NEW
Font size
WorksheetsKUIZ KONRAIVENTHAN by MUNIANDY RAJ.
Total questions: 10
Worksheet time: 5mins
விளக்கத்திற்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
மிகச் சிறிய செயலாக இருப்பினும் அதை நன்கு ஆராய்ந்த பிறகே மேற்கொள்ள வேண்டும்.
A. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
B ஏவா மக்கள் மூவா மருந்து
C. நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக
D. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
முயற்சியோடு தொடர்புடைய கொன்றை வேந்தன் யாது ?
A. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
B. ஏவா மக்கள் மூவா மருந்து
C. நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
D. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
உள்ளூரில் வேலை கிடைக்காததால், மகேந்திரன் தம் குடும்ப வறுமையைப் போக்க அண்டை நாட்டிற்குச் சென்று பொருள் ஈட்டுகிறார்
A. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
B. ஐயம் புகினும் செய்வனச் செய்
C. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
எந்தச் சிறிய செயலாக இருந்தாலும் அதனை நன்கு சிந்தித்த பிறகே செயல்பட வேண்டும் என்ற பொருளுடன் கொன்றை வேந்தன் யாது ?
A. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
B. நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக.
C. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
D. ஏவா மக்கள் மூவா மருந்து
பொருத்தமான செய்யுளைத் தெரிவு செய்க.
மாணவர்கள் கல்வி கற்பதைக் கடமையாகக் கொள்ள வேண்டும்.
A. கல்விக்கு அழகு கசடற மொழிதல்
B. ஓதாமலொரு நாளும் இருக்க வேண்டாம்
C. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்
கீழ்க்கண்ட பொருளுக்கு ஏற்ற உலகநீதி உலகநீதியைத் தெரிவு செய்க.
யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.
போகாத விடந்தனிலே போக வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்
கீழேயுள்ள பொருளுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.
ஒருவரைப் போகவிட்டு, பின் அவரைப் பற்றிக் குறை கூறித் திரிதல் கூடாது.
A. போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்.
B. ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
C. போகாத விடந்தனிலே போக வேண்டாம்
பின்வரும் வெற்றிவேற்கைக்கு ஏற்ற இரண்டாவது அடியினைத் தெரிவு செய்க.
நூறாண்டு பழகினும் மூர்க்கர் கேண்மை
_______________________________________
A. இருநிலம் பிளக்க வேர் வீழ்க்குமே
B. நீர்க்குட் பாசிபோல் வேர்க் கொள்ளாதே
C. நற்றாள் தொழாஅர் எனின்
D. இழுக்கா இயன்றது அறம்
இக்காட்சிக்குப் பொருந்தும் செய்யுள் யாது ?
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
கீழ்க்காணும் வெற்றிவேற்கையின் சரியான பொருளைத் தெரிவு செய்க.
கல்விக் கழகு கசடற மொழிதல்
A. பிழையாகப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு
B. பிழையறக் கற்பதே கற்ற கல்விக்குச் சிறப்பு
C. பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு
D. பிழையறக் கற்று பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு
