wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

திருமதி கமலம் குடும்பத்தினர் நெடுங்காலமாகவே மட்பானை செய்து வருகின்றனர்.

a)

ஏட்டுச் சுரக்காய்

b)

மனக்கோட்டை

c)

முழு மூச்சு

d)

தொன்று தொட்டு

2.

இப்படத்திற்குப் பொருந்தும் மரபுத்தொடர் எது?

a)

ஆறப்போடுதல்

b)

தொன்று தொட்டு

c)

அள்ளி இறைத்தல்

d)

அரக்கப் பரக்க

3.

மகிழன் எனும் வாலிபன் வெறும் கற்பனை உலகத்திலேயே வாழ்ந்து கொண்டு நேரத்தைக் கழித்தான்.

a)

அரக்கப் பரக்க

b)

மனக்கோட்டை

c)

ஏட்டுச் சுரக்காய்

d)

கம்பி நீட்டுதல்

4.

பல வருடங்களாக பாட்டி வைத்தியம் செய்து வரும் பார்கவியின் பாட்டி மிகவும் திறமைசாலி என அவ்வூர் மக்கள் கூறுவர்.

a)

கரிப்பூசுதல்

b)

மனக்கோட்டை

c)

தொன்று தொட்டு

d)

கரைத்துக் குடித்தல்

5.

ஒரு காரியத்தைக் காலம் தாழ்த்திச் செய்தல்

a)

அள்ளி விடுதல்

b)

ஆறப்போடுதல்

c)

அவசரக் குடுக்கை

d)

கரி பூசுதல்

6.

முகிலன் பொறுப்பின்றி ஊர் சுற்றித் திரிந்தான். தான் சொந்தமாக ஒரு பேரங்காடியை விலைக்கு வாங்கி வியாபாரம் செய்ய வேண்டும் என பகல் கனவு கான்கிறான்.

a)

முழு மூச்சு

b)

ஆறப்போடுதல்

c)

அள்ளி விடுதல்

d)

மனக்கோட்டை

7.

கலந்துகொண்ட எல்லாப் போட்டிகளிலும் வசந்தன் வெற்றிப் பெற்றதைக் கேட்ட அவன் பெற்றோர்___________.

a)

உச்சி குளிர்ந்தனர்

b)

ஆறப்போட்டனர்

c)

இனிக்கப் பேசினர்

d)

ஒற்றைக் காலில் நின்றனர்

8.

ஆசிரியர் கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள் கோமதி ___________ முந்திக்கொண்டு தவறான விடையைச் சொன்னாள்.

a)

ஒற்றைக் காலில் நின்று

b)

இனிக்கப் பேசி

c)

அவசரக்குடுக்கையாக

d)

ஆறப்போட்டு

9.

ஆசிரியர் கொடுத்த வீட்டுப்பாடத்தைச் செய்து முடிக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் கலா வேலையை ___________________.

a)

இனிக்கப் பேசினாள்

b)

உச்சி குளிர்ந்தாள்

c)

அவசரக்குடுக்கையாகச் செய்தாள்

d)

ஆறப்போட்டாள்

10.

உரிய காலத்தில் செய்ய வேண்டிய செயலை _______________________ உடனுக்குடன் செய்து முடிப்பதே சிறப்பு

a)

உச்சி குளிராமல்

b)

இனிக்கப் பேசாமல்

c)

ஆறப்போடாமல்

d)

ஒற்றைக் காலில் நிற்காமல்

11.
"அவசரக்குடுக்கை" என்ற மரபுத்தொடர் எந்த அர்த்தத்தில் பயன்படுகிறது?
a)
மகிழ்ச்சி கொள்ளுதல்
b)
தள்ளிப்போடுதல்
c)
அவசரமாக, யோசிக்காமல்
d)
அதிகம் செலவு செய்தல்
12.
"இனிக்கப் பேசுதல்" என்பதன் பொருள் என்ன?
a)
மற்றவரை மாட்டி விடுதல்
b)
அடுத்தவர்களை மயக்கும் வகையில் பேசுதல்
c)
பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல்
d)
அதிகம் செலவு செய்தல்
13.
"ஒற்றைக்காலில் நிற்றல்" என்றால் என்ன?
a)
விடாப்பிடியாக இருத்தல்
b)
திருடுதல், திருடிவிட்டுத் தப்பித்து ஓடுதல்
c)
உணவு முறையில் கட்டுப்பாடு
d)
சேட்டை செய்தல்