Worksheetsதமிழ் மொழி
Total questions: 20
Worksheet time: 10mins
1. ஆசிரியர் கோபத்தால் பற்களை ________ என கடித்தார்.
நறநற
திருதிரு
மளமள
கலகல
2.கோடிடப்பட்ட சொல் எந்தக் காலத்தைக் குறிக்கிறது?
அமரன் திடலில் ஓடினான்
நிகழ்காலம்
இறந்தகாலம்
எதிர்காலம்
வருங்காலம்
3. வாக்கியத்தில் செயப்படுபொருளைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
கோகுலன் அழகான ஓவியம் வரைந்தான்.
கோகுலன்
அழகான
ஓவியம்
வரைந்தான்
4. கீழ்க்கண்ட புதிய ஆத்திசூடியை நிறைவு செய்க.
இளைத்தல் _____________
இகழ்ச்சி
திறன்
விளம்பேல்
விரும்பு
5. கீழ்க்காண்பனவற்றுள் எது சினைப்பெயர்?
வண்டு
துண்டு
தண்டு
குண்டு
6. ஆடுகள் புல் வெளியில் _______________
மேய்கிறது
மேய்கின்றது
மேய்கின்றன
மேயும்
7. ____________ காலையில் கூவியது.
யானை
குரங்கு
சேவல்
வாத்து
8. பள்ளி விடுமுறையில் _____________ போனாய்?
எப்பொழுது
எவ்வளவு
எங்கு
எத்தனை
9. குழந்தைகள் _____________ எனச் சிரித்தனர்.
கலகல
சலசல
கிலுகிலு
நறநற
10. எழுவாயைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.
கண்ணதாசன் தத்துவப் பாடல்களைப் பாடினார்.
கண்ணதாசன்
தத்துவப்
பாடல்களைப்
பாடினார்
11. குளத்தில் மீன்கள் ____________
நீந்தின
பறந்தன
12. பழுத்த பலா __________ வீசியது.
மணம்
மனம்
13. சிட்டுக் குருவிகள் __________ பறந்தன.
வானில்
வாணில்
14. மல்லிகை மலர் __________ வீசியது.
மணம்
மனம்
15. மாலா படுக்கை _________ சுத்தம் செய்தாள்.
அறையைச்
அரையைச்
16. ___________ வென எரியும் தீயைத் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
மளமள
தகதக
17. குமார் ___________ வென வீட்டுப் பாடங்களைச் செய்தான்.
மளமள
தகதக
18. சந்திரன் காணாமல் போன பணத்தைத்____________ தேடினான்.
மேடு பள்ளம்
சுற்றும் முற்றும்
19. அந்தச் சாலை ______________ இருந்ததால் தம்பி கவனமாக நடந்து வந்தான்.
மேடு பள்ளம்
சுற்றும் முற்றும்
20. மாமா வீட்டிற்கு வந்தார்.
ஆண்பால்
பெண்பால்
