேசியா ஆங்கிலேயர்களால் ஆளப்பட்டது.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

4.

ஆசிரியர் மகிழினியைப் பாராட்டுவார்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

5.

சிலை சிற்பியால் செதுக்கப்பட்டது.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

6.

மாணவர்கள் தேர்வு எழுதினர்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

7.

பாம்பு கீரிப்பிள்ளையால் துரத்தப்பட்டது.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

8.

பாடல் அருணால் பாடப்பட்டது.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

9.

காமினி கவிதையைப் புனைந்தாள்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

10.

செங்கோடன் விலங்குகளைச் சட்டவிரோதமாக வேட்டையாடுவான்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

11.

மாணவர்கள் ஆசிரியர் வழங்கிய பாடங்களைச் செய்தனர்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

12.

விமலா கைப்பேசியை எடுத்து வைக்கிறாள்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

13.

நர்மதாவின் தங்கை புத்தகத்தைக் கிழித்தாள்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

14.

பிரதமர் நாட்டை நல்வழியில் நடத்துகிறார்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

15.

தம்பி பந்தை வேகமாக அலியிடம் உதைத்தான்.

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

16.

தமிழ்மொழியில் மொத்தம் எத்தனை எழுத்துகள் உள்ளன?

a)

47

b)

147

c)

247

d)

347

17.

உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

8

b)

12

c)

16

d)

20

18.

மெய்யெழுத்துகள் எத்தனை?

a)

12

b)

14

c)

16

d)

18

19.

மெய்யெழுத்துகள் யாவை?

a)

வல்லினம், மெல்லினம், குறிலினம்

b)

இடையினம், மெல்லினம், வல்லினம்

c)

வல்லினம், இடையினம், குறிலினம்

d)

மெல்லினம், இடையினம், குறிலினம்

20.

ஓர் எழுத்தை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் குறிப்பது..

a)

குற்றெழுத்து

b)

மாத்திரை

c)

நெட்டெழுத்து

d)

மெய்யெழுத்து

21.

சரியானதைத் தேர்ந்தெடுக.

a)

க் + அ = அ

b)

க் + ஆ = ஆ

c)

அ + க் = க்

d)

க் + அ = க

22.

உயிர்மெய்க்குறில் எழுத்துகள் எத்தனை?

a)

80

b)

90

c)

100

d)

110

23.

உயிர்மெய்நெடில் எழுத்துகள் எத்தனை?

a)

126

b)

128

c)

130

d)

132

24.

பின்வருவனவற்றுள் எஃது இனவெழுத்து அல்ல.

a)

தங்கம்

b)

உணவு

c)

கன்று

d)

அம்பு

25.

சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

26.

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

27.

மருத்துவர் என்பது என்ன வகைப் பெயர்ச்சொல்?

a)

பொருட்பெயர்

b)

சினைப்பெயர்

c)

பண்புப்பெயர்

d)

தொழிற்பெயர்

28.

சீப்பு, தார், குலை, குழு போன்றன என்ன வகைப்பெயர்?

a)

பகுதிப் பெயர்

b)

விகுதிப் பெயர்

c)

தொகுதிப் பெயர்

d)

தகுதிப் பெயர்

29.

சரியானதைத் தெரிவு செய்க.

a)

முதல் வேற்றுமையில் வலிமிகும்

b)

இரண்டாம் வேற்றுமை விரியில் வலிமிகும்

c)

எட்டாம் வேற்றுமையில் வலிமிகும்

d)

ஐந்தாம் வேற்றுமையில் வலிமிகும்

30.

முகிலன்பால் அன்பு கொள்க. கோடிட்ட சொல் எந்த வேற்றுமையை ஏற்று வந்துள்ளது?

a)

இரண்டாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

ஏழாம் வேற்றுமை

31.

வினைச்சொல் குறித்த பிழையான விளக்கத்தைத் தெரிவு செய்க.

a)

வேற்றுமை உருபு ஏற்கும்

b)

காலங் காட்டும்

c)

திணை காட்டும்

d)

பால் காட்டும்

32.

என்ன வகைப் பெயர்?

a)

பொருட்பெயர்

b)

சினைப் பெயர்

c)

பண்புப்பெயர்

d)

காலப்பெயர்

33.

வினைச்சொல்லைத் தெரிவு செய்க.

a)

பாடிய

b)

பாடுகின்ற

c)

பாடும்

d)

பாடினான்

34.

