NEW
Font size
Worksheetsகரைசல்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
நீரில் கரைக்கப்பட்ட உப்புக் கரைசல் என்பது ____________ கலவை.
ஒருபடித்தான
பலபடித்தான
ஒருபடித்தான மற்றும் பலபடித்தானவை
ஒருபடித்தானவை அல்லாதவை
இருமடிக்கரைசலில் உள்ள கூறுகளின் எண்ணிக்கை ____________
2
3
4
5
கீழ்கண்டவற்றுள் எது சர்வக்கரைப்பான் எனப்படுவது ____________
அசிட்டோன்
பென்சீன்
நீர்
ஆல்கஹால்
குறிப்பிட்ட வெப்பநிலையில், குறிப்பிட்ட அளவு கரைப்பானில் மேலும் கரைபொருளை கரைக்க
முடியாத கரைசல் ____________ எனப்படும்.
தெவிட்டிய கரைசல்
தெவிட்டாத கரைசல்
அதி தெவிட்டிய கரைசல்
நீர்த்த கரைசல்
நீரற்ற கரைசலை அடையாளம் காண்க
நீரில் கரைக்கப்பட்ட உப்பு
நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ்
நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட்
கார்பன் - டை - சல்பைடில் கரைக்கப்பட்ட
சல்பர்
குறிப்பிட்ட வெப்பநிலையில், அழுத்தத்தை அதிகரிக்கும் போது நீர்மத்தில் வாயுவின் கரைதிறன் ____________.
மாற்றமில்லை
அதிகரிக்கிறது
குறைகிறது
வினை இல்லை
100 கி நீரில் சோடியம் குளோரைடின் கரைதிறன் 36 கி. 25 கி சோடியம் குளோரைடு 100 மி.லி நீரில் கரைத்த பிறகு மேலும் எவ்வளவு உப்பை சேர்த்தால் தெவிட்டிய கரைசல் உருவாகும் _______.
12 கி
11 கி
16 கி
20 கி
25% ஆல்கஹால் கரைசல் என்பது ___________
100 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
25 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
75 மி.லி நீரில் 25 மி.லி ஆல்கஹால்
25 மி.லி நீரில் 75 மி.லி ஆல்கஹால்
ஈரம் உறிஞ்சிக் கரையும் சேர்மங்கள் உருவாகக் காரணம் ____________
ஈரம் மீது அதிக நாட்டம்
ஈரம் மீது குறைந்த நாட்டம்
ஈரம் மீது நாட்டம் இன்மை
ஈரம் மீது மந்தத்தன்மை
கீழ்கண்டவற்றுள் எது நீர் உறிஞ்சும் தன்மையுடையது ____________
ஃபெரிக் குளோரைடு
காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட்
சிலிக்கா ஜெல்
இவற்றுள் எதுமில்லை
