wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஒளியியல்

Total questions: 25

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?

a)

அ) A

b)

ஆ) B

c)

இ) C

d)

ஈ) D

2.

பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப் பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு____.

a)

அ) f

b)

ஆ) ஈறிலாத் தொலைவு

c)

இ) 2f

d)

ஈ) f க்கும் 2f க்கும் இடையில்

3.

மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது______.

a)

அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்

b)

ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

c)

இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்

d)

ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்.

4.

குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ____ மதிப்புடையது.

a)

அ) நேர்க்குறி

b)

ஆ) எதிர்க்குறி

c)

இ) நேர்க்குறி (அ) எதிர்க்குறி

d)

ஈ) சுழி

5.

ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய் பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம் _____.

a)

அ) முதன்மைக் குவியம்

b)

ஆ) ஈறிலாத் தொலைவு

c)

இ) 2f

d)

ஈ) fக்கும் 2f க்கும் இடையில்

6.

ஒரு லென்சின் திறன் – 4D எனில் அதன் குவியத் தொலைவு____.

a)

அ) 4 மீ

b)

ஆ) – 40 மீ

c)

இ) -0.25 மீ

d)

ஈ) -2.5 மீ.

7.

கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பமானது ______ தோற்றுவிக்கப்படுகிறது.

a)

அ) விழித்திரைக்குப் பின்புறம்

b)

ஆ) விழித்திரையின் மீது

c)

இ) விழித்திரைக்கு முன்பாக

d)

ஈ) குருட்டுத் தானத்தில்

8.

விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது____.

a)

அ) குவி லென்சு

b)

ஆ) குழி லென்சு

c)

இ) குவி ஆடி

d)

ஈ) இரு குவிய லென்சு

9.

சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?

a)

அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு

b)

ஆ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு

c)

இ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு

d)

ஈ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு

10.

ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் திசைவேகங்கள் VB,VG, VR எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சரியானது?

a)

அ) VB = VG = VR

b)

ஆ) vB > VG > VR

c)

இ) VB < VG < VR

d)

ஈ) vB < VG > VR

11.

ஒளி செல்லும் பாதை (a)   என்று அழைக்கப்படுகிறது.

12.

ஒரு ஒளிபுகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட (a)  

13.

படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது (a)   சிதறல் எனப்படும்.

14.

ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது, படுகின்ற ஒளிக்கதிரின்ன் (a)   ன் நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும்.

15.

(a)   கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

16.

அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதை விட அதிகமாக இருக்கும்.

a)

சரி

b)

தவறு

17.

லென்சின் திறனானது லென்சின் குவிய தொலைவைச் சார்ந்தது.

a)

சரி

b)

தவறு

18.

விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால் தூரப்பார்வை ஏற்படுகிறது

a)

சரி

b)

தவறு

19.

குவிலென்சானது, எப்போதும் சிறிய மாய பிம்பத்தையே உருவாக்கும்.

a)

சரி

b)

தவறு

20.
a)

1-இ,2-அ,3-உ,4-ஆ,5-ஈ

b)

1-ஈ,2-அ,3-உ,4-ஆ,5-இ

c)

1-ஈ,2-ஆ,3-உ,4-அ,5-இ

d)

1-ஈ,2-அ,3-இ,4-ஆ,5-உ

21.

கூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் (அடர்வுமிகு ஊடகம்), அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.காரணம்: ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.

a)

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.

b)

ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.

c)

இ கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று

d)

ஈ. கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

22.

கூற்று: விழி லென்சின் குவிக்கும் திறன் அதிகரிப்பதால், கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாடு தோன்றுகிறது.காரணம்: குழிலென்சைப் பயன்படுத்தி கிட்டப்பார்வைக் குறைப்பாட்டைச் சரிசெய்யலாம்.

a)

(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்

b)

(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று

c)

(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.

d)

(ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.

23.

அடர்வு மிகு ஊடகத்தில் ஒளியின் திசைவேகமானது, அடர்வு குறை ஊடகத்தில் இருப்பதைவிட ______ இருக்கும்.

a)

அதிகமாக

b)

குறைவாக

c)

சமமாக

24.

விழிலென்சின் குவிக்கும் திறன் ______ தூரப்பார்வை ஏற்படுகிறது.

a)

குறைவதால்

b)

அதிகரிப்பதால்

25.

______ எப்போதும் சிறிய மாயபிம்பத்தை தரும்.

a)

குவிலென்சானது

b)

குழிலென்சானது