NEW
Font size
Worksheets11. கார்பனும் அதன் சேர்மங்களும்
Total questions: 9
Worksheet time: 5mins
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்பாடு C3H6, அந்தச் சேர்மத்தின் வகை
அல்கேன்
அல்கீன்
அல்கைன்
ஆல்கஹால்
ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில் பியூட்டன்-1-ஆல். இது எந்த வகைச் சேர்மம்?
ஆல்டிஹைடு
கார்பாசிலிக் அமிலம்
கீட்டோன்
ஆல்கஹால்
IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை பின்னொட்டு …….
ஆல்
ஆயிக் அமிலம்
ஏல்
அல்
பின்வரும் படி வரிசை சேர்மங்களில், தொடர்ச்சியாக வரும் இணை எது?
C3 H8 மற்றும் C4 H10
C2 H2 மற்றும் C2 H4
CH4 மற்றும் C3 H6
C2H5 OH மற்றும் C4 H8 OH
C2H5 OH + 3O2 → 2CO2 + 3H2O என்பது
எத்தனால் ஒடுக்கம்
எத்தனால் எரிதல்
எத்தனாயிக் அமிலம் ஆக்சிஜனேற்றம்
எத்தனேல் ஆக்சிஜனேற்றம்
எரி சாராயம் என்பது ஒரு நீர்ம கரைசல். இதிலுள்ள எத்தனாலின் சதவீதம் …………
95.5%
75.5%
55.5%
45.5%
கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது?
கார்பாக்சிலிக் அமிலம்
ஈதர்
எஸ்டர்
ஆல்டிஹைடு
TFM என்பது சோப்பின் எந்தப் பகுதிப்பொருளைக் குறிக்கிறது?
தாது உப்பு
வைட்டமின்
கொழுப்பு அமிலம்
கார்போஹைட்ரேட்
கீழ்கண்டவற்றுள் டிடர்ஜென்ட்டை பற்றி தவறான கூற்று எது?
நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கொழுப்பு அமிலத்தின் சோடிய உப்பு
சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்பு
டிடர்ஜென்ட்டின் அயனி பகுதி – SO3–Na+
கடின நீரிலும் சிறப்பாக செயல்படும்.
