NEW
Font size
S
M
L
XL
WorksheetsABC 3.0 C3 TAMIL (International Prelim)
Total questions: 40
Worksheet time: 20mins
Name
Class
Date
1.
மாற்கு 1:1 எப்படி ஆரம்பிக்கிறது?
a)
a. யோவான்ஸ்நானகன் வனாந்திரத்தில் ஞானஸ்நானம் கொடுத்து பாவமன்னிப்புக்கான மனந்திரும்புதலை எடுத்துரைத்தான்.
b)
b. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்
c)
c. வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருடைய பாதையைச் செவ்வைப்படுத்துங்கள்!
d)
d. ஏசாயாவில் எழுதயிருக்கிறபடி, “காத்திருங்கள், உங்களுக்காக வழியை ஆயத்தப்படுத்த ஒரு தூதுவனை அனுப்புவேன்
2.
மாற்கு 1:2-3, இல் எழுதியிருக்கிறபடி வாக்கியத்தைப் பூர்த்தி செய்யவும். “இதோ, நான் என் ________ உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்பே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும் கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று “வனாந்திரத்திலே ________ சத்தம் உண்டாகும்” என்றும் தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறது.
a)
a. தூதனை; கூப்பிடுகிறவனுடைய
b)
b. பிரதிநிதி; அலறுகிறவனுடைய
c)
c. துணைவன்; பாடுகிறவனுடைய
d)
d. சட்டப்பூர்வமானவன்; சிரிக்கின்றவனுடைய
ந
3.
மாற்கு 1:7 இன் படி, யோவான் குனிந்து யாருடைய கால் செருப்புகளின் வாரை அவிழ்க்கத் தகுதி இல்லாதவன் என்று கூறினான்?
a)
a. தாவீது
b)
b. தானியேல்
c)
c. யோவான்
d)
d. இயேசு
4.
“நான் ______ ஞானஸ்நானம் வழங்குகிறேன். அவரோ உங்களுக்குப் _______ ஞானஸ்நானம் வழங்குவார்” என்று யோவான் அவர்களுக்கு உபதேசம். (Mk. 1:8)
a)
a. காற்றால், நெருப்பால்
b)
b. ஜலத்தினால், நெருப்பால்
c)
c. ஜலத்தினால், பரிசுத்த ஆவியால்
d)
d. நெருப்பு, பரிசுத்த ஆவியால்
5.
கப்பர்நகூமில் ஜெப ஆலயத்தில் இருந்த மக்கள் இயேசுவின் போதகத்தைக் கண்டு ஏன் வியப்படைந்தார்கள் ஏனென்றால்,…(Mk. 1:21-27)
a)
a. அதிகாரத்தோடு புதிதாக உபதேசித்தததால்
b)
b. கட்டளைகளோடு புதிதாக உபதேசித்ததால்
c)
c. ஒழுக்கத்தோடு புதிதாக உபதேசித்ததால்
d)
d. புதிய பேச்சாளரின் தோற்றம் உடையவராய் இருந்ததால்
6.
மாற்கு 1:40-42 இல், இயேசு குஷ்டரோகிக்காக மனமுருகி அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
a. சரி
b)
b. தவறு
c)
c. இருக்கலாம்
7.
ஆவியானவர் இயசுவின் மீது ________ இறங்கினார். (Mk. 1:10)
a)
a. வண்ணத்துப்பூச்சியைப் போல்
b)
b. வௌவாலைப் போல்
c)
c. புறாவைப் போல்
d)
d. குருவியைப் போல்
8.
மாற்கு 1:12 இல், வனாந்திரந்திரத்திற்குப் போகும்படி இயேசுவை ஏவியவர் யார்?
a)
a. ரோம வீரர்கள்
b)
b. யோவான்
c)
c. யோவானின் சீஷர்கள்
d)
d. ஆவியானவர்
9.
இயேசு வனாந்தரத்திலே எத்தனை நாட்கள் இருந்தார்? (Mk. 1:13)
a)
a. ஐம்பது நாட்கள்
b)
b. நாற்பது நாட்கள்
c)
c. அறுபது நாட்கள்
d)
d. ஏழு நாட்கள்
10.
