wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எச்சம்

Total questions: 26

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

சரியான பெயரெச்சம் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

குமணன் அமணனும் சகோதரர்கள்.

b)

மாமா வாங்கிய பொம்மை உடைந்து விட்டது.

c)

நம்பியாண்டார் நம்பி  பாடலுக்கு இறைவன் இரங்கி வந்தார்.

d)

நம் நாட்டில் மங்களம் அம்மையாரின் சேவை போற்றத் தக்கது.

2.

சரியான பெயரெச்சம் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

ஆட்டிய கொடி

b)

கொடியை ஆட்டினார்கள்

c)

கொடியோடு ஆடினார்கள்

d)

ஆட்டி மகிழ்ந்தார்கள்

3.

சரியான வினையெச்சம் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

பாவணன் பள்ளி பேருந்துக்காக வாசலில் காத்திருந்தான்

b)

முத்துக்குமாரன் எழுதிய கவிதை அனைவரையும் கவர்ந்தது.

c)

அமிழ்தன் குறுக்கோட்டப் போட்டியை முதல் நிலையில் ஓடி முடித்தான்.

d)

முகிலா அழகிய கோலம் இட்டாள்.

4.

இச்சொற்றொடர் எவ்வகையைச் சார்ந்தது?

வென்ற தலைவன்

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

c)

பெயரடை

d)

வினையடை

5.

சரியான பெயரெச்சம் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

திகழினி பேசிய உரையைக் கேட்டு அனைவரும் கை தட்டினர்.

b)

மாளவன் சேவலை துரத்திப் பிடித்தான்.

c)

செந்தமிழ் விழாவில் அதிகமான போட்டிகள் நடத்தப்பட்டன.

d)

பாலர் பள்ளி மாணவர்கள் அரங்கத்தைச் சுற்றி ஆடிப் பாடினர்

6.

 

 கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொற்களுக்குப் பொருத்தமான எச்சத்தைத் தெரிவு செய்க

மலர்ந்த முகத்துடன் கிராம மக்கள் வேலை செய்வதைக் கண்டு மகிழ்ந்தேன்.

a)

வினையெச்சம், பெயரெச்சம்

b)

வினையெச்சம், வினையெச்சம்

c)

பெயரெச்சம், பெயரெச்சம்

d)

பெயரெச்சம், வினையெச்சம்

7.

வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல்லுக்கு ஏற்ற சரியான விடையைத்         

      தெரிவு செய்க.

கயல்விழி பூங்காவில் வேகமாக ஓடிய சிறுவர்களைக் கண்டாள்.

a)

வினைச்சொல்

b)

பெயர்ச்சொல்

c)

பெயரெச்சம்

d)

வினையெச்சம்

8.

11. படத்திற்குப் பொருத்தமான பெயரெச்சத்தைத் தெரிவு செய்க.

a)

உதைத்த பந்து

b)

பந்தை உதைத்தான்

c)

பந்து விளையாடினர்

d)

உதைத்து விளையாடினர்

9.

வாக்கியத்தில் பெயரெச்சத்தை விளக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

கீழே விழுந்த மாணவனை ஆசிரியர் தூக்கினார்.

a)

தூக்கினார்.

b)

ஆசிரியர்

c)

விழுந்த

d)

கீழே

10.

சரியான வினையெச்சத்தைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

குயவன் பானைகளை வனைந்து முடித்தான்.

b)

குயவன் வனைந்த பானைகள் விற்கப்பட்டன.

c)

குயவன் பானைகளைக் கவனமாக வனைந்தான்.

11.

கபிலன் ___________________ வார்த்தை அவன் தாயின் மனத்தை ________________ செய்தது. *

a)

பேசிய .......... நெகிழ்ந்த

b)

பேசிய ........... நெகிழச்

c)

பேசி ......... நெகிழ்

12.

கீழ்க்காண்பனவற்றுள் பெயரெச்சத்தைக் காட்டும் சொற்றொடரைத் தெரிவு செய்க.


மாலை வேளையில் வீசிய காற்று இதமாக இருந்ததால், யாமினி அதிக நேரம் கடற்கரையோரமாக நடந்தாள். *

a)

மாலை வேளையில்

b)

அதிக நேரம்

c)

இதமாக இருந்ததால்

d)

வீசிய காற்று

13.

