Worksheetsதமிழ் மொழி ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 5mins
பெரியவர்களிடம் மரியாதை இல்லாமல் பேசிய அண்ணனை, அப்பா கன்னத்தில் ____________ என அறைந்தார்.
பளீர்பளீர்
சிடுசிடு
கடுகடு
பளார்பளார்
உண்பவர்க்குத் தக்க உணவு பொருள்களை விளைத்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.
பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகப்பர் சொல்லிழுக்கப் பட்டு
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித்
துப்பாய தூஉம் மழை
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை
வலிமையுள்ளவர், வலிமையற்றவர் என்ற வேறுபாடு இல்லாமல்
எல்லார்க்கும் கேட்பவற்றைத் தந்தருள்பவன் இறைவன்
பொருளின் செய்யுள் அடியைத் தெரிவு செய்க
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
வல்லார்க்கும் மாட்டார்க்கும்
வரமளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும்
மதிகொடுக்கும் மதியே
காணர்க்கும் கண்டவர்க்கும்
கண்ணளிக்கும் கண்ணே
முன் வைத்த காலை பின் வைக்காதே.
பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால்
அச்செயல் சிறப்பாக முடிவுறும்.
எப்படிப்பட்ட பிடிவாதம் குணம் கொண்டவரிடமும் பக்குவமாக எடுத்துக் கூறினால் அவர் மனம் இரங்கி விடுவார்.
உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக்கூடாது.
ஒரு காரியத்தில் ஈடுபட்டால் இடையில் எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதிலிருந்து பின் வாங்காமல் தொடர்ந்து செய்து முடிக்க வேண்டும்.
பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற இரட்டைச் சகோதிரர்களின் திறமைகளை இவ்வளவு காலமாக நாம் அறியவே இல்லை.
சூழலுக்கு ஏற்ற உவமைத் தொடரை தேர்ந்தெடுக.
சூரியனைக் கண்ட பனி போல
குடத்திலிட்ட விளக்குப் போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
குன்றின் மேலிட்ட விளக்குப் போல
பெயரெச்ச சொல்லைத் தேர்ந்தெடு.
எழுதி முடித்தான்
படித்த புத்தகம்
அழகான ஓவியம்
அழகாக வரைந்தாள்.
வினையடை சொல்லைத் தேர்ந்தெடு
இனிமையாகப் பாடினான்
சுவையான உணவு
ஓடி முடித்தான்
வாடிய மலர்
வினையெச்ச சொல்லைத் தேர்ந்தெடு.
வாடிய முகம்
ஆடிப் பாடினான்
வேகமாக ஓடியது
கனமான பெட்டி
பெயரடை சொல்லை தெரிவு செய்க
உரக்கமாக பேசினான்
நீளமான கூந்தல்
தடித்த மீசை
புதிய சட்டை
சரியான இலக்கண விதியைத் தெரிவு செய்க
ண்டு, ய்து, எனும் முடுயும் வினயெச்சங்களுக்குப் பின் வலிமிகும்.
ந்து, ன்று எனும் முடியும் வினையெச்சங்களுக்குப் வலிமிகும்.
ஆய்,போய், ஆக, என என்று முடியும் வினையெச்சங்களுக்குப் பின் வலிமிகும்.
ஓரெநுத்து ஒரு மொழிக்குப் பின் வலிமிகாது.