இயேசு எங்குத் தேவனுடைய இராஜ்யத்தின் சுவிசேஷத்தைக் குறித்துப் பிரசிங்கித்தார்? (Mk. 1:14)
a)
a. கலிலேயா
b)
b. எருசலேம்
c)
c. எகிப்து
d)
d. பெத்லகேம்
11.
இயேசு மாற்கு 1:15 இல் என்ன கூறினார்?
“காலம் நிறைவேறிற்று; தேவனுடைய இராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி ____.”
a)
a. என்னுடைய சிலுவையைச் சுமந்து கொள்ளுங்கள்
b)
b. உங்களது பகைவர்களைச் சிநேகியுங்கள்
c)
c. உங்களது வளத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்
d)
d. சுவிசேஷத்தை விசுவாசியுங்கள்
12.
சீமோன் அந்திரேயா யார்? (Mk. 1:16)
a)
a. விவசாயி
b)
b. தீயணைப்பு வீரர்
c)
c. மீனவர்
d)
d. பூ வியாபாரி
13.
மாற்கு 2:21-22 இல், “எவனொருவனும் ______ துணியோடு பழைய துணியைச் சேர்த்து ஒட்டுப்போட்டு தைக்கமாட்டான். அவன் அவ்வாறு செய்தால் ____ சுருங்கிவிடும். புதியது பழையதை அதிகமாய்க் கிழிக்கும். முன்னதைவிட மோசமாகும்.எவனொருவனும் புதிய திராட்சை இரசத்தை பழைய ____ ஊற்றி வைக்கமாட்டான். ஊற்றி வைத்தால் புதிய இரசம் பழைய பையைக் கெடுத்துவிடும். அதோடு இரசமும் சிந்திவிடும். ______ புதிய பைகளிலேதான் மக்கள் ஊற்றி வைப்பார்கள்” என்று சொன்னார்.
a)
a. வெளுக்கப்படாத; ஒட்டு; தோல் பையில்; புதிய இரசத்தை
b)
b. வெளுக்கப்படாத; spot; தோல் பையில்; புட்டில்களில்
c)
c. சாயம் பூசப்படாத; ஒட்டு; தோல் பையில்; புட்டில்களில்
d)
d. புதிய; ஒட்டுப்போட்டவை; தோல் பையில்; புதிய இரசத்தை
14.
நான்கு பேர் திமிர்வாதக்காரனைச் சுமந்து கொண்டு இயேசுவினிடத்தில் வந்தபோது, அவர்கள் என்ன செய்தார்கள்? (Mk. 2:3-4)
a)
a. அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.
b)
b. திமிர்வாதக்காரன் இயேசுவைக் காணும்படியாக அவர்கள் முன் கதவை முட்டிக் கொண்டு வந்தார்கள்.
c)
c. திமிர்வாதக்காரனை முன்னே கொண்டு போக கூட்டத்தை நகருமாறு கூறினார்கள்.
d)
d. திமிர்வாதக்காரனைக் குணப்படுத்தும்படிக்கு இயேசுவை அழைத்தார்கள்.
15.
மாற்கு 3:7-8 இல், இயேசு தம்முடைய சீடர்களோடு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு கடலோரத்திற்குச் சென்றபோது அநேக மக்கள் அவர் செய்த அற்புதங்களைப்பற்றிக் கேள்விப்பட்டு, அவரிடம் வந்தார்கள்.
i. கலிலேயாவிலும், யூதேயாவிலும் இருந்து
ii. எருசலேமிலும், இதுமேயாவிலும்
iii. யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து
iv. சீதோன் பட்டணங்களின் பகுதிகளிலும் இருந்து
a)
a.i, ii, iii
b)
b. i, iii, iv
c)
c. Ii, iii, iv
d)
d. மேற்கூறிய அனைத்தும்
16.
