Font size
Worksheetsநேர்க்கூற்று அயற்கூற்று (ஆண்டு 5) கடினம்
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காணும் கூற்றுகளில் அயற்கூற்றுப் பற்றிய கூற்றுகளில் எது சரி?
(இரண்டு விடைகள் உள்ளன)
அயற்கூற்றில் இரட்டை மேற்கோள் குறி கிடையாது.
அயற்கூற்றில் ஒருவர் கூறுவதைக் கூறும் வடிவத்திலே வாக்கியம் இருக்க வேண்டும்.
நேர்க்கூற்றில் உள்ள சொற்களை மட்டும் மாற்றிப் பொருள் மாறாதவாறு படர்க்கை ஏற்ப கூறுவது.
பின்வரும் வாக்கியம் எவ்வகையைச் சார்ந்தது?
“நான் என் உணவைச் சாப்பிட்டு முடித்து விட்டேன்,” என்றாள் மாதவி .
செய்தி வாக்கியம்
அயற்கூற்று வாக்கியம்
வினா வாக்கியம்
நேர்க்கூற்று வாக்கியம்
கீழ்க்காணும் நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
''முகிலன், நேற்று நான் என் சித்தியின் திருமணத்திற்குச் சென்றிருந்தேன்,'' எனக் கந்தன் கூறினான்.
முகிலன் நேற்று தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாகக் கந்தன் கூறினான்.
கந்தன் முன்தினம் நான் என் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக முகிலன் கூறினான்.
கந்தன் முன்தினம் தான் தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாகக் கந்தனிடம் கூறினான்.
முகிலன் முன்தினம் தான் தன் அத்தையின் திருமணத்திற்குச் சென்றிருந்ததாக கந்தனிடம் கூறினான்.
கீழ்க்காணும் அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
தனக்குக் சிறுகதை எழுதுவதில் மிகவும் விருப்பம் எனக் குமுதா கவிதாவிடம் கூறினாள்.
"கவிதா, தனக்குக் கவிதை எழுத மிகவும் விருப்பம்," என்று குமுதா கூறினாள்.
"கவிதா, நான் கவிதை எழுத மிகவும் விரும்புகிறேன்," என்றாள குமுதா.
"கவிதா, எனக்குக் கவிதை எழுதுவதில் மிகவும் விருப்பம்," என்றாள் குமுதா.
கொடுக்கப்பட்டுள்ள அயற்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற நேர்க்கூற்று வாக்கியம் எது?
அப்பா சிவாவிடம் விரைவாக மகிழுந்தைக் கழுவும்படி கூறினார்.
சிவா, ''அப்பா மகிழுந்தை விரைவாகக் கழுவு,'' எனக் கூறினார்.
''விரைவாகக் கழுவு,'' என சிவா அப்பாவிடம் கூறினார்.
''சிவா, விரைவாக மகிழுந்தைக் கழுவு,'' என அப்பா கூறினார்.
''விரைவாக மகிழுந்தைக் கழுவுங்கள் அப்பா,'' எனச் சிவா கூறினான்.
கீழ்க்காணும் நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மறுநாள் அத்தை வீட்டுக்கு வருவதாக அப்பா சுகுமாறனிடம் கூறினார்.
"சுகுமாறன், மறுநாள் நான் அத்தை வீட்டுக்கு வருவேன்" என்று அப்பா கூறினார்.
"சுகுமாறன், நாளை மறுநாள் நான் அத்தை வீட்டுக்கு வருவேன்" என்று அப்பா கூறினார்.
"சுகுமாறன், நாளை நான் அத்தை வீட்டுக்கு வருவேன்" என்று அப்பா கூறினார்.
நேர்க்கூற்றுப் பற்றிய சரியான கூற்று எது?
(இரண்டு விடைகள் உள்ளன)
வினாச் சொல் கொண்டு வாக்கியம் இருக்கக் கூடாது.
ஒருவர் கூறியதைக் கூறியவாறே கூறுவது.
ஒருவர் கூறியவற்றை ஒற்றை மேற்கோள் குறியீட்டுக் காட்ட வேண்டும்.
ஒருவர் கூறியவற்றை இரட்டை மேற்கோள் குறியீட்டுக் காட்ட வேண்டும்.
கீழ்க்காணும் நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
"நீங்கள் இருவரும் ஆளுக்கொரு எண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்" என்றாள் கமலா.
ஆளுக்கொரு எண்ணைத் இருவரும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றாள் கமலா.
அவர்கள் இருவரும் ஆளுக்கொரு எண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கமலா கூறினாள்.
நீங்கள் இருவரும் ஆளுக்கொரு எண்ணைத் தேர்ந்தெடுக்குமாறு கமலா கூறினாள்.
நேர்க்கூற்றுக்கு ஏற்ற அயற்கூற்றைத் தேர்ந்தெடுக.
"என் தோட்ட நிலத்தை நான் விற்கப் போகிறேன்," என்று திரு கதிர்வேல் கூறினார்.
தன் தோட்ட நிலத்தை விற்கப் போவதாகத் திரு. கதிர்வேலன் கூறினார்.
தோட்ட நிலத்தை விற்கப் போவதாக திரு. கதிர்வேலன் தன்னிடம் கூறினார்.
திரு.கதிர்வேலன் தோட்ட நிலத்தை நான் விற்கப் போகிறேன் என்று கூறினார்.
கீழ்க்காணும் நேர்க்கூற்று வாக்கியத்திற்கு ஏற்ற அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.
குயிலினி வள்ளியிடம் "இஃது உன் புத்தகமா?" என்று கேட்டாள்.
இது வள்ளியுடையப் புத்தகமா என்று குயிலினி கேட்டாள்.
இது தன்னுடைய புத்தகமா என்று குயிலினி வள்ளியிடம் கேட்டாள்.
வள்ளியிடம் அஃது அவளுடைய புத்தகமா எனக் குயிலினி கேட்டாள்.
