NEW
Font size
WorksheetsMoment of inertia
Total questions: 10
Worksheet time: 5mins
ஒரே மாதிரியான நிறை மற்றும் சீரான தடிமன் கொண்ட நான்கு பொருட்களின் வரைபடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நான்கிலும் நிறை சீராக பரவியுள்ளது. P என்ற புள்ளியில் தளத்திற்கு செங்குத்தாக உள்ள ஒரு அச்சில் சுழலும் போது எது அதிக நிலைமத் திருப்புத்திறனைக் கொண்டுள்ளது?
A
B
C
D
இரண்டு சீரான திடப் பந்துகளில், ஒன்று R ஆரம் மற்றும் நிறை M, மற்றொன்று ஆரம் 2R மற்றும் நிறை 8M ஆக இருக்கிறது. அவைகள் ஒரு சாய்வில் உருள்கின்றன. அவைகள் சாய்வின் உச்சியில் ஓய்விலிருந்து ஒன்றாகத் தொடங்குகின்றன. எது முதலில் சாய்வின் அடிப்பகுதியை அடையும்?
சிறிய பந்து முதலில் வந்து சேரும்
பெரிய பந்து முதலில் வந்து சேரும்
இரண்டும் ஒரே நேரத்தில் வந்து சேரும்
ஒரு நபர் சுழலும் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அதன் அச்சில் உராய்வு இல்லை. இந்த நபர் தனது கைகளை நீட்டும்போது,
அவரது நிலைமத் திருப்புத் திறன் அதிகரிக்கிறது மற்றும் கோணத் திசைவேகம் குறைகிறது.
அவரது நிலைமத் திருப்புத் திறன் குறைகிறது மற்றும் கோணத் திசைவேகம் அதிகரிக்கிறது.
நிலைமத் திருப்புத்திறனும் கோணத் திசைவேகமும் அதிகரிக்கிறது.
நிலைமத் திருப்புத்திறனும் கோணத் திசைவேகமும் குறைகிறது.
இரண்டு தூண்களில் நிலைநிறுத்தப் பட்ட பாலத்தின் மீது திருப்பு விசை செயல்படுமா?
செயல்படாது. அது நகரவில்லை
செயல்படுகிறது. ஆனால் அது சமநிலையில் உள்ளது
செயல்படுகிறது. ஆனால் திருப்பு விசை காரணமாக அது விரைவில் உடைந்து விடும்
செயல்படாது. பாலங்களில் திருப்பு விசை இருக்க முடியாது
படத்தில் மொத்த அமைப்பு சமநிலையில் இருக்க r இன் மதிப்பு
0.65 மீ
0.79 மீ
0.39 மீ
0.56 மீ
m நிறை மற்றும் a பக்கம் உடைய ஒரு கனசதுரத்தின் நிலைமத் திருப்புத்திறன் மதிப்பு
45 m a2
121 m a2
34 m a2
32 m a2
1 கிலோ நிறை கொண்ட ஒரு துகள் (1m, 1m, 1m) இல் வைக்கப்படுகிறது. z அச்சைப் பொறுத்து இந்தத் துகளின் நிலைமத் திருப்புத்திறன்
2 Kg m2
2 Kg m2
1 Kg m2
3 Kg m2
ஒரு சாய்வான தளத்தின் மேற்புறத்தில் ஒரே நிறை மற்றும் ஆரம் கொண்ட வட்டு மற்றும் வளையம் ஒரே நேரத்தில் சாய்வின் மேல்பகுதியிலிருந்து விடப்படுகின்றன. நழுவாமல் நகர்ந்தால் எது முதலில் சாய்வின் அடிப்பகுதியை அடைகிறது?
வட்டு
வளையம்
இரண்டும் ஒரே நேரத்தில்
ஒரு பென்சிலின் சுழற்சி நிலைமம் எந்த அச்சைப் பொறுத்து அதிகமாக இருக்கும்
காரீயம் இருக்கும் அதன் நீளமான அச்சைப் பொறுத்து
ஒரு முனையை பற்றி ஊசல் போல பயன்படுத்தும் போது
பென்சிலுக்குள் இருக்கும் எந்த அச்சிலும் சமமாகவே இருக்கும்.
பென்சிலின் நடுப்பகுதி வழியாக
𝑀 நிறை மற்றும் 𝑅 ஆரம் கொண்ட ஒரு திட உருளை அதன் மைய அச்சில் ω கோணத் திசைவேகத்துடன் சுழல்கிறது. உருளையானது அதே நிறை மற்றும் ஆரம் கொண்ட உள்ளீடற்ற உருளையாக மாற்றப்பட்டால், திட உருளையுடன் ஒப்பிடும்போது உள்ளீடற்ற உருளையின் இயக்க ஆற்றல்:
இரண்டு மடங்கு அதிகம்
பாதியாகும்ன்
நான்கு மடங்கு அதிகரிக்கும்
மாற்றம் இருக்காது