இயேசு கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டிற்கு இயேசு வந்தபோது படகிலிருந்து இறங்கினவுடனே யாரைச் சந்தித்தார்? (Mk. 5:1-2)
a)
a.அசுத்தமுள்ள வாயைக் கொண்ட ஒரு மனிதனை
b)
b. அசுத்தம் நிறைந்த தோலைக் கொண்ட ஒரு மனிதனை
c)
c. அசுத்த ஆவியுள்ள ஒரு மனிதனை
d)
d. அசுத்தம் நிறைந்த பாதங்களைக் கொண்ட ஒரு மனிதனை
17.
பன்றிகளை மேய்த்தவர்களும் மக்களும் இயேசுவைக் கதரேனே நகரத்து எல்லைகளை விட்டுப் போகும்படி கேட்டுக் கொண்டதற்கான காரணம் (Mk. 5:14-17) பிசாசு பிடித்திருந்தவன் வஸ்திரம் தரித்து, _____________, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
a)
a. உட்கார்ந்து
b)
b. நடனமாடி
c)
c. குதித்து
d)
d. ஓடிக்கொண்டு
18.
ஜெப ஆலயத் தலைவரான யவீருவிடம் அவரது வீட்டிலிருந்த சிலர் அவரின் மகள் இறந்துவிட்டதாகக் கூறியபோது இயேசு என்ன கூறினார்? (Mk. 5:35-36)
a)
a. “பயப்பட வேண்டாம், நம்பிக்கையுடன் இரு.”
b)
b. “பயப்பட வேண்டாம், விசுவாசத்துடன் இரு.”
c)
c. “பயப்பட வேண்டாம், நம்பிக்கை மட்டும்.”
d)
d. “பயப்பட வேண்டாம், நம்பிக்கை மட்டும் இருக்கிறது.”
19.
மாற்கு 8:27-28 இல், இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்பு செசரியா
பகுதியைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே, “ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?” என்று கேட்டார்? சீஷர்கள் கூறிய பதில் என்ன?
i. யோவான்ஸ்நானகன்
ii. எலியா
iii. இயேசு
iv. தீர்க்கதரிசிகளில் ஒருவர்
a)
a. i, ii, iii
b)
b. i, ii, iv
c)
c. i, iii, iv
d)
d. ii, iii, iv
20.
மாற்கு 7:23 இல், “இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான்
வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை” என்று இயேசு சொன்னார். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
a. சரி
b)
b. தவறு
c)
c. இருக்கலாம்
21.
இயேசு பேதுருவையும் யாக்கோபுவையும் யோவானையும் உயரமான மலைக்குக் கூட்டிக் கொண்டு போன போது ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. அந்தக் குரல் கூறியது என்ன? (Mk. 9:7-8)
a)
a. “இவர் என்னுடைய அன்பான குழந்தை; இவருக்குச் செவி கொடுங்கள்.”
b)
b. “இவர் என்னுடைய நேச குமாரன்; இவருக்குச் செவி கொடுங்கள்.”
c)
c. “இவர் என்னுடைய கண்மணி; இவருக்குச் செவி கொடுங்கள்.”
d)
d. “இவர் என்னுடைய அன்பானவர்; இவருக்குச் செவி கொடுங்கள்.”
22.
“ஒருவன் விவாகரத்துக்கான சான்றிதழை எழுதி அதன் மூலம் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என்று மோசே ஏன் கூறினார்? (Mk. 10:2-5)
a)
a. அவர்கள் அன்பில்லாத இருதயம் கொண்டவர்கள் என்பதால்
b)
b. அவர்களின் இதயத்தின் கடுமை காரணமாக
c)
c. அவர்கள் கடின இருதயம் கொண்டவர்கள் என்பதால்
d)
d. அவர்கள் வணங்காக் கழுத்துள்ள இருதயம் கொண்டவர்கள் என்பதால்
23.
