Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

13,14 - உயிரினங்களின் அமைப்பு நிலைகள், தாவரங்களின் விலங்குகளின்.

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அட்டையில் இடப்பெயர்ச்சி --------- மூலம் நடைபெறுகிறது.

a)

முன் ஒட்டுறுப்பு

b)

பக்கக் கால்கள்

c)

சீட்டாக்கள்

d)

தசைகளின் ‌சுருக்கம் மற்றும் நீள்தல்

2.

அட்டையின் உடற்கண்டங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

a)

மெட்டாமியர்கள் (சோமைட்டுகள்)

b)

புரோகிளாட்டிகள்

c)

ஸ்ட்ரோபிலா

d)

இவை அனைத்தும்

3.

அட்டையின் தொண்டைப்புற‌ நரம்புத்திரள் எந்த உறுப்பு மண்கலத்தின் ஒரு பகுதி

a)

கழிவு நீக்க மண்டலம்

b)

நரம்பு மண்டலம்

c)

இனப்பெருக்க மண்டலம்

d)

சுவாச‌ மண்டலம்

4.

அட்டையின் மூளை இதற்கு மேலே உள்ளது

a)

வாய்

b)

வாய்க்குழி

c)

தொண்டை

d)

தீனிப்பை

5.

அட்டையின் உடலில் உள்ள‌ கண்டங்களின் எண்ணிக்கை

a)

23

b)

33

c)

38

d)

30

6.

பாலூட்டிகள் --------- விலங்குகள்.

a)

குளிர் இரத்த

b)

வெப்ப இரத்த

c)

பாய்கிலோதெர்மிக்

d)

இவை அனைத்தும்

7.

ஆற்றல் சார்ந்த கடத்துதலில் (செயல் மிகு கடத்தல்) -------

a)

மூலக்கூறுகள் செறிவு குறைவான பகுதிலிருந்து செறிவு அதிகமான பகுதிக்கு இடம் பெயர்கிறது.

b)

ஆற்றல் செலவிடப்படுகிறது

c)

அவை மேல் நோக்கி கடத்துதல் முறையாகும் .

d)

இவை அனைத்தும்

8.

வேரின் மூலம் உறிஞ்சப்பட்ட நீரானது தாவரத்தின் மேல்பகுதிக்கு இதன் மூலம் கடத்தப்படுகிறது

a)

புறணி

b)

புறத்தோல்

c)

புளோயம்

d)

சைலம்

9.

நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது

a)

கார்பன் டை ஆக்ஸைடு

b)

ஆக்ஸிஜன்

c)

நீர்

d)

இவை எதுவுமில்லை

10.

வேர்த் தூவிகளானது ஒரு

a)

அ) புறணி செல்லாகும்

b)

ஆ) புறத்தோலின் நீட்சியாகும்

c)

இ) ஒரு செல் அமைப்பாகும்

d)

ஈ) ஆ மற்றும் இ

11.

கீழ்க்கண்ட எந்த நிகழ்ச்சிக்கு ஆற்றல் தேவை.

a)

செயல் மிகு கடத்துதல் (ஆற்றல் சார் கடத்துதல்)

b)

பரவல்

c)

சவ்வூடு பரவல்

d)

இவை அனைத்தும்

12.

மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது

a)

எண்டோகார்டியம்

b)

எபி கார்டியம்

c)

மையோகார்டியம்

d)

மேற்கூறியவை அனைத்தும்

13.

இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?

a)

வெண்ட்ரிக்கிள் →\rightarrow ஏட்ரியம் →\rightarrow சிரை →\rightarrow தமனி

b)

ஏட்ரியம் →\rightarrow வெண்ட்ரிக்கிள் →\rightarrow சிரை →\rightarrow தமனி

c)

ஏட்ரியம் →\rightarrow வெண்ட்ரிக்கிள் →\rightarrow தமனி →\rightarrow சிரை

d)

வெண்ட்ரிக்கிள் →\rightarrow சிரை →\rightarrow ஏட்ரியம் →\rightarrow தமனி

14.

விபத்து காரணமாக 'O' இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த வகையை மருத்துவர் செலுத்துவார்?

a)

O‌ வகை

b)

A அல்லது B வகை

c)

AB வகை

d)

அனைத்து வகை

15.

இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது-------

a)

SA கணு

b)

AV கணு

c)

பர்கின்ஜி இழை

d)

ஹிஸ் கற்றைகள்

16.

பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?

a)

பிளாஸ்மா = இரத்தம்+ லிம்ஃபோசைட்

b)

சீரம் = இரத்தம்+ ஃபைப்பரினோஜன்

c)

நிணநீர்= பிளாஸ்மா + RBC + WBC

d)

இரத்தம்= பிளாஸ்மா + RBC + WBC + இரத்த தட்டுகள்