'பாடல் கயல்விழியால் பாடப்பட்டது' என்பது என்ன வகை வினை?

a)

எச்ச வினை

b)

செய்வினை

c)

செயப்பாட்டுவினை

d)

பிறவினை

35.

விரைவாகச் செய்தாள். கோடிடப்பட்ட சொல் என்ன வகைச்சொல்?

a)

தன்வினை

b)

பிறவினை

c)

பெயரடை

d)

வினையடை

36.

'எனக்கு இந்நூலைத் தருக' என்பது என்ன வகை வாக்கியம்?

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

c)

விழைவு வாக்கியம்

d)

உணர்ச்சி வாக்கியம்

37.

உணர்ச்சி வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாய்ந்து போ!

b)

ம்ம்ம், என்னே சுவை!

c)

பல்லாண்டு வாழ்க!

d)

பாடம் செய்!

38.

பின்வரும் வாக்கியத்தை நேர்க்கூற்றாக மாற்றுக.

தன் திறன்பேசியை விற்கப் போவதாக மாறன் கூறினான்.

a)

நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்.

b)

"நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்" என்று மாறன் கூறினான்.

c)

"நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்," என்று கூறினான் மாறன்.

d)

"நான் என் திறன்பேசியை விற்கப் போகிறேன்." என்றான் மாறன்.

39.

செல்வன் பாடங்களை முறையாகப் படித்தான்; தேர்வினைச் சிறப்பாகச் செய்தான். இவ்வாக்கியத்தில் இடம்பெற்ற பயனிலையைத் தேர்ந்தெடுக.

a)

படித்தான், செய்தான்

b)

பாடங்களை, தேர்வினை

c)

முறையாகப், சிறப்பாகச்

d)

பாடங்களைப் படித்தான்

40.

நான் குறித்த நேரத்தில் வந்தேன்; எனினும், வளவனைக் காண முடியவில்லை. வாக்கிய வகையைத் தெரிவு செய்க.

a)

தனி வாக்கியம்

b)

தொடர் வாக்கியம்

c)

கலவை வாக்கியம்

d)

செய்தி வாக்கியம்

41.

கீழ்க்காணும் செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க. (யூ.பி.எஸ்.ஆர் 2018)


"பீர்பாலின் நகைச்சுவை அக்பர் சக்கரவர்த்தியைப் பெரிதும் கவர்ந்தது'.

a)

அக்பர் சக்கரவர்த்தி பீர்பாலின் நகைச்சுவையால் பெரிதும் கவரப்பட்டார்.

b)

அக்பர் சக்கரவர்த்தியின் நகைச்சுவையால் பீர்பால் பெரிதும் கவரப்பட்டார்.

c)

பீர்பால் அக்பர் சக்கரவர்த்தியின் நகைச்சுவையால் பெரிதும் கவரப்படுவார்.

d)

பீர்பால் நகைச்சுவையால் அக்பர் சக்கரவர்த்தி பெரிதும் கவரப்படுவார்.

42.

கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்குச் சரியான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.                                     (யூ.பி.எஸ்.ஆர் 2012)

அகத்திய முனிவர் நிறைய மருத்துவ நூல்களை எழுதினார்.

a)

மருத்துவ நூல்களை அகத்திய முனிவர் நிறைய எழுதினார்.

b)

நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதப்பட்டன.

c)

அகத்திய முனிவர் எழுதியவை நிறைய மருத்துவ நூல்கள்.

d)

நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதியவை.

43.

கீழ்க்காணும் செய்வினை வாக்கியத்திற்குப் பொருத்தமான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க. (யூ.பி.எஸ்.ஆர் 2013)


வடலூரில் வள்ளலார் சத்திய ஞானசபையை நிறுவினார்.

a)

சத்திய ஞானசபை வள்ளலாரால் வடலூரில் நிறுவப்பட்டது.

b)

வள்ளலாரின் வடலூரில் நிறுவப்பட்டது சத்திய ஞானசபை.

c)

சத்திய ஞானசபை வள்ளலாரால் நிறுவப்பட்டது வடலூரில்.

d)

வடலூரில் வள்ளலாரால் நிறுவப்பட்டது சத்திய ஞானசபை.

44.

கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான செய்வினை மற்றும் செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

குரங்கு பழத்தைப் பறித்தது.

குரங்கு பழத்தால் பறிக்கப்பட்டது.

b)

தேன்மொழி பூ மாலை தொடுத்தாள்.

பூ மாலை தேன்மொழியைத் தொடுத்தது.

c)

துளசி நடனம் ஆடினாள்.

நடனம் துளசியை ஆடியது.

d)

மாதவன் புல்லாங்குழல் ஊதினான்.

புல்லாங்குழல் மாதவனால் ஊதப்பட்டது.

45.

கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாதவியும் மாலனியும் கட்டுரை எழுதினர்.

b)

அண்ணன் மீன் தொட்டியைச் சுத்தமாகக் கழுவினான்.

c)

நாட்டுப்பற்று நாடகக் கலைஞர்களால் வளர்க்கப்பட்டது.

d)

பஞ்சப்பாண்டவர்கள் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் ஆவர்.

46.

கீழ்க்காண்பனவற்றுள் எது செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியம் அல்ல ?

a)

செய்வினை = தமிழரசி பாடம் செய்தாள்.


செயப்பாட்டுவினை = பாடம் தமிழரசிக்குச் செய்யப்பட்டது.

b)

செய்வினை = குமணன் மாம்பழம் பறித்தான்.

செயப்பாட்டுவினை = மாம்பழம் குமணனால் பறிக்கப்பட்டது.

c)

செய்வினை = ஆசிரியர் அழகியைப் பாராட்டினார்.


செயப்பாட்டுவினை = அழகி ஆசிரியரால் பாராட்டப்பட்டார்.

d)

செய்வினை = அரசு கோவில் கட்டினார்.


செயப்பாட்டுவினை = கோவில் அரசரால் கட்டப்பட்டது.

47.

செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அதிவீரராம பாண்டியர் வெற்றிவேற்கை எழுதினார்.

b)

ஆசிரியர் மாணவர்களுக்கு ஒழுக்கம் தொடர்பாக விளக்கம் அளித்தார்.

c)

கம்பர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சுற்றுலா மேற்கொண்டனர்.

d)

பழங்கள் பழத்தோட்ட உரிமையாளரால் மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

48.

கீழ்க்காணும் செயப்பாட்டுவினை வாக்கியத்திற்கு ஏற்ற செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.


நடனம் நடனக் கலைஞர்களால் சிறப்பாக ஆடப்பட்டது.

a)

கலைஞர்கள் நடனத்தைச் சிறப்பாக நடனம் ஆடினர்.

b)

நடனத்தை சிறப்பான நடனக் கலைஞர்கள் ஆடினர்.

c)

சிறப்பான நடனத்தை நடனக் கலைஞர்கள் ஆடினர்.

d)

நடனக் கலைஞர்கள் நடனத்தைச் சிறப்பாக ஆடினர்.

49.

கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான செய்வினை மற்றும் செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

வைரமுத்து கவிதை எழுதினார்.


கவிதை வைரமுத்துவால் எழுதப்படும்.

b)

மாணவர்கள் வானத்தில் பட்டம் விட்டனர்.


பட்டம் வானத்தில் மாணவர்களால் விடப்படுகின்றது.

c)

கவிநயா மர்மக் கதைப்புத்தகத்தை வாசிக்கிறாள்.


மர்மக் கதைப்புத்தகம் கவிநயாவால் வாசிக்கப்படுகிறது.

d)

அகிலன் மிதிவண்டியை வேகமாகச் செலுத்தினான்.


அகிலனால் மிதிவண்டி வேகமாகச் செலுத்தப்பட்டன.

50.

கொடுக்கப்பட்ட செய்வினை வாக்கியத்திற்கு ஏற்ற செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.


ஜெயலெட்சுமி தோட்டத்தில் பூச்செடிகளை நட்டாள்.

a)

தோட்டத்தில் பூச்செடிகளை ஜெயலெட்சுமி நட்டாள்.

b)

பூச்செடிகள் ஜெயலெட்சுமியால் தோட்டத்தில் நடப்பட்டது.

c)

ஜெயலெட்சுமி பூச்செடிகளைத் தோட்டத்தில் நட்டாள்.

d)

பூச்செடிகளால் ஜெயலெட்சுமி தோட்டத்தில் நடப்பட்டாள்.