மாற்கு 10: 13-16 இல் இயேசு சீஷர்களிடம்: “சிறு பிள்ளைகள் ____ இடம்கொடுங்கள்; அவர்களைத் தடைப்பண்ணவேண்டாம்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. யாராவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அவன் அதில் பிரவேசிப்பதில்லை” என்று சொன்னார்.
a)
a.என்னைவணங்குவதற்கு
b)
b. என் முன் நிற்பதற்கு
c)
c. என்னுடன் உட்காருவதற்கு
d)
d. என்னிடம் வருகிறதற்கு
24.
“ஒரு மனிதன் ஓடி வந்து அவருக்கு முன்னால் முழங்காலிட்டு வணங்கி, நித்திய வாழ்வைப் பெற என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். அந்த மனிதனைப் பார்த்து இயேசுவின் என்ன கூறினார்? (Mk. 10:21)
a)
a. இயேசு அவன் மீது இரக்கம் கொண்டார்
b)
b. இயேசு அவனைப் பார்த்துச் சிரித்தார்
c)
c. இயேசு அவனை நேசித்தார்
d)
d. இயேசு அவனை நேசித்ததால்
25.
மாற்கு 10:21 இன் படி,“நீ போய் உனக்கு உரியவற்றையெல்லாம் விற்றுவிடு. அப்பணத்தை ____ கொடு. பிறகு என்னைப் பின்பற்றி வா” என்று இயேசு கூறினார்.
a)
a. கோயிலுக்கு
b)
b. கிராம மக்களுக்கு
c)
c. குழந்தைகளுக்கு
d)
d. ஏழை மக்களுக்கு
26.
பர்த்மேயு என்ற குருடன் தன்னுடைய பார்வை குணமடைய வேண்டும் என்றான். அவன் இயேசுவைப் பார்த்து ‘ரபி’ என்றான். அதற்கு என்ன பொருள்? (Mk. 10:46-52)
a)
a. அறிஞர்
b)
b. வழிகாட்டி
c)
c. போதகர்
d)
d. ஆலோசகர்
27.
மாற்கு 11:2 இன் படி, இதுவரை எவராலும் சவாரி செய்யப்படாத கழுதையை அவிழ்த்துக் கொண்டு வருமாறு தனது சீஷர்களிடம் கூறினார். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
a. சரி
b)
b. தவறு
c)
c. இருக்கலாம்
d)
d. வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை
28.
மாற்கு 11:7-10 இல், அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவிடம் கொண்டுவந்து, அதன்மேல் தங்களுடைய ஆடைகளைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.அநேகர் தங்களுடைய ஆடைகளை வழியிலே விரித்தார்கள்; வேறுசிலர் மரக்கிளைகளை வெட்டி சாலைகளில் போட்டார்கள்.முன்னே நடப்பவர்களும் பின்னே நடப்பவர்களும்: “ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ___; கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய ___ ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா!” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
a)
a. குடிமக்கள், மோசே தீர்க்கதரிசி
b)
b. உன்னதமானவர், தாவீது இராஜா
c)
c. போற்றப்படத்தக்கவர், பிதாவாகிய தாவீதின் ராஜ்யம்
d)
d. இராஜா, தூதுவர்
29.
“ஆகையால் உங்கள் _____ தேவனிடம் காரியங்களைக் கேளுங்கள். அவற்றைக் கிடைக்கப்பெற்றோம் என்று நீங்கள் _____ அவை உங்களுக்கு உரியதாகும். 25 நீங்கள் _____ செய்யும்போது, ஏதாவது ஒன்றைக்குறித்து நீங்கள் யாரிடமாவது கோபம் கொண்டிருப்பது நினைவில் வந்தால் அவர்களை _____. நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவும் உங்களது தவறுகளை மன்னித்துவிடுவார்” என்றார். (Mk. 11:24-25)
a)
a. நம்பிக்கை; விசுவாசம்; பிரார்த்தனை செய்; மன்னிப்பு
b)
b. பிரார்த்தனை;விசுவாசம்; நம்பிக்கை; மன்னிப்பு
c)
c. பிரார்த்தனையின்போது;நம்பினால்; பிரார்த்தனை; மன்னித்து விடுங்கள்
d)
d. பிரார்த்தனை; நம்பிக்கை; praying; மன்னிப்பு
30.
