wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலம் காட்டும் வினைச்சொல்

Total questions: 17

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்காண்பவை ................................... ஆகும்.


போனாள்

பேசினார்

செய்தது

தின்றனர்

ஓடிவான்

a)

வினைச்சொல்

b)

இடைச்சொல்

c)

உரிச்சொல்

d)

பெயர்ச்சொல்

2.

கீழ்காணும் வாக்கியங்களுள் இறந்தகால வினைச்சொல்லை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நாளை பள்ளிக்கு வர மாட்டேன் என நந்தா ராமுவிடம் கூறினான்.

b)

இந்து அடுத்த வாரம் வெளிநாட்டிற்குச் செல்லவிருக்கிறாள்.

c)

அம்மா கோவிலுக்குச் சென்று இறைவனைத் தரிசனம் செய்கிறார்.

d)

மலர் தன்னுடைய துணிகளைத் துவைத்து காயப் போடுவாள்.

3.

கீழ்காண்பனவற்றுள் எது சரியான இணை அல்ல?

a)

சிரித்தது - இறந்தகாலம்

b)

எழுதுவான் - எதிர்காலம்

c)

ஒழிந்தார் - எதிர்காலம்

d)

பேசுகிறாள் - நிகழ்காலம்

4.

கீழ்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் ....................... ஆகும்.


உடல் நலம் சரியில்லாத தன் தாயாருக்கு மாலதி கடைக்குச் சென்று உணவு வாங்கி கொடுத்தாள்.

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

c)

வினைமுற்று

d)

எழுவாய்

5.

கீழ்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற இலக்கணக் கூறுகளைத் தெரிவு செய்க.


அம்மா சமைத்து வைத்த அனைத்து உணவுகளையும் மாலினி உண்டு மகிழ்ந்தாள்.

a)

வினைமுற்று

b)

வினையெச்சம்

c)

பெயரெச்சம்

d)

பெயர்ச்சொல்

6.

கீழ்காணும் வினைமுற்று காட்டும் சரியான விடையைத் தெரிவு செய்க.


பார்க்கின்றான்


i. அஃறிணை

ii. ஆண்பால்

iii. நிகழ்காலம்

iv. படர்க்கை

a)

i,ii,iii

b)

i,ii,iv

c)

ii,iii,iv

d)

i,iii,iv

7.

கீழ்காணும் வாக்கியத்தில் காணப்படும் வினையெச்ச சொல்லை மட்டும் தெரிவு செய்க.


மாலினியின் திருமண நிகழ்ச்சியில் அனைவரும்

ஆடிப் பாடி மழிந்தனர்.

a)

அனைவரும்

b)

ஆடிப்

c)

திருமண

d)

மாலினி

8.

1) காலம் எத்தனை வகைப்படும் ?

a)

3

b)

6

c)

1

d)

2

9.

சரியான எதிர்காலத்தைக் காட்டும் சொற்களை தேர்ந்தெடுக.

a)

நடந்தன

b)

பாடுகிறார்

c)

செல்வார்

d)

பாடினான்

10.

சரியான காலத்தைக் கொண்டு காலி இடத்தை நிரப்புக.

கந்தன் பாட்டை இப்பொழுது ________________.

a)

A. ஆடுகின்றன

b)

A. பாடுகிறான்.

c)

A. செல்கிறார்

11.

வந்தான்.

மேலே உள்ள சொல் என்ன காலத்தைக் காட்டுகிறது ?

a)

எதிர்காலம்

b)

நிகழ் காலம்

c)

இறந்த காலம்

12.

நிகழ் காலம் என்பது ஒரு செயல் அல்லது தொழில் __________ காட்டும்.

a)

நடைப்பெற்றுக் கொண்டிருப்பதை

b)

நடைப்பெறுவதை

c)

நடக்கும்

13.

கோடிட்ட இடத்தை நிரப்புக.

ஆடுகள் புல் ______________.

a)

நடக்கின்றன

b)

மேய்கின்றன

c)

ஆடுகின்றன

14.

எந்த வாக்கியம் சரியாக உள்ளது ?

a)

நேற்று பாடலை வினோத் பாடுவான்.

b)

குமுதன் நடனம் ஆடுகிறான்.

c)

சிவா நாளை வந்தான்.

15.

சுபா நாளை ஆடுவாள்.

 மேலே உள்ள வாக்கியம் என்ன காலம் ?


a)

இறந்த காலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

16.

தவறான நிகழ்கால சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

பாடுகிறார்

b)

ஆடுவார்

c)

செல்கிறார்

17.

மயில் மழை வருமுன் தோகை விரித்தாடும். கோடிடப்பட்ட சொல் எந்த வகை காலத்தைக் குறிக்கின்றது?

a)

நிகழ்காலம்

b)

எதிர்காலம்

c)

இறந்தகாலம்