Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

11th தமிழ்

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

பாயிரம் இல்லது ……………. அன்றே

a)

காவியம்

b)

பனுவல்

c)

பாடல்

d)

கவிதை

2.

“கபாடபுரங்களைக் காவுகொண்டபின்னும்

காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்” – அடிமோனையைத் தெரிவு செய்க.

a)

கபாடபுரங்களை – காவுகொண்ட

b)

காலத்தால் – கனிமங்கள்

c)

கபாடபுரங்களை – காலத்தால்

d)

காலத்தால் – சாகாத

3.

நன்னூலின் ஆசிரியர்……………

a)

பவணந்தி முனிவர்

b)

அகத்தியர்

c)

தொல்காப்பியர்

d)

திருவள்ளுவர்

4.

மொழி முதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க.

a)

அன்னம் , கிண்ணம்

b)

ரூபாய், இலட்சாதிபதி

c)

டமாரம், இங்ஙனம்

d)

றெக்கை, அங்ஙனம்

5.

மொழி முதலில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?

a)

பன்னிரண்டு

b)

பதினெட்டு

c)

இருபத்து நான்கு

d)

இருபத்து இரண்டு

6.

மொழி இறுதியில் வரும் தமிழ் எழுத்துகள் எத்தனை?

a)

பன்னிரண்டு

b)

பதினெட்டு

c)

இருபத்து நான்கு

d)

இருபத்து இரண்டு

7.

கவிஞர் சு. வில்வரத்தினம் பிறந்த புங்குடுத்தீவு, …………………உள்ளது.

a)

அமெரிக்காவில்

b)

கனடாவில்

c)

இந்தியாவில்

d)

யாழ்ப்பாணத்தில்

8.

கவிஞர் சு. வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுப்பு……………

a)

பறவைகள் ஒருவேளை தூங்கப் போயிருக்கலாம்

b)

தமிழனின் கவிதை இயல்

c)

புல்லின் இதழ்கள்

d)

உயிர்த்தெழும் காலத்துக்காக

9.

பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க.

அ) அ. முத்துலிங்கம் – யுகத்தின் பாடல்

ஆ) பவணந்தி முனிவர் – நன்னூல்

இ) சு. வில்வரத்தினம் – ஆறாம் திணை

ஈ) இந்திரன் – பேச்சுமொழியும் எழுத்துமொழியும்

a)

அ, இ

b)

ஆ, ஈ

c)

அ, ஈ

d)

அ, ஆ

10.

“ஒரு திரவநிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்து மொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது, உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திடநிலையை அடைகிறது.” – இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.

a)

பேச்சுமொழி, எழுத்துமொழியைத் திட, திரவப் பொருள்களாக உருவகப்படுத்தவில்லை

b)

மொழி என்பது திட, திரவ நிலைகளில் இருக்கும்

c)

எழுத்துமொழியைவிடப் பேச்சுமொழி எளிமையானது

d)

பேச்சுமொழியைக் காட்டிலும் எழுத்துமொழி எளிமையானது

11.

1971ஆம் ஆண்டு ‘நோபல் பரிசு’ பெற்ற கவிஞர் …………

a)

வால்ட் விட்மன்

b)

பாப்லோ நெரூடா

c)

ஸ்டெஃபான் மல்லார்மே

d)

எர்னஸ்ட் காசிரர்

12.

உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கும் மொழி ………

a)

எழுத்துமொழி

b)

பேச்சுமொழி

c)

கவிதைமொழி

d)

இலக்கியமொழி

13.

நேரடி மொழி என்பது

a)

கவிதை மொழி

b)

உடல் மொழி

c)

பேச்சு மொழி

d)

வேற்று மொழி

14.

ஏடு, சுவடி , பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள்

a)

தாள்

b)

நூல்

c)

எழுத்தாணி

d)

ஒலை

15.

தமிழகத்தின் மாநில மரம் எது?

a)

தென்னை மரம்

b)

பனை மரம்

c)

ஆல மரம்

d)

வாழை மரம்

16.

ஏழைகளின் கற்பக விருட்சம் எனப் போற்றப்படும் மரம் எது?

a)

தென்னை மரம்

b)

பனை மரம்

c)

ஆல மரம்

d)

வாழை மரம்

17.

மண்ணுக்கு வளம் சேர்ப்பன ……………….

a)

ஊடுபயிர்

b)

இயற்கை உரங்கள்

c)

மண்புழு

d)

இவை மூன்றும்

18.

“வான் பொய்த்தது”- என்ற சொற்றொடர் உணர்த்தும் மறைமுகப்பொருள் …………………..

a)

வானம் இடிந்தது

b)

மழை பெய்யவில்லை

c)

மின்னல் வெட்டியது

d)

வானம் என்பது பொய்யானது

19.

பொருத்தமான இலக்கிய வடிவம் எது?

a)

ஏதிலிக் குருவிகள் – மரபுக் கவிதை

b)

திருமலை முருகன் பள்ளு – சிறுகதை

c)

பானை டாக்டர் – குறும் புதினம்

d)

ஐங்குறுநூறு – புதுக்கவிதை

20.

காவடி சிந்துக்குத் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?

a)

பாரதியார்

b)

முருகன்

c)

அண்ணாமலையார்

d)

பாரதிதாசன்

21.

பிழையான தொடரைக் கண்டறிக.

a)

யானைகளால் வெகுதொலைவில் உள்ள நீரினை, வாசனைமூலம் அறியமுடியும்.

b)

ஏதிலிக்குருவிகள் என்பது வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகளாகும்

c)

பதநீரிலிருந்து பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றைத் தயாரிக்கின்றனர்.

d)

குறைந்த அடிகளை உடைய எட்டுத்தொகை நூல் ஐங்குறுநூறு

22.

சரியான விடையைத் தேர்க.

அ) கல்வி அழகே அழகு – 1. தொல்காப்பியம் சிறப்புப்பாயிர உரைப்பாடல்

ஆ) இளமையில் கல் – 2. திருமந்திரம்

இ) துணையாய் வருவது தூயநற் கல்வி – 3. ஆத்திசூடி

ஈ) பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் – 4. திருக்குறள்

– 5. நாலடியார்

a)

அ – 4, ஆ – 1, இ – 2, ஈ – 5

b)

அ – 5, ஆ – 3, இ – 2, ஈ – 1

c)

அ – 3, ஆ – 4, இ – 1, ஈ – 2

d)

அ – 2, ஆ – 3, இ – 4, ஈ – 1

23.

நிழல் போலத் தொடர்ந்தான் – இது எவ்வகை உவமை

a)

மெய்

b)

வடிவம்

c)

பயன்

d)

வினை

24.

நேரொன்றாசிரியத்தளை எனப்படுவது………………………

a)

மா முன் நேர்

b)

கனி முன் நிரை

c)

காய் முன் நிரை

d)

காய் முன் நேர்

25.

உறுபகை, இடன் ஆகிய சொற்களின் இலக்கணக் குறிப்பு…………….

a)

பெயரெச்சம், பண்புத்தொகை

b)

வினையெச்சம், வினைத்தொகை

c)

வினைத்தொகை, இடவாகுபெயர்

d)

உரிச்சொல்தொடர், ஈற்றுப்போலி