சில பரிசேயர்கள் ஏதாவது இயேசு தவறாகப் பேசினால் அவரைப் பிடிக்க வேண்டும் என்று விரும்பி ராயனுக்கு வரி கொடுப்பதைப் பற்றிக் கேட்ட போது, இயேசுவிடம் எதைக் கொண்டு வந்தார்கள? (Mk. 12:13-17)
a)
a. வங்கி நோட்டு
b)
b. தங்கக் காசு
c)
c. வெள்ளிக் காசு
d)
d.தினார்
31.
சதுசேயர்கள் என்பவர்கள் எவரும் இறப்பில் இருந்து உயிர்த்தெழ முடியும் என்று நம்புகிறார்கள். சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். (Mk. 12:18)
a)
a. சரி
b)
b. தவறு
c)
c. இருக்கலாம்
32.
மாற்கு12:28-34 இன் படி, இயேசு வேதபாரகரர்களில் ஒருவனிடம், அவன் தேவனின் இராஜ்யத்தை நெருங்கிவிட்டாகக் கூறினான். வேதபாரகர் எந்தக் கட்டளை மிகவும் முக்கியமானது என்பதைக் கேட்டவுடன் என்ன கூறினான்?
“ ____! இது ஒரு நல்ல பதில். நீங்கள் சரியான பதிலையே சொல்லி இருக்கிறீர்கள். கர்த்தர் ஒருவரே நம் தேவன். அவரைத் தவிர வேறு தேவன் இல்லை. ஒருவன் தேவனைத் தன் ____, ____, ____ நேசிக்க வேண்டும். ஒருவன் தன்னை நேசிப்பது போலவே ____ நேசிக்க வேண்டும். இந்தக் கட்டளைகளே, ஏனைய கட்டளைகளைக் காட்டிலும் முக்கியமானவை. இவை தகனபலிகள் போன்றவற்றைவிட மிக முக்கியமானவை.”
a)
a. ஆண்டவரே, முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும்
b)
b. போதகரே, முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும், காணிக்கைகளோடும்
c)
c. போதகரே, முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும், மற்றவர்களையும்
d)
d. அரசரே, முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும், மற்றவர்களையும்
33.
ஏழை விதவை எத்தனை வெள்ளிக் காசுகளைக் காணிக்கைப் பெட்டியில் போட்டாள்? (Mk. 12:41-44)
a)
a. ஒன்று
b)
b. ஆறு
c)
c. இரண்டு
d)
d. எட்டு
34.
மாற்கு 12:28-34 இல், இயேசு “நசிறிய காசுகளைத்தான் போட்டாள். உண்மையில் அவள் செல்வந்தர் எவரையும்விட அதிகம் போட்டிருக்கிறாள்.அவர்களிடம் _____ இருக்கிறது. ஆனால் அவர்களுக்குத் தேவையில்லாததையே அவர்கள் கொடுத்தார்கள். இவளோ மிகவும் ஏழை. அவள் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துவிட்டாள். அவள் கொடுத்தது அவளது வாழ்க்கைக்கு மிகவும் தேவையான ஒன்றாகும்.” என்று கூறினார்.
a)
a. வரவு
b)
b. மகத்துவம்
c)
c. பயம்
d)
d. நிறைய பணம்
35.
ஒரு குழந்தை பிறப்பதற்கு முன் ஏற்படும் வேதனை போன்ற காலத்தைப் பற்றி விளக்க இயேசு என்னென்ன உவமைகளைச் சீடர்களுக்கு கூறினார்? “நீ இந்தப் பெரிய கட்டிடத்தைப் பார்க்கிறாய். இவையெல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோகும். ஒவ்வொரு கல்லும் தரையில் சிதறிப்போகும். ஒரு கல்லோடு இன்னொன்று சேராது போகும்” (Mk. 13:1-8)
i. யுத்தங்கள் மற்றும் வதந்திகள்
ii. பூமி அதிர்ச்சிகள்
iii. பஞ்சங்கள்
iv. அரசியல் சண்டைகள்
a)
a. i, ii, iii
b)
b. i, iii, iv
c)
c. ii, iii, iv
d)
d. மேற்கூறிய அனைத்தும்
36.
