NEW
Font size
Worksheets9,10-கரைசல்கள்,வேதிவினைகளின் வகைகள்
Total questions: 20
Worksheet time: 10mins
நீரில் கரைக்கப்பட்ட உப்பு கரைசல் என்பது ____கலவை
ஒருபடித்தான
பலபடித்தான
ஒருபடித்தான மற்றும் பல்படிதானவை
ஒருபடித்தானவை அல்லாதவை
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை____
2
3
4
5
கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது____
அசிட்டோன்
பென்சீன்
நீர்
ஆல்கஹால்
குறிப்பிட்ட வெப்பநிலையில் குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க முடியாத கரைசல்____எனப்படும்.
தெவிட்டிய கரைசல்
தெவிட்டாத கரைசல்
அதி தெவிட்டிய கரைசல்
நீர்த்த கரைசல்
நீரற்ற கரைசலை அடையாளம் காண்க.
நீரில் கரைக்கப்பட்ட உப்பு
நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்
நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்
கார்பன்-டை- சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்
குறிப்பிட்ட வெப்பநிலையில் அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன்____
மாற்றுமில்லை
அதிகரிக்கிறது
குறைகிறது
வினை இல்லை
100கி நீரில் சோடியம்குளோரைடின் கரைதிறன் 36கி 25கி சோடியம் குளோரைடு 100 மி லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும்____
12 கி
11கி
16கி
20கி
25% ஆல்கஹால் கரைசல் என்பது____
100மிலி நீரில் 25மிலி ஆல்கஹால்
25மிலி நீரில் 25 மிலி ஆல்கஹால்
75மிலி நீரில் 25மிலி ஆல்கஹால்
25மிலி நீரில் 75மிலி ஆல்கஹால்
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் ____
ஈரம் மீது அதிக நாட்டம்
ஈரம் மீது குறைந்த நாட்டம்
ஈரம் மீது நாட்டம் இன்மை
ஈரம் மீது மந்தத்தன்மை
கீழ்க்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது
ஃபெரிக் குளோரைடு
காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்
சிலிக்கா ஜெல்
இவற்றுள் எதுமில்லை
H 2(g)+Cl 2(g) →2HCl (g) என்பது
சிதைவுறுதல் வினை
சேர்க்கை வினை
ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
இரட்டை இடப்பெயர்ச்சி வினை
ஒளிச்சிதைவு என்பது இதனால் நடைபெறும் சிதைவு வினையாகும்.
வெப்பம்
மின்னாற்றல்
ஒளி
எந்திர ஆற்றல்
கார்பன் மற்றும் ஆக்சிசன் இடையேயான ஒரு வினை பின்வருமாறு குறிக்கப்படுகிறது.Cs +O2 (g) →CO 2(g) இது எவ்வகை வினையாக வகைப்படுத்தப் படுகிறது.(i)சேர்க்கை வினை (ii) எரிதல் வினை ( iii) சிதைவுறுதல் வினை (iv) மீளா வினை
(i) மற்றும் (ii)
(i) மற்றும் (iv)
(i),(ii) மற்றும் (iii)
(i),(ii) மற்றும் (iv)
Na 2 SO 4(aq) +BaCl 2(aq) →BaSo 4(s) ↓+2NaCl(aq) என்பது வேதிச்சமன்பாடு பின்வருவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது.
நடுநிலையாக்கல் வினை
எரிதல் வினை
வீழ்படிவாதல் வினை
ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
வேதிச்சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
(i)இயக்கத்தன்மை உடையது.
(ii)சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்நோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.
(iii)மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை.
(iv)வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்களில் செறிவு வேறுபடலாம்.
(i),(i) மற்றும் (iii)
(i),(ii) மற்றும் (iv)
(ii),(iii) மற்றும் (iv)
(i),(iii) மற்றும் (iv)
X(s)+2HCl(aq) →XCl 2(aq) +H 2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது.
(i)Zn (ii)Ag (iii)Cu (iv)Mg சரியான இணையைத் தேர்ந்தெடு.
(i) மற்றும் ( ii)
(ii) மற்றும் (iii)
(iii) மற்றும் (iv)
(i) மற்றும் (iv)
பின்வருவற்றுள் எது "தனிமம்+தனிமம் →சேர்மம்" வகை அல்ல.
C(s) +O2(g) →CO 2(g)
2K(s)+Br 2(1) →2KBr (s)
2CO(g) +O2 (g) →2CO 2(g)
4Fe (s) +3O 2(g) →2Fe 2 O 3(s)
பின்வருவனவற்றுள் எது வீழ்படிவதால் வினையை குறிக்கிறது.
A(s) +B(s) →C (s) +D (s)
A(s) +B(aq) →C (aq) +D (l)
A (aq) +B (aq) →C (s) +D (aq)
A(aq) +B (s) →C (aq) +D (l)
ஒரு கரைசலில் PH மதிப்பு 3எனில்,அதன் (OH)- ஹைடிராக்சைடு அயனி செறிவு என்ன?
1*10-3
3M
1*10 -11 M
11M
தூளாக்கப்பட்ட CaCo 3,கட்டியான CaCo 3 விட தீவிரமாக வினைபுரிகிறது.காரணம்
அதிக புறப்பரப்பளவு
அதிக அழுத்தம்
அதிக செறிவினால்
அதிக வெப்பநிலை
