wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்-பயிற்சி-6 வள்ளுவர்

Total questions: 30

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

சரியான எழுத்துக்கூட்டல் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

மன்ரம்

b)

மண்றம்

c)

மன்றம்

d)

மண்றம்

2.

கீழ்க்காண்பனவற்றுள் தவறான இணையைத் தெரிவு செய்க.

a)

இடப்பெயர் - இடுகாடு

b)

தொழிற்பெயர் - வண்ணாத்தி

c)

பொருட்பெயர் - ஞமலி

d)

சினைப்பெயர் - தந்தம்

3.

பெயரெச்சத்தைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.

b)

கிளி பழத்தைக் கொத்தித் தின்றது.

c)

குமரேசன் வாழைமரத்தை வெட்டி வீசினான்.

d)

அம்மா சமைத்த உணவு சுவையாக இருந்தது,

4.

அப்பா கடலுக்குச் சென்றார்______ வலையை வீசினார்________ ஆனால்________ மீன் கிடைக்கவில்லை.

a)

; ? ?

b)

; , ;

c)

: , ,

d)

; . ,

5.

கடந்த வாரம் வீசிய புயல் காற்றில் பல வீடுகள் சேதமடைந்தன.____________ மக்கள் அவ்விடத்தைவிட்டு வேறு இடத்திற்குக் குடி புகுந்தனர்.

a)

ஆகவே - எனவே

b)

இருப்பினும் - ஆகவே

c)

ஆகவே - இருப்பினும்

d)

ஆயினும் - ஆனால்

6.

சர்வாதிகாரி

a)

சர்வ + அதிகாரி

b)

சர்வா + அதிகாரி

c)

சர்வம் + அதிகாரி

d)

சர்வா + அதிகாரி

7.

வினைச்சொல்லுக்கான அடையைத் தெரிவு செய்க.

a)

ஆன

b)

ஆக

c)

என

d)

உம்

8.

குமரேசன் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்ததால் தன் சேமிப்பை இழந்தான். அதனால், உணவுக்கே __________________ போடுகிறான்.

a)

குரங்குப்பிடி

b)

கை கொடுத்தல்

c)

நாக்கு நீளுதல்

d)

தாளம் போடுதல்

9.

கடுங்குளிரிலும் கால்பந்தாட்டம் காணச் செல்வேன் என தீபா _________________யாக இருந்தாள்.

a)

குரங்குப் பிடி

b)

கங்கணம் கட்டுதல்

c)

ஆறாப் போடுதல்

d)

கிணற்றுத் தவளை

10.

வியாபாரத்தில் பாதிக்கப்பட்ட அரசுக்கு அவனுடைய மாமா சரியான நேரத்தில் ______________ உதவினார்.

a)

முழு மூச்சுடன்

b)

கை கொடுத்து

c)

கண்ணும் கருத்துமாய்

d)

கையும் களவுமாய்

11.

பூமகளை, மேலதிகாரி கடிந்து பேசியதால் அவள் மனங்கலங்கினாள்.

a)

கங்கணம் கட்டுதல்

b)

கை கொடுத்தல்

c)

நாக்கு நீளுதல்

d)

கரி பூசுதல்

12.

நான் எப்படியாவது பல்கலைக்கழகத்தில் நுழைய வேண்டும்.

a)

முழு மூச்சு

b)

ஒரு கை பார்த்தல்

c)

கங்கணம் கட்டுதல்

d)

கண்ணும் கருத்தும்

13.

சரளா கணேசனிடம், " இனிமேல் கோபியிடம் எந்த இரகசியத்தையும் கூற வேண்டாம். அவன் ஒரு ________________ என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே," என்று கூறினான்.

a)

முழு மூச்சு

b)

கங்கணம் கட்டுதல்

c)

ஓட்டைவாய்

d)

நாக்கு நீளுதல்

14.