மாற்கு 13:32 இன் படி, தேவதூதர்களுக்கும் தேவகுமாரருக்கும் இரண்டாம் வருகையின் நாள் வப்பொழுது வரும் என்று தெரியும்?
a)
a. ஆம்
b)
b. இல்லை
c)
c. இருக்கலாம்
d)
d. வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை
37.
மாற்கு 13:11 குறிப்பிடப்பட்டுள்ளபடி, “ நீங்கள் சொல்லப்போவதைப்பற்றி _________. அந்த நேரத்தில் தேவன் __________ நீங்கள் பேசுங்கள். உண்மையில் அவற்றை நீங்கள் __________. உங்கள் மூலம் பரிசுத்த ஆவியானவரே பேசுவார். நீங்கள் சொல்லப்போவதைப்பற்றி ________. அந்த நேரத்தில் உங்கள் மூலம் _________ பேசுவார்.”
a)
a. கவலைப்பட வேண்டாம்; பேசக் கொடுத்தவற்றை; பேசுவார்; பரிசுத்த பேய்
b)
b. சோதனை; சமாதனம்; பேசு; பரிசுத்த ஆவி
c)
c. judge; ஓய்வெடு; பேசு; பரிசுத்த பேய்
d)
d. கவலைப்பட வேண்டாம்; பேசக் கொடுத்தவற்றை; பேசுவதில்லை; பரிசுத்த ஆவியானவரே
38.
“நீர் கிறிஸ்துவா? ஆசீர்வதிக்கப்பட்ட தேவனின் குமாரனா?” என்று இன்னொரு கேள்வியைக் கேட்டான்.இயேசுவோ, “ஆம். நான் தேவ குமாரன்தான். எதிர்காலத்தில் மனித குமாரன் சர்வ வல்லவரின் வலது பக்கத்தில் இருப்பதைக் காண்பீர்கள். பரலோக இராஜ்யத்தில் ___________ மனித குமாரன் வருவதைப் பார்ப்பீர்கள்” என்றார். (Mk. 14:61-62)
a)
a. பூ மேகங்களின் நடுவே
b)
b. பறவை மேகங்களின் நடுவே
c)
c. மேகங்களின் நடுவே
d)
d. ஆற்று மேகங்களின் நடுவே
39.
மாற்கு 15:37-39 இல், இயேசு இறந்ததும் ஆலயத்தின் திரைச் சீலை இரண்டாய்க் கிழிந்த போது அங்கே நின்றுகொண்டிருந்த இராணுவ அதிகாரி என்ன சொன்னார்?
a)
a. “உண்மையாகவே இவர் தேவனுடைய தீர்க்கதரிசிதான்!”
b)
b. “உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன்தான்!”
c)
c. “உண்மையாகவே இவர் யூதர்களின் அரசர்தான்!”
d)
d. “உண்மையாகவே இவர் மனிதகுமாரன்தான்!”
40.
இயேசு உயிர்த்தெழுந்த பின், பன்னிரு சீஷர்களிடம் தோன்றி அவர்களிடம், “உலகின் எல்லா பாகங்களுக்கும் செல்லுங்கள். எல்லாரிடமும் நற்செய்தியைக் கூறுங்கள்.எவனொருவன் இதனை விசுவாசித்து ஞானஸ்நானம் பெறுகிறானோ அவன் இரட்சிக்கப்படுவான். எவனோருவன் விசுவாசிக்கவில்லையோ அவன் _________” என்று கூறினார் .(Mk. 16:15-16)
a)
a. கைது செய்யப்படுவான்
b)
b. கண்டிக்கப்படுவான்
c)
c. இகழ்ந்தார்
d)
d. வழங்கப்பட்டது
Reset
