wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் 20 சிவகுமார்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தேவைக்கு ஏற்பச் சிக்கனமாகச் செலவு செய்து சேமித்து வாழ்ந்தால் சிறப்புற வாழலாம்.

a)

சிக்கனம் சீரளிக்கும்

b)

சிறு துளி பெரு வெள்ளம்

2.

மீன் குஞ்சுக்கு நீச்சல் __________ வேண்டுமா?

a)

பழக

b)

பழக்க

3.

________ அழகு ________ தெரியும்

a)

அகத்தின் - அகத்தில்

b)

அகத்தின் - முகத்தில்

4.

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.

a)

அழுத பிள்ளை பால் குடிக்கும்.

b)

தன் கையே தனக்குதவி

5.

உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக் கூடாது.

a)

தீட்டின மரத்திலே கூர்ப்பார்ப்பதா?

b)

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

6.

எதையும் முறையாகப் பயிற்சி செய்து வந்தால்தான் அதில் நாம் வல்லமை பெற முடியும்.

a)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

7.

அக்கறை எடுத்துக்கொண்டால் நாம் அடைய முடியாதது ஒன்றுமே இல்லை.

a)

வருத்தினால் வாராதது இல்லை

b)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

8.

ஒரு மனிதன் தனித்து வாழாமல் சுற்றத்தாரோடும் உறவினரோடும் சேர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வாகும்.

a)

ஊருடன் கூடி வாழ்

b)

தனிமரம் தோப்பாகாது

9.

எந்த ஒரு செயலிலும் முயற்சியோடு ஈடுபவர்க்கு அச்செயலில் வெற்றி கிட்டுவது உறுதி.

a)

வருத்தினால் வாராதது இல்லை

b)

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார்

10.

எப்படிப்பட்ட பிடிவாத குணம் கொண்டவரிடமும் பக்குவமாக எடுத்துக் கூறினால் அவர் மனம் இரங்கி விடுவார்.

a)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

b)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டும்