பத்மநாதனின் வீட்டில் சிறிது காலம் குடியிருந்த சுதாகர்,திருவிழா முடிந்தவுடன் ___________________.

a)

கரி பூசினான்

b)

தலை எடுத்தான்

c)

கம்பி நீட்டினான்

d)

காது குத்தினான்

15.

தம் மகன் காற்பந்தாட்டத்தில் முதல் பரிசைப் பெற்றவுடன் திருமதி.மல்லிகா______________________.

a)

கரி பூசினார்

b)

உச்சிக் குளிர்ந்தார்

c)

தோள் கொடுத்தார்

d)

மனப்பால் குடித்தார்.

16.

சரியான மரபுத்தொடரின் பொருளைக் கொண்ட இணையைத் தெரிவு செய்க.

a)

காது குத்துதல் - தலை குனிதல்

b)

குரங்குப் பிடி - பிடிவாதம் பிடித்தல்

c)

ஓட்டைவாய் - விரைவாகப் பேசுதல்

d)

கிணற்றுத் தவளை - வெளியே ஓடி வருதல்

17.

பிழையான மரபுத்பதொடரின் பொருளைக் கொண்ட இணையைத் தெரிவு செய்க.

a)

கை கொடுத்தல் - உதவுதல்

b)

காது குத்துதல் - ஏமாற்றுதல்

c)

கிணற்றுத் தவளை - வெளியே ஓடி வருதல்

d)

ஓட்டைவாய் -இரகசியத்தை வெளியிடுதல்

18.

கோவலன் வியாபாரம் செய்ய கண்ணகியின் காற்சிலம்பை விற்றான்.ஆனால், பொற்கொல்லனின் தந்திரத்தால் கள்வன் என வீண்பழி சுமத்தப்பட்டு _________________ இன்றி கொல்லப்பட்டான்.

a)

திட்டவட்டம்

b)

கையும் களவும்

c)

அரக்கப் பரக்க

d)

ஈவிரக்கம்

19.

பின்வருவனற்றுள் பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.

a)

அள்ளி இறைத்தல் - அளவுக்கு மேல் செலவழித்தல்

b)

பேரும் புகழும் - சிறப்பு /உயர்வு / மேன்மை

c)

கம்பி நீட்டுதல் - பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய் விடுதல்/நழுவுதல்

d)

மேடு பள்ளம் - சமமற்ற நிலப்பகுதி

20.

மேற்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

காது குத்துதல்

b)

கை கூடுதல்

c)

திட்டவட்டம்

d)

கை கொடுத்தல்

21.

அ + திருடன் =

a)

அட்திருடன்

b)

அதிருடன்

c)

அத்திருடன்

22.

சொல் + படி =

a)

சொட்படி

b)

சொற்படி

c)

சொல்படி

23.

எவ்வளவு + பெரியது =

a)

எவ்வளவுப் பெரியது

b)

எவ்வளவு பெரியது

24.

காரம் + வடை =

a)

காரவடை

b)

காரங்வடை

c)

காரம் வடை

25.

மனம் + இல்லை =

a)

மனம் இல்லை

b)

மனயில்லை

c)

மனமில்லை

26.

காய் + கறி =

a)

காய்க்கறி

b)

காய்கறி

c)

காய்ங்கறி

27.

தை + திங்கள் = தைத்திங்கள்

மேற்கண்ட சொல்லின் விகாரம் என்ன ?

a)

இயல்புப் புணர்ச்சி

b)

தோன்றல் விகாரம்

c)

திரிதல் விகாரம்

d)

கெடுதல் விகாரம்

28.

பொன் + சங்கிலி = பொற்சங்கிலி

a)

இயல்புப் புணர்ச்சி

b)

தோன்றல் விகாரம்

c)

திரிதல் விகாரம்

d)

கெடுதல் விகாரம்

29.

குரல் + ஓசை = குரலோசை

a)

இயல்புப் புணர்ச்சி

b)

தோன்றல் விகாரம்

c)

திரிதல் விகாரம்

d)

கெடுதல் விகாரம்

30.

அன்று + கூறியது = ?

a)

வலிமிகும்

b)

வலிமிகா