Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இடைநிலை & உள் இடைநிலைத் தனிமங்கள்

Total questions: 19

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

Sc (Z=21) ஒரு இடைநிலை தனிமம். ஆனால் Zn (Z=30) இடைநிலை தனிமம் அல்ல. ஏனெனில்

a)

Sc 3+ & Zn2+ ஆகிய இரு அயனிகளும் நிறமற்றவை மேலும்வெண்மை நிற சேர்மங்களை உருவாக்குகின்றன

b)

d ஆர்பிட்டால் ஆனது Sc ல் பகுதியளவு நிரப்பப்பட்டுள்ளது.ஆனால் Zn ல் முழுவதும் நிரப்பப்பட்டுள்ளது

c)

Zn ல் கடைசி எலக்ட்ரான் 4s ஆர்பிட்டாலில் நிரம்புவதாக கருதப்படுகிறது

d)

Sc & Zn ஆகிய இரண்டும் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளைப் பெற்றிருப்பதில்லை

2.

பின்வருவனவற்றுள் எந்த d தொகுதி தனிமம் சரிபாதி நிரப்பபட்டுள்ள இணைதிற கூட்டிற்கு முன் உள்ள d ஆர்பிட்டாலையும் சரிபாதி நிரப்பப்பட்ட இணைதிற கூட்டினையும் பெற்றுள்ளது.

a)

Cr

b)

Pd

c)

Pt

d)

இவை எதுமில்லை

3.

3 d வரிசை இடைநிலை தனிமங்களுள் எந்த ஒரு தனிமமானது அதிக எதிர்குறி(M2+ /M) திட்ட மின்முனை அழுத்த மதிப்பினை பெற்றுள்ளது.

a)

Ti

b)

Cu

c)

Mn

d)

Zn

4.

V³⁺ ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களை பெற்றிருப்பது

a)

Ti3+Ti^3+

b)

Fe3+Fe^3+

c)

Ni2+Ni^2+

d)

Cr3+Cr3+

5.

Mn²⁺ அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு

a)

5.92 BM

b)

2.80 BM

c)

8.95 BM

d)

3.90 BM

6.

இடைநிலை தனிமங்கள் & அவைகளுடைய சேர்மங்களின் வினைவேக மாற்ற பண்பிற்கு காரணமாக அமைவது

a)

அவைகளின் காந்தபண்பு

b)

அவைகளின் நிரப்பப்படாத d ஆர்பிட்டால்கள்

c)

அவைகள் மாறுபடும் ஆக்சிஜனேற்ற நிலைகளை பெறும் தன்மையினை பெற்றிருப்பது

d)

அவைகளின் வேதிவினைபுரியும் திறன்

7.

ஆக்சிஜனேற்றியாக செயல்படும் பண்பினை பொருத்து சரியான வரிசை எது?

a)

VO2+ < Cr2O72- <MnO4-

b)

Cr2O72- < VO2+ < MnO4-

c)

Cr2O72- < MnO4 - < VO2+

d)

MnO4_ < Cr2O7 2- < VO2+

8.

அமில ஊடகத்தில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஆனது ஆக்சாலிக் அமிலத்தை இவ்வாறாக ஆக்சிஜனேற்றம் அடையச் செய்கிறது

a)

ஆக்சலேட்

b)

கார்பன் டை ஆக்சைடு

c)

அசிடேட்

d)

அசிட்டிக் அமிலம்

9.

பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது?

a)

அமிலம் கலந்த K2 Cr2O7K2\ Cr2O7 கரைசலின் வழியே H2SH2S வாயுவை செலுத்தும்போது பால் போன்ற வெண்மை நிறம் உருவாகிறது

b)

பருமனறி பகுப்பாய்வில் K2Cr2O7K2Cr2O7 ஐக்காட்டிலும் Na2Cr2O7 ஆனது பயன்படுத்தப்படுகிறது

c)

அமில ஊடகத்தில் K2Cr2O7 ஆரஞ்சு நிறத்தினை பெற்று இருக்கும்

d)

pH மதிப்பானது 7 ஐ விட அதிகரிக்கும் போது K2Cr2O7 கரைசலானது மஞ்சள் நிறமாகிறது

10.

