Worksheetsமீள்பார்வை ஆண்டு 5
Total questions: 35
Worksheet time: 26mins
வெற்றி வேற்கைக்கு ஏற்ற பதில்களைத் தெரிவு செய்க.
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
ஒருவருடைய ______ வைத்தே இந்த உலகம் போற்றும்.
சிறுமையை
பெருமையை
________ செயல்களால் பிறருடைய ஏளனத்திற்கு ஆளாக நேரிடும்.
பெருமை
புகழ்ச்சி
சிறுமை
மனித வாழ்வில் __________ ஏற்படுவது இயல்பு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்
கரடு முரடு
மேடு பள்ளம்
அருமை பெருமை
இன்பத் துன்பம்
திரு.சிவாவின் வறுமை நிலை, அவரது மூத்த மகன் சம்பாதிக்கத் தொடங்கியதும் ________ நீங்கியது.
இலைமறை காய் போல
வேலியே பயிரை மேய்ந்தாற் போல
காட்டுத் தீ போல
சூரியனைக் கண்ட பனி போல
தம்பியிடம் யாரும் இரகசியங்களைக் கூற மாட்டார்கள். காரணம் அவன் ____________ என்று அனைவருக்கும் தெரியும்.
கிள்ளுக்கீரை
ஒட்டைவாய்
கண்ணும் கருத்துமாய்
முழு மூச்சாய்
பின்வரும் சொல்லிலிருந்து எதைத் தெரிந்து கொள்ள முடியாது?
ஓடினான்
காலம்
திணை
வேற்றுமை
எண்
பின்வரும் சொல்லிலிருந்து எதைத் தெரிந்து கொள்ள முடியாது?
பறக்கிறது
தொகுதிப்பெயர்
எண்
காலம்
திணை
இடம்
நாட்டுப்பற்று
நாடுப் + பற்று
நாட்டுப் + பற்று
நாட்டு + பற்று
நாடு + பற்று
பொற்சரம்
பொட் + சரம்
பொற் + சரம்
பொன்+ சரம்
பொற் + அரம்
கண்ணிமை
கண் + இமை
கண்ணின் + இமை
கண் + அமை
கண் + இனிமை
உழைக்காதவர்கள் வாழ்வில் முன்னேற முடியுமா _________ .
.
,
;
?
சந்திரா எப்பொழுதும் தன் தந்தையின் அறிவுரைப்படி நடப்பான்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை
கொடுக்கப்பட்டுள்ள கொன்றை வேந்தனில் கோடிடப்பட்ட சொல்லுக்குப் பொருந்தும் சொல்லைத் தெரிவு செய்க.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
திரை
பாடம்
பாசம்
செல்வம்
அன்பு
உலக நீதியை இயற்றிவர் ________
திருவள்ளுவர்
பாரதியார்
பாரதிதாசன்
ஓளவையார்
உலகநாத பண்டிதர்
கல்வியோடு தொடர்பில்லாத வெற்றி வேற்கையைத் தெரிவு செய்க.
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்
கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
பெருமையும் சிறுமையும் தான் தர வருமே
கல்விக் கழகு கசடற மொழிதல்
___________ சிறந்து விளங்கும் மாணவர்களுக்குப் பல்வேறு அறவாரியங்கள் உபகாரச்சம்பளங்களை வழங்கி வருகின்றன.
குறை நிறைகளில்
கல்வி கேள்விகளில்
ஆடை அணிகலன்களில்
பழக்க வழக்கங்களில்
கொடுக்கப்பட்ட சொற்களில் அஃறிணை ஒருமையைக் காட்டும் சொற்களைத் தெரிவு செய்க.
சிங்கம் / சிங்கார வேலன்./ கரடி
கருநாகரன் / கருநாகம் / கரடி
மாமரம் / மாமா / மாலதி/ மாடு
புலி / பூனை / பூண்டு / புத்தகம்
சிறுத்தை / சிறுமி/ சிங்கம்/சிந்து
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் வினைமுற்றைத் தெரிவு செய்க.
