NEW
Font size
Worksheetsஅணுக்களும் மூலக்கூறுகளும்
Total questions: 20
Worksheet time: 10mins
கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது?
6.023 × 1023 ஹீலியம் அணுக்கள்
1ஹீலியம் அணு
2 கி ஹீலியம் அணு
1 மோல் ஹீலியம் அணு
கீழ்க்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?
அ) குளுகோஸ்
ஆ) ஹீலியம்
இ) கார்பன்டை ஆக்சைடு
ஈ) ஹைட்ரஜன்
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2-ன் பருமன்
அ) 22.4 லிட்டர்
ஆ) 2.24 லிட்டர்
இ) 0.24 லிட்டர்
ஈ) 0.1 லிட்டர்
1 மோல் நைட்ரஜனின் அணுவின் நிறை
அ) 28 amu
ஆ) 14 amu
இ) 28 கி
ஈ) 14 கி
1 amu என்பது________.
அ) C-12ன் அணுநிறை
ஆ) ஹைட்ரஜனின் நிறை
இ) ஒரு C-12ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை
ஈ) 0-16ன் அணு நிறை
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது?
அ) 12 கிராம் C-12 ஆனது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஆ) ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
இ) ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஈ) ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.
திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்____.
அ) 11.2 லிட்ட ர்
ஆ) 5.6 லிட்டர்
இ) 22.4 லிட்டர்
ஈ) 44.8 லிட்டர்
20Ca40 தனிமத்தின் உட்கருவில்____.
அ) 20 புரோட்டான் 40 நியூட்ரான்
ஆ) 20 புரோட்டான் 20 நியூட்ரான்
இ) 20 புரோட்டான் 40 எலக்ட்ரான்
ஈ) 20 புரோட்டான் 20 எலக்ட்ரான்
ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை___.
அ) 16 கி
ஆ) 18 கி
இ) 32 கி
ஈ) 17 கி
1 மோல் எந்த ஒரு பொருளும் ____மூலக்கூறுகளைக் கொண்டிருக்கும்.
அ) 6.023 × 1023
ஆ) 6.023 × 10-23
இ) 3.0115 × 1023
ஈ) 12.046 × 1023
ஒரே ____ எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
புரோட்டான்
எலக்ட்ரான்
புரோட்டான் மற்றும் எலக்ட்ரான்
ஹைட்ரஜனின் சராசரி அணு நிறை = ………
1.008 amu
100.8 amu
10.08 amu
1.008
திட்ட வெப்ப அழுத்த நிலையில் ……………. மி.லி. இடத்தை அடைத்துக்கொள்ளக்கூடிய வாயு 1 மோல் எனப்படும்.
22400
2.24
22.4
2240
பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் = ……….
5
6
4
3
1-அ,2-இ,3-உ,4-ஆ,5-ஈ
1-ஆ,2-இ,3-அ,4-உ,5-ஈ
1-ஆ,2-ஈ,3-உ,4-அ,5-இ
1-ஆ,2-இ,3-உ,4-அ,5-ஈ
CO2ன் மூலக்கூறு நிறை ____ கி.
42
44
46
64
கூற்று A: அலுமினியத்தின் ஒப்பு அணுநிறை 27.
காரணம் R: ஒரு அலுமினியம் அணுவின் நிறையானது 1/12 பங்கு கார்பன்-12ன் நிறையைவிட 27 மடங்கு அதிகம்.
அ) A மற்றும் R சரி. R, A ஐ விளக்குகிறது
ஆ) A சரி R தவறு.
இ) A தவறு R சரி.
ஈ) A மற்றும் R சரி. R, Aக்கான சரியான விளக்கம் அல்ல.
கூற்று A: குளோரினின் ஒப்பு மூலக்கூறு நிறை 35.5 amu.
காரணம் R: குளோரினின் ஐசோடோப்புகள் இயற்கையில் சம அளவில் கிடைப்பதில்லை.
அ) A மற்றும் R சரி. R, A ஐ விளக்குகிறது
ஆ) A சரி R தவறு.
இ) A தவறு R சரி.
ஈ) A மற்றும் R சரி. R, Aக்கான சரியான விளக்கம் அல்ல.
ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின்
அணுக்களால் உருவாக்கப்பட்டால் அவை
__________ எனப்படும்.
ஓரணு மூலக்கூறு
வேற்று அணு மூலக்கூறு
ஒத்த அணு மூலக்கூறு
பல அணு மூலக்கூறு
நீரின் கிராம் மூலக்கூறு நிறை _____.
81 கி
44 கி
18 கி
28 கி