அமில ஊடகத்தில் பெர்மாங்கனேட் அயனியானது இவ்வாறு மாற்றமடைகிறது

a)

MnO4 2-

b)

Mn2+

c)

Mn3+

d)

MnO2

11.

1 மோல் பெர்ரஸ் ஆக்சலேட்டை (FeC2O4) ஆக்சிஜனேற்றம் அடையச் செய்ய தேவையான அமிலம் கலந்த KMnO4 மோல்களின் எண்ணிக்கை

a)

5

b)

3

c)

0.6

d)

1.5

12.

லாந்தனான்களைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் சரியில்லாத கூற்று எது?

a)

யுரோப்பியம் +2 ஆக்சிஜனேற்ற நிலையை பெற்றுள்ளது

b)

Pr லிருந்து Lu நோக்கிச்செல்லும் போது அயனி ஆரம் குறைவதால் காரத்தன்மை குறைகிறது

c)

அலுமினியத்தை விட அனைத்து லாந்தனான்களும் அதிக வினைத்திறன் மிக்கவை

d)

பருமனறி பகுப்பாய்வில் Ce4+ ன் கரைசல் ஆக்சிஜனேற்றியாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது

13.

பின்வருவனவற்றுள் எந்த லாந்தனாய்டு அயனி டையாகாந்த தன்மை உடையது?

a)

Eu2+

b)

Yb2+

c)

Ce2+

d)

Sm2+

14.

பின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள் லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை

a)

4

b)

2

c)

5

d)

3

15.

கூற்று: Ce4+ ஆனது பருமனறி பகுப்பாய்வில் ஆக்சிஜனேற்றியாக பயன்படுகிறது

காரணம்: Ce4+ ஆனது +3 ஆக்சிஜனேற்ற நிலையைஅடையும் தன்மையினை கொண்டுள்ளது.

a)

கூற்று & காரணம் இரண்டும் சரி மேலும் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமாகும்

b)

கூற்று & காரணம் இரண்டும் சரி, ஆனால் காரணமானது கூற்றிற்கு சரியான விளக்கமல்ல

c)

கூற்று சரி ஆனால் காரணம் தவறு

d)

கூற்று &காரணம் இரண்டும் தவறு

16.

ஆக்டினைடுகளின் பொதுவான ஆக்சிஜனேற்றநிலை

a)

+2

b)

+3

c)

+4

d)

+6

17.

+7 என்ற அதிக பட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம்

a)

Np, Pu, Am

b)

U, Fm, Th

c)

U, Th, Md

d)

Es, No, Lr

18.

பின்வருவனவற்றுள் சரியில்லாதது எது?

a)

La(OH)3La\left(OH\right)_3 ஆனது Lu(OH)3Lu\left(OH\right)_3 ஐக்காட்டிலும் குறைவான காரத்தன்மை உடையது

b)

லாந்தனாய்டு வரிசையில் Ln Ln3+Ln^3+ அயனிகளின் அயனி ஆர மதிப்பு குறைகிறது

c)

Laஆனது லாந்தனாய்டு தொடரில் உள்ள தனிமம் என்பதை விட ஒரு இடைநிலை தனிமம் என்பதே சரி

d)

லாந்தனாய்டு குறுக்கத்தின் விளைவாக Zr & Hf ஒத்த அணு ஆர மதிப்பினைப் பெற்றுள்ளன

19.

1 மோல் பொட்டாசியம் டை குரோமேட் ஆனது பொட்டாசியம் அயோடைடுடன் வினைப்பட்டு வெளியேற்றும் அயோடினின் மோல்களின் எண்ணிக்கை

a)

1

b)

2

c)

3

d)

4