Worksheetsஅறிவியல் விழா புதிர்ப்போட்டி
Total questions: 10
Worksheet time: 4mins
கீழ்க்காண்பனவற்றுள் நுண்ணுயிர்களைப் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக
நுண்ணுயிர்கள் தீமையை மட்டுமே தருகின்றன.
நுண்ணுயிர்கள் சுவாசிக்கும், நகரும், வளரும், இனவிருத்தி செய்யும்.
நொதிமம் உயிர்வளியை வெளியிடுகின்றது.
நுண்ணுயிர்களை நாம் கண்களால் பார்க்க முடியும்.
தொற்றுநோய் பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சரியான வழிமுறையைத் தெரிவு செய்க.
தொற்று நோய் கண்டவரின் துவாலையைப் பகிர்ந்து பயன்படுத்தலாம்.
குழாய் நீரை அருந்த வேண்டும்
உணவுப் பொருள்களை ஈக்கள் மொய்க்காதவாறு மூடி வைக்க வேண்டும்
தேவைப்படும்போது மட்டுமே பல் துலக்க வேண்டும்.
பின்வரும் விலங்குகளில் தனித்து வாழும் விலங்கு எது?
புலி
எறும்பு
கழுதை
சிங்கம்
நுண்ணுயிரின் நன்மையைத் தேர்ந்தெடுக.
உணவைக் கெடச் செய்கிறது
நோய் எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கப் பயன்படுகிறது
சொத்தைப் பல் உண்டாக்குதல்
நச்சுணவு
சில விலங்குகள் தனித்து வாழ்வதன் அவசியம் என்ன?
மற்ற இனவகை விலங்கிடமிருந்து ஏற்படும் எதிர்ப்பு.
வசிப்பிடத்திற்கான போராட்டம் அதிகரிக்கிறது.
உயிரிழப்பு
உணவுப் போராட்டத்தைத் தவிர்த்து விடுகிறது.
இரத்தத்தில் இருக்கும் நோய்க் கிருமிகளை கண்டறிய தேவைப்படும் கருவி?
நுண்ணோக்காடி
தொலைநோக்கி
ரெக்டர் கருவி
கடிக்காரம்
சொறி, படை, தேமல் போன்றவை ஏற்பட _____________ காரணமாகும்.
குச்சியம்
நச்சியம்
பூஞ்சணம்
புரோட்டோசோவா
____________ மூளையையும் தண்டுவடத்தையும் உள்ளடக்கியது.
மைய நரம்பு மண்டலம்
புற நரம்பு மண்டலம்
இயக்க நரம்பு மண்டலம்
தானியங்கி நரம்பு மண்டலம்
கரு வளர்ச்சி அடையும் இடம் எது?
சினைப்பை
யோனி
கருப்பை
கருக்குழாய்
விரையைப் பாதுகாக்கும் தோலின் வெளிப்புறப் பை.
ஆண்குறி
விரை
விந்து சுரப்பி
விரைப்பை
