wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர் 3

Total questions: 16

Worksheet time: 9mins

Name
Class
Date
1.

கம்பி நீட்டுதல்

a)

அவசரமும் பதற்றமும்

b)

கை நழுவுதல்

c)

பிறருடைய கவனத்திலிருந்து தப்புதல்

d)

அளவுக்கு மேல் செலவழித்தல்

2.

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல் எனும் பொருளை விளக்கும் மரபுத்தொடர்

a)

ஆறப் போடுதல்

b)

அள்ளி இறைத்தல்

c)

அள்ளி விடுதல்

d)

ஏட்டுச் சுரைக்காய்

3.

அமுதன் பள்ளிக்குத் தாமதமாகியதால் ...................... புத்தகப்பையை எடுத்துக் கொண்டு ஓடினான்.

a)

அள்ளி இறைத்து

b)

அரக்கப் பரக்க

c)

ஆறப் போட்டு

d)

அள்ளி விட்டு

4.

பொருளைத் தேர்வு செய்க.

ஏட்டுச் சுரைக்காய்

a)

அளவுக்கு மேல் செலவழித்தல்

b)

ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல்

c)

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

d)

நடைமுறைக்குப் பயன்படாத அறிவு / அனுபவத்தோடு ஒட்டாத கல்வி

5.

தவறான இணையைத் தெரிவு செய்க.

a)

அள்ளி இறைத்தல் - அளவுக்கு மேல் செலவழித்தல்

b)

அள்ளி விடுதல் - ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்

c)

கம்பி நீட்டுதல் - அவசரமும் பதற்றமும்

d)

ஏட்டுச் சுரைக்காய் - நடைமுறைக்குப் பயன்படாத அறிவு / அனுபவத்தோடு ஒட்டாத கல்வி

6.

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் மரபுத்தொடர் எது?

a)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

b)

அள்ளி விடுதல்

c)

கிணற்றுத் தவளை போல

d)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

7.

மேற்காணும் படச்சூழலுக்கு மிகப் பொருத்தமான மொழியணி யாது?

a)

ஆறப் போடுதல்

b)

அள்ளி விடுதல்

c)

அள்ளி இறைத்தல்

d)

அரக்க பரக்க

8.

கீழ்காணும் சூழல்களில் எது அள்ளி இறைத்தல் என்ற மரபுத்தொடருக்குப் பொருந்தி வரவில்லை?

a)

குமரன் கோழிகளுக்குத் தீனியை அள்ளி இறைத்ததால் அவனது அப்பா அவனைக் கண்டித்தார்.

b)

மாலா தேவையற்றப் பொருள்களை வாங்கி பணத்தை அள்ளி இறைத்ததால் இன்று சிரமப்படுகிறாள்.

c)

குவளையைத் தம்பி தான் உடைத்ததாக தீபன் அம்மாவிடம் அள்ளி இறைத்தான்.

9.

சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.


தாமரை தன் முதல் சம்பளத்தைக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்கினாள். தேவைக்கு அதிகமான ஆடை ஆபரணங்களை வாங்கினாள். பின் எஞ்சிய நாள்களுக்குப் போதுமான பணம் இல்லாததால் வருத்தப்பட்டாள்.

a)

அள்ளி இறைத்தல்

b)

அரக்க பரக்க

c)

வாரி இறைத்தல்

d)

மனப்பால் குடித்தல்

10.

இராஜா இரவு முழுவதும் தொலைக்காட்சியில் நேரம் செலவழித்துக் காலையில் தாமதமாக எழுந்ததால் ........................... தயாராகி வேலைக்குச் சென்றான்.

a)

நாக்கு நீளுதல்

b)

அரக்க பரக்க

c)

அள்ளி இறைத்தல்

d)

எடுப்பார் கைப்பிள்ளை

11.

அள்ளி இறைத்தல்

a)

பொய் கூறுதல்

b)

அளவுக்கு மேல் செலவழித்தல்

c)

உதவுதல்

12.

கீழ்கண்ட சூழலுக்கு ஏற்ற மரபுத் தொடரை தெரிவு செய்.


இராகவன் அவசரப்பட்டு தன் நண்பன் மீது பழி சுமத்தினான்.

a)

அவசரக் குடுக்கை

b)

தெள்ளத் தெளிதல்

c)

செவி சாய்த்தல்

d)

கண்ணும் கருத்தும்

13.

கீழ்கண்ட சூழலுக்கு ஏற்ற மரபுத் தொடரை தெரிவு செய்.


விமலா தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற முழு கவனத்துடன் படித்தாள்.

a)

நாக்கு நீளுதல்

b)

கண்ணும் கருத்தும்

c)

செவி சாய்தல்

d)

தெள்ளத் தெளிதல்

14.

சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்யவும்.


வனிதா எதையும் மிகைப்படுத்திப் பேசுவதால் அவளின் நண்பர்கள் அவளை ஒதுக்க ஆரம்பித்தனர்.

a)

அள்ளி இறைத்தல்

b)

அள்ளி விடுதல்

c)

கம்பி நீட்டுதல்

15.

1. அள்ளி விடுதல் என்றால் என்ன?

a)

ஒருவருக்கு ஒன்றை அள்ளிக் கொடுத்தல்

b)

ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.

c)

அள்ளி விட்டுக் கொண்டு ஓடுதல்

d)

ஒன்றை அளவோடு பிறருக்குக் கொடுத்தல்.

16.

கம்பி நீட்டுதல் என்றால் என்ன?

a)

ஒரு பெரிய கம்பியைச் செய்து நீட்டுதல்.

b)

பாதுகாப்பிற்கு கம்பியை நீட்டுதல்

c)

கவனத்துடன் கம்பியைச் சரிபார்த்தல்

d)

தப்பித்துப் போகுதல்