wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

7,8 - அணுக்களும் மூலக்கூறுகளும், தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கீழ்க்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது.

a)

6.023 × 1023 ஹீலியம் அணுக்கள்

b)

1 ஹீலியம் அணு

c)

2 கி ஹீலியம்

d)

1 போல் ஹீலியம் அணு

2.

கீழ்க்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

a)

குளுக்கோஸ்

b)

ஹீலியம்

c)

கார்பன் டை ஆக்ஸைடு

d)

ஹைட்ரஜன்

3.

திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 பருமன்

a)

22.4 லிட்டர்

b)

2.24 லிட்டர்

c)

0.24 லிட்டர்

d)

0.1 லிட்டர்

4.

1 மோல் நைட்ரஜன் அணுவின் நிறை

a)

28 amu

b)

14 amu

c)

28 கி

d)

14 கி

5.

1 amu என்பது

a)

C-12 ன் அணுநிறை

b)

ஹைட்ரஜன் அணுநிறை

c)

ஒரு C- 12 ன் அணுநிறையில் 1/12 பங்கின் நிறை

d)

O-16 ன் அணு நிறை

6.

கீழ்க்கண்டவற்றுள் தவறான கூற்று எது .

a)

12 கிராம் C -12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.

b)

ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளை கொண்டது.

c)

ஒரு மோல் ‌க்ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது

d)

ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023× 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.

7.

திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன்

a)

11.2 லிட்டர்

b)

5.6 லிட்டர்

c)

22.4 லிட்டர்

d)

44.8 லிட்டர்

8.

20Ca40 தனிமத்தின் உட்கருவில்

a)

20 புரோட்டான் 40 நியூட்ரான்

b)

20 புரோட்டான் 20 நியூட்ரான்

c)

20 புரோட்டான் 40 எலக்ட்ரான்

d)

20 புரோட்டான் 20 எலக்ட்ரான்

9.

ஆக்சிஜனின் கிராம் மூலக்கூறு நிறை

a)

16 கி

b)

18 கி

c)

32 கி

d)

17 கி

10.

1 மோல் எந்த ஒரு பொருளும் ----- மூலக்கூறுகளை கொண்டிருக்கும்.

a)

6.023× 1023

b)

6.023× 10-23

c)

3.0115× 1023

d)

12.046× 1023

11.

ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொடர்கள் மற்றும் தொகுதிகள் எண்ணிக்கை --------

a)

6,16

b)

7,17

c)

8,18

d)

7,18

12.

நவீன ஆவர்த்தன விதியின் அடிப்படை -------

a)

அணு எண்

b)

அணு நிறை

c)

ஐசோடோப்பின் நிறை

d)

நியுட்ரானின் எண்ணிக்கை

13.

ஹேலஜன் குடும்பம் எந்த தொகுதியைத்ஸசேர்ந்தது.

a)

17வது.

b)

15 வது

c)

18வது

d)

16வது

14.

-------- என்பது ஒப்பிட்டு ஆவர்த்தன் பண்பு

a)

அணு ஆரம்

b)

அயனி ஆரம்

c)

எலக்ட்ரான் நாட்டம்

d)

எலக்ட்ரான் கவர் தன்மை

15.

துருவின் வாய்ப்பாடு

a)

FeO.×H2O

b)

FeO4. × H2O

c)

Fe2O3.× H2O

d)

FeO

16.

அலுமினோ வெப்ப வினையில் அலுமினியத்தின் பங்கு ---------

a)

ஆக்ஸிஜனேற்றி

b)

ஆக்ஸிஜன் ஒடுக்கி

c)

ஹைட்ரஜனேற்றி‌

d)

சல்பர் ஏற்றி

17.

மெல்லிய படலமாக துத்தநாக பணிவை, பிற உலோகத்தின் மீது ஏற்படுத்தும் நிகழ்வு -------

a)

வர்ணம் பூசுதல்

b)

நாகமுலாமிடல்

c)

மின்முலாம் பூசுதல்

d)

மெல்லியதாக்கல்

18.

கீழ்க்கண்ட மந்த வாயுக்களில் எது வெளிப்புற ஆற்றல் மட்டத்தில் இரண்டு எலக்ட்ரான்களைக் கொண்டது

a)

He

b)

Ne

c)

Ar

d)

Kr

19.

நியான் வாயுவின் எலக்ட்ரான் நாட்டம் பூஜ்ஜியம் ஆக காரணம் ------

a)

நியுட்ரானின் உறுதியான வரிசை அமைப்பு

b)

எலக்ட்ரானிக் உறுதியான கட்டமைப்பு

c)

குறைந்த உருவளவு

d)

அதிக அடர்த்தி

20.

இரசக்கலவை உருவாக்கலில் தேவைப்படும் முக்கியமான உலோகம்.

a)

Ag

b)

Hg

c)

Mg

d)

Al