Worksheets1G2 மரபுத்தொடர் இணைமொழி ("A" book)
Total questions: 15
Worksheet time: 8mins
கலந்துகொண்ட எல்லாப் போட்டிகளிலும் வசந்தன் வெற்றிப் பெற்றதைக் கேட்ட அவன் பெற்றோர்___________.
உச்சி குளிர்ந்தனர்
ஆறப்போட்டனர்
இனிக்கப் பேசினர்
ஒற்றைக் காலில் நின்றனர்
ஆசிரியர் கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள் கோமதி ___________ முந்திக்கொண்டு தவறான விடையைச் சொன்னாள்.
ஒற்றைக் காலில் நின்று
இனிக்கப் பேசி
அவசரக்குடுக்கையாக
ஆறப்போட்டு
ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாடத்தைச் செய்து முடிக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் கலா வேலையை ___________________.
இனிக்கப் பேசினாள்
உச்சி குளிர்ந்தாள்
அவசரக்குடுக்கையாகச் செய்தாள்
ஆறப்போட்டாள்
பலரிடமும் __________ ஏமாற்றிப் பணம் வாங்கிய ஏமாற்றுக்காரன் காவலர்களிடம் அகப்பட்டான்.
ஆறப்போட்டு
அவசரக்குடுக்கையாக
உச்சி குளிர்ந்து
இனிக்கப் பேசி
உரிய காலத்தில் செய்ய வேண்டிய செயலை _______________________ உடனுக்குடன் செய்து முடிப்பதே சிறப்பு
உச்சி குளிராமல்
இனிக்கப் பேசாமல்
ஆறப்போடாமல்
ஒற்றைக் காலில் நிற்காமல்
'ஆறப்போடுதல்' என்னும் மரபுத்தொடர் ஒரு செயலை அவசரப்பட்டுச் செய்வதைக் குறிக்கிறது. சரியா? தவறா?
சரி
தவறு
சோறு ஆறுவதற்கு முன்பே அதை _______________________ ஜமுனா எடுத்து உண்டதால் நாக்கைப் பொசுக்கிக் கொண்டாள்.
ஆறப்போட்டு
உச்சி குளிர்ந்து
இனிக்கப் பேசி
அவசரக்குடுக்கையாக
'இனிக்கப் பேசுதல்' என்னும் மரபுத்தொடர் ஏமாற்றும் நோக்கில் பேசுதலைக் குறிக்கிறது. சரியா? தவறா?
சரி
தவறு
படத்தைப் பார்த்து அதற்குப் பொருத்தமான இணைமொழியைத் தேர்ந்தெடு.
அடக்கவொடுக்கம்
ஆடாமல் அசையாமல்
அறக்கப்பறக்க
ஆற அமர
நாம் சாலைகளைக் கடக்கும்போது ___________ கடக்கக் கூடாது, அவை ஆபத்துகளை விளைவிக்கும்.
ஆற அமர
அடக்கவொடுக்கமாக
அறக்கப்பறக்க
ஆடாமல் ஆசையாமல்
ரேகாவிற்கு அன்று பள்ளி விடுமுறை என்பதால் ________
தனது வேலைகளைச் செய்து முடித்தாள்.
ஆற அமர
அடக்கவொடுக்கம்
ஆடாமல் அசையாமல்
அறக்கப் பறக்க
படத்தைப் பார்த்து அதற்குப் பொருத்தமான இணைமொழியைத் தேர்ந்தெடு.
அடக்கவொடுக்கம்
ஆடாமல் அசையாமல்
அறக்கப் பறக்க
ஆற அமர
ராஜா அவனுடைய நண்பர்களோடு திடலில் விளையாடியபோது ஒரு பாம்பு வந்தது. அதைக் கண்டு ________________ நின்றான்.
ஆடாமல் அசையாமல்
அறக்கப்பறக்க
ஆறப்போட்டு
இனிக்கப் பேசி
நாம் எதையும் ______________ சிந்தித்து முடிவெடுப்பதே நல்லது.
அறக்கப்பறக்க
ஆற அமரச்
அடக்கவொடுக்கமாக
உச்சி குளிர்நது
நந்தா காலையில் தாமதமாக எழுந்ததால் பள்ளிக்கு _______________ கிளம்பினான்.
அவசரக்குடுக்கையாக
ஆறப்போட்டு
அறக்கப்பறக்க
ஆற அமர