ஆஸ்ட்ரோ வானவில் பாடல் போட்டியில் மிக இனிமையாகப்_____________ இளைஞர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.

a)

பாடிய

b)

பாடும்

c)

பாடினான்

d)

பாடல்

14.

எச்சம் என்றால் என்ன?

a)

முற்றுப்பெற்ற வினைச்சொல்

b)

வினைச்சொல்லுடன் பெயர்சொல் இணைதல்

c)

முற்றுப்பெறாத வினைச்சொல்

15.

ரவி கிழிந்த சட்டையை அணிந்து பள்ளிக்குச் சென்றான்.


மேற்காணும் வாக்கியத்தில் பெயரெச்சத்தைக் குறிக்கும் சொற்றொடரைத் தெரிவு செய்க.

a)

பள்ளிக்குச் சென்றான்

b)

கிழிந்த சட்டை

c)

சட்டையை அணிந்து

16.

பறவைகள் வானில் பறந்து திரிந்தன.


கோடிடப்பட்டச் சொல் குறிக்கும் எச்சம் எது?

a)

பெயரெச்சம்

b)

வினையெச்சம்

17.

கபிலன் ___________________ வார்த்தை அவன் தாயின் மனத்தை ________________ செய்தது. *

a)

பேசிய .......... நெகிழ்ந்த

b)

பேசிய ........... நெகிழச்

c)

பேசி ......... நெகிழ்

18.

கீழ்க்காண்பனவற்றுள் பெயரெச்சத்தைக் காட்டும் சொற்றொடரைத் தெரிவு செய்க.


மாலை வேளையில் வீசிய காற்று இதமாக இருந்ததால், யாமினி அதிக நேரம் கடற்கரையோரமாக நடந்தாள். *

a)

மாலை வேளையில்

b)

அதிக நேரம்

c)

இதமாக இருந்ததால்

d)

வீசிய காற்று

19.

ஆஸ்ட்ரோ வானவில் பாடல் போட்டியில் மிக இனிமையாகப்_____________ இளைஞர் முதல் பரிசைத் தட்டிச் சென்றார்.

a)

பாடிய

b)

பாடும்

c)

பாடினான்

d)

பாடல்

20.

மாடியிலிருந்த மூவரும் அருகிலிருந்த நகரும் படிக்கட்டில் ______________ வந்தனர்.

a)

இறங்கு

b)

இறங்கிய

c)

இறங்கி

d)

இறங்கின

21.

மங்கையின் நகைச்சுவைப் பேச்சு அவளது தோழி சுமதியைச் ______________வைத்தது. *

a)

சிரித்து

b)

சிரிக்க

c)

சிரிப்பு

d)

சிரித்த

22.

கீழ்க்காண்பனவற்றுள் எது பெயரெச்ச வாக்கியமாகும்?

a)

வாணி பூச்சரத்தைக் கட்டி முடித்தாள்.

b)

தாய் பசுவைப் பிரிந்த கன்று கத்தித் தவித்தது.

c)

இராஜ ராஜ சோழன் தஞ்சைக் கோவிலைக் கட்டி முடித்தார்.

d)

நீர் வீழ்ச்சியில் சிறுவர்கள் நீந்தி விளையாடினர்.

23.

வினையெச்ச வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அணில் பழத்தைக் கொறித்துத் தின்றது.

b)

மலருக்கு அவளின் அம்மா தந்த கொலுசு மிகவும் அழகாக இருந்தது

c)

கவிஞர் கண்ணதாசன் புனைந்த பாடல்கள் கருத்து ஆழமிக்கவை

d)

வளர்மதி தீட்டிய ஓவியம் மிகவும் அழகாக இருந்தது.

24.

திரையில் எம்.ஜி.இராமசந்திரன்_________________________அநேக பாடல்கள் மாணவர்களின் தன்முனைப்பைத் தூண்டுபவைகளாக அமைந்திருந்தன.

a)

ஆடிய

b)

கூறிய

c)

பேசிய

d)

பாடிய

25.

அந்தத் தோட்டக்காரர் தன் தோட்டத்தில் நட்ட வெண்டைச் செடிக்கு நீர் ஊற்றாததால், வாடியது.

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

c)

வினையடை

d)

பெயரடை

26.

வெற்றி பெற்றுத்திரும்பும் விளையாட்டாளர்களைக் __________________ மக்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

a)

கண்ட

b)

காணும்

c)

காண

d)

கண்டு