wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சுவரை வைத்துத்தான் .......................... வரைய .................... .

a)

சித்திரம் , வேண்டாம்

b)

சித்திரம் , வேண்டும்

2.

ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின்வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும். இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

b)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

3.

பணத்தை வாங்கிக் கொடுத்த தன் நண்பனின் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தினான் குமரன்.

a)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

b)

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

4.

பாடல் பாடுவதைத் தன் அன்னையிடமே கற்றுக் கொண்ட பாலா, பள்ளி நிகழ்வுகளில் பாடல்கள் பாடி அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தான்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

b)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

c)

பதறாத காரியம் சிதறாது

d)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

5.

தமிழ்மொழி தேர்வில் மல்லிகா எல்லா வினாக்களுக்கும் சரியான விடை எழுதி சிறந்த புள்ளிகளைப் பெற்றாள்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

b)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

c)

பதறாத காரியம் சிதறாது

d)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

6.

முன்னாள் ஓட்டப் பந்தய வீரர் திரு.சேம்சன் வாலபோயின் மகள் செரின் ஆசிய ஓட்டப் போட்டியில் வெண்கலன் வென்றார்.

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

b)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

c)

பதறாத காரியம் சிதறாது

d)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

7.

ஒன்றைப்பற்றி நன்கு அறிந்துள்ள ஒருவருக்கு அதைப்பற்றி மேலும் விளக்கமோ பயிற்சியோ தர வேண்டியதில்லை. இப்பொருளுக்கு ஏற்ற பழமொழி யாது?

a)

சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும்

b)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

c)

பதறாத காரியம் சிதறாது

d)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

8.

சிறு வயதிலிருந்தே தந்தை அளித்த நம்பிக்கையும் ஆதரவும் கனிமொழி விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க உந்துதலாய் இருந்தன. சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

b)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

c)

பதறாத காரியம் சிதறாது

d)

சுடர் விளக்காயினும் தூண்டுகோள் தேவை

9.

கலையமுதன் யாரிடமும் பழகமாட்டான். அதனால் அவனுக்கு நண்பர்களே இல்லை.

a)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

d)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

10.

எப்படிப்பட்ட பிடிவாதம் கொண்டவரிடமும் பக்குவமாக எடுத்துக் கூறினால் அவர் மனம் இரங்கி விடுவார். பொருளுக்கு ஏற்ற சரியான பழமொழியைத் தெரிவு செய்க.

a)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

முன் வைத்த காலைப் பின் வைக்காதே

d)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை