WorksheetsTamil pyq 1
Total questions: 21
Worksheet time: 11mins
"உடம்பிடை தோன்றிற்றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி
அடல் உறச்சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர்" - இத்தொடரைக் கூறியவர்
இளங்கோவடிகள்
சீத்தலை சாத்தனார்
கம்பர்
வால்மீகி
பிள்ளைத்தமிழ் என்ற பெயரில் ஒரு தனிநூலினைச் செய்த முதல் ஆசிரியர் யார்?
ஒட்டக்கூத்தர்
புகழேந்தி
குமரகுருபரர்
பகழிக்கூத்தர்
திருமங்கையாழ்வார் சொல்லணியில் அமைத்து பாடிய நூல் எது?
திருக்குறுந்தாண்டகம்
திருவெழுக்கூற்றிருக்கை
திருநெடுந்தாண்டகம்
திருவந்தாதி
வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
முதுமொழி மாலை
செந்தமிழ் இலக்கணம்
கொடுந்தமிழ் இலக்கணம்
தொன்னூல் விளக்கம்
"எறும்பும் தன்கையில் எண் சாண்" எனப்பாடியவர்
கபிலர்
ஒட்டக்கூத்தர்
ஔவையார்
புகழேந்தி
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
தைப்பாவை
திருப்பாவை
திருவெம்பாவை
காவியப்பாவை
காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்?
சிவஞான முனிவர்
பலபட்டடைச் சொக்கநாதர்
அழகிய சொக்க நாதர்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?
பேராசிரியர்
அடியார்க்கு நல்லார்
நச்சினார்க்கினியர்
ந.மு.வேங்கடசாமி
கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை
நச்சர்
திருமலையர்
அடியார்க்கு நல்லார்
தாமத்தர்
”ஆட்சிக்கு அஞ்சாமல் யாவரேனும்
ஆள்கவெனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் ஆவான்” - என்று பாடியவர் யார்?
பாரதிதாசன்
கண்ணதாசன்
முடியரசன்
பாரதியார்
”கோவலன் பொட்டல்” என வழங்கப்படும் இடம்
கோவலன் பொட்டலம் விரித்து உணவு அருந்திய இடம்
கோவலன் கொலைக்களப்பட்ட இடம்
கோவலன் சிலம்பு விற்க வந்த இடம்
கண்ணகி கோவலன் வாழ்ந்த இடம்
பாரதிக்கு “மகாகவி” என்ற பட்டம் கொடுத்தவர் யார்?
வ.ரா
உ.வே.சா
கி.ஆ.பெ.வி
லா.ச.ரா
”ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன”
இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?
அறிஞர் அண்ணா
வல்லிக்கண்ணன்
பட்டுக்கோட்டையார்
மீரா
பொருந்தா இணையைத் தேர்க
சொல் - பொருள்
மா - அழுகு
மீ - உயர்ச்சி
மூ - மூப்பு
மை - மேம்பாடு
"வெப்பத் தடுகளத்து வேழங்க ளாயிரமும்
கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்” - இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?
இராசேந்திரன்
முதல் இராசராசன்
இராசாதிராசன்
இராசமகேந்திரன்
”நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்” - இகுறள் இடம்பெற்றுள்ள இயல் எது?
இல்லறவியல்
துறவறவியல்
ஊழியல்
பாயிரவியல்
செய் - என்னும் வேர்ச் சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு
செய்தீர்
செய்வாய்
செய்தவன்
செய்தான்
சொற்களை ஒழுங்குபடுத்திச் சரியான சொற்றொடர் எழுதுக.
”கல்லார்க்கும் கற்றார்க்கும் களிப்பருளும் களிப்பே”
”கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளும் களிப்பே”
”களிப்பருளும் களிப்பே கற்றார்க்கும் கல்லார்க்கும்”
”களிப்பே களிப்பருளும் கற்றார்க்கும் கல்லார்க்கும்”
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும்
முக்காலமும் வுரைப்பது குறத்திப் பாட்டே இறப்பு நிகழ்வெதிர்
திறப்பட வென்னும்
இறப்பு நிகழ்வெதிர் வென்னும் முக்காலமும் திறப்பட வுரைப்பது குறத்திப் பாட்டே
குறத்திப் பாட்டே முக்காலமும் வுரைப்பது இறப்பு நிகழ்வெதிர் வென்னும்
திறப்பட
விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
“பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்”
பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணத்தால் பெறுவது எது?
பெற்றதை வழங்கி ஏன் வாழ வேண்டும்?
பெருங்குணம் எப்போது வரும்?
பெறுவது எது?
பொருந்தா இணையைத் தேர்க
தினம் - நாள்
நெருநல் - நேற்று
சலவர் - நல்லவர்
மாரன் - மன்மதன்
