wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி புதிர்

Total questions: 30

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்.

கோடிட்ட சொல்லின் பொருள் :

a)

துன்பம்

b)

இன்பம்

2.

இவற்றில் எது புதிய ஆத்திசூடி ?

a)

ஈகை திறன்

b)

ஒப்புர வொழுகு

c)

ஏற்ப திகழ்ச்சி

d)

உடையது விளம்பேல்

3.

பொருத்தமான இணைமொழியைத் தெரிவு செய்க

a)

தாயும் சேயும்

b)

அல்லும் பகலும்

c)

ஆடை அணிகலன்

d)

ஆடல் பாடல்

4.

சரியான இடைச்சொல்லைத் தேர்ந்தெடு.


பார்வதி வேகமாக ஓடினாள். _____________________ முதல் இடத்தைப் பெறவில்லை.

a)

எனவே

b)

ஆகவே

c)

இருப்பினும்

d)

ஏனென்றால்

5.

10.கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்குச் சரியான

செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க


அகத்திய முனிவர் நிறைய மருத்துவ நூல்களை எழுதினார்.

a)

A. மருத்துவ நூல்களை அகத்திய முனிவர் நிறைய எழுதினார்.

b)

B நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதப்பட்டன.

c)

C அகத்திய முனிவர் எழுதியவை நிறைய மருத்துவ நூல்கள்.

d)

D. நிறைய மருத்துவ நூல்கள் அகத்திய முனிவரால் எழுதியவை

6.

சரியான எழுத்துக்கூட்டலைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

மூன்ரு

b)

நாங்கு

c)

பள்ளம்

7.

நெடுங்கணக்கில் 126 எழுத்துகள் _______________ எழுத்து ஆகும்.

a)

உயிர்மெய் நெடில்

b)

உயிர்மெய்க் குறில்

c)

உயிர்மெய் எழுத்து

d)

ஆய்த எழுத்து

8.

"அக்கா பூ பறித்தாள்". எனும் வாக்கியம் உணர்த்தும் காலம்

a)

நிகழ்காலம்

b)

எதிர்காலம்

c)

இறந்தகாலம்

9.

"கமலா கடைக்கு சென்றாள்". எனும் வாக்கியத்தில் எழுவாய்

a)

கடைக்கு

b)

சென்றாள்

c)

கமலா

10.

படத்திற்குகேற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

அறம் செய விரும்பு

b)

ஈவது விளக்கேல்

c)

உடையது விளம்பேல்

11.

பால் எத்தனை வகைப்படும்?

a)

3

b)

2

c)

5

12.

1. கீழ்க்காணும் வாக்கியத்தில் காணப்படும் காலப்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.


கோரனி நச்சுச் தொற்றின் தாக்கம் அடுத்த வருடம் வரை நீடிக்கலாம் என உலகச் சுகாதார அமைப்பு கணித்துள்ளது.

a)

கோரனி

b)

வருடம்

c)

சுகாதார அமைப்பு

d)

உலக

13.

காற்பந்து போட்டியாளர்கள் அனைவரும் _________ திறமையை வெளிப்படுத்தினர்.

a)

தன்

b)

தம்

c)

அவர்கள்

d)

தன்னுடைய

14.

கோடிடப்பட்டுள்ள சொற்கள் ஏற்று வந்துள்ள வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக்கவும்.


அந்தக் கைவினைப்பொருள்கள் மரத்தால் செய்யப்பட்டவை.

a)

மூன்றாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

ஐந்தாம் வேற்றுமை

d)

ஆறாம் வேற்றுமை

15.

திரு கணேசன் விசாரிக்காமல் பணத்தை வியாபாரத்தில் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார்.


கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெர்வு செய்க

a)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

b)

வெள்ளம் வருமுன் அணைபோடு

c)

புத்திமான் பலவான்

d)

ஆழம் அறியாமல் காலை விடாதே

16.

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

_______________________________________

a)

எழுமையும் ஏமாப் புடைத்து

b)

மாடல்ல மற்ற யவை

c)

தீமை இலாத சொலல்

d)

தீயினும் அஞ்சப் படும்

17.

அனைத்து செல்வங்களைவிட அழியாத செல்வமாகத் திகழ்வது கல்விச் செல்வமே.


மேற்காணும் பொருளுக்கேற்ற திருக்குறளின் இரண்டாவது அடியைத் தெர்வு செய்க.

a)

தீயினும் அஞ்சப் படும்

b)

ஞாலத்தின் மாணப் பெரிது

c)

மாடல்ல மற்றை யவை

18.

கோபங்கொண்டோர் வீட்டின் வழியே போக வேண்டாம்


மேற்கண்ட பொருளுக்கு ஏற்ற உலகநீதி யாது

a)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.

b)

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்

c)

சினந்திருந்தார் வாசல்வழிச் சேறல் வேண்டாம்

d)

தருமத்தை யொருநாளும் மறக்க வேண்டாம்.

19.

வாய்மை எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

மாற்றம்

b)

உண்மை

c)

பொய்

d)

வண்ணம்

20.

1. மரபுத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.


பெயர் பொறித்தல்

a)

உறுதியாக

b)

ஏதாவது காரணம் கூறித் தவிர்த்தல்

c)

புகழை நிலைநாட்டுதல்

21.

இ + தோட்டம்

a)

இத்தோட்டம்

b)

இதோட்டம்

c)

இக்தோட்டம்

22.

7. உலகநீதிக்கு ஏற்ற பொருளை எழுதுக.


மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.

a)

பகைவன் உறவு கொண்டாலும் அவனை நம்பக்கூடாது.

b)

மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்.

23.

திரிதல் விகாரப் புணர்ச்சி


மண் + குடம் =

a)

மண்குடம்

b)

மற்குடம்

c)

மட்குடம்

24.

11. அப்படி + சொல் =

a)

அப்படிசொல்

b)

அச்சொல்

c)

அப்படிச்சொல்

25.

14. சூழலுக்கு ஏற்ற பழமொழியைக் கூறுக.


பள்ளித் தேர்வுகளுக்கு முன்பாகவே மாணவர்கள் எல்லாப் பாடங்களையும் மீள்பார்வை செய்து தங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டால் தோல்வி என்பது அவர்களை நிச்சயம் நெருங்காது.

a)

ஆழம் அறியாமல் காலை விடாதே

b)

வெள்ளம் வருமுன் அணை போடு

c)

ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால்

26.

16. இன்று + கொடுத்தாள் =

a)

இன்று கொடுத்தாள்

b)

இன்றுக்கொடுத்தான்

c)

இகொடுத்தான்

27.

பேராசிரியர் முருகன் அவ்வூரில் ............................................ நிறைந்தவர்.

a)

பேரும் புகழும்

b)

குற்றம் குறை

c)

கல்வி கேள்வி

d)

அரை குறை

28.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம்

a)

216

b)

190

c)

247

29.

ஔவையார் எழுதிய நூல்கள் யாவை?

a)

புதிய ஆத்திசூடி

b)

ஆத்திசூடி

c)

கொன்றை வேந்தன்

d)

நல்வழி

e)

மூதுரை/வாக்குண்டாம்

30.

கேள்வி 4-7 சரியான வினாச் சொற்களை எழுதுக.

________________ சேமிப்பு பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும்?

a)

ஏன்

b)

என்ன

c)

எப்படி