பாய்ந்து ஓடிய
விரட்டிச் சென்றான்
அரிந்த காய்கறி
எழுந்து நடக்க
வாங்கி வர
கீழ்க்காணும் சொல்லுக்குப் பொருந்தாதவற்றைத் தெரிவு செய்க.
வேய்தனர்
பன்மை
உயர்திணை
பலவின்பால்
இறந்தகாலம்
கீழ்க்காண்பனற்றுள் தவறாக வலிமிகுந்த சொற்றொடரைத் தெரிவு செய்க.
விளையாட்டுக் காலணி
அணிந்துக் கொண்டார்
பாக்குத் தோப்பு
தேடிப் பார்கின்றனர்
நிகழ்காலச் சொற்களைத் தெரிவு செய்க
ஓடினான் / துரத்துகிறது
ஓடுவான் / துரத்தியது
ஓடுகிறான் / துரத்தும்
ஓடுகிறான் / துரத்துகிறது
ஓடுகிறான் / துரத்தியது
சரியான விடையைத் தெரிவு செய்க
ப் + ஒள = பெ
ல் + உ = லூ
ண் + ஈ = னீ
ம் + ஆ = மஆ
த் + ஓ = தோ
பின்னருவற்றுள் பிழையான பொருள் தரும் இணையைத் தெரிவு செய்க.
இல்லம் = வீடு
சந்திரன் = நிலா
சூரியன் = சந்திரன்
பார் = உலகம்
கரி = யானை
அஃறிணையைக் குறிக்காத இணை எது?
மேசை / மூடி / பேனா/ தட்டு
கணினி / மின்விசறி / நாற்காலி / காகிதம்
மாணவன் / மாதவி/ மாலவன்/ மாம்பழம்
வீடு / பள்ளி / பல்லி / பேருந்து
ஏற்ற வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.
மாலா படைத்த ________________ நயம் அனைவரையும் மெய்மறக்கச் செய்தது.
கவிதை
கவிதையை
கவிதையின்
கவிதையுடைய
கவிதையோடு
இதில் எது சினைப்பெயர் அல்ல
இலை
கண்
வாள்
கால்
நான் மாலை நேரத்தில் தோட்டத்தில் விளையாடுவேன் எனும் வாக்கியத்தில் கோடிடப்பட்டச் சொல் எவ்விடத்தைக் காட்டுகிறது?
முன்னிலை
படர்க்கை
தன்னிலை
எதையும் காட்டவில்லை
1.உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
7
12
5
24
நேர்க்கூற்றுக்கு ஏற்ற அயற்கூற்றைத் தெரிவு செய்க.
"நான் என் நிலத்தை விற்கப் போகின்றேன்," என்று வளவன் கூறினான்.
நான் தன் நிலத்தை விற்கப் போவதாக வளவன் கூறினான்.
தன் நிலத்தை விற்கப் போவதாக வளவன் கூறினான்.
தன் நிலத்தை விற்கப் போகிறேன் வளவன் கூறினான்.
நான் என் நிலத்தை விற்கப் போவதாக வளவன் கூறினான்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
_________________________________________
தீயினும் அஞ்சப் படும்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
நோக்கக் குழையும் விருந்து
ஒரு பிறப்பில் .ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பாக அமையும்.
இப்பொருளைக் குறிக்கும் குறளடி யாது?
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மோப்பக் குழையும் அணிச்சம் முகந்திரிந்து
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
6
8
4
8
மூன்றாம் வேற்றுமை உருபைத் தேர்ந்தெடுக
ஐ
கு
ஆல், ஆன், உடன், ஒடு, ஓடு
இன், இல், இருந்து, நின்று
ர் + இ சேர்த்தால் வரும் உயிர்மெய் எழுத்து எது?
ரி
ர
ரா
ரு
விருந்தினர்களை முகம் மலர வரவேற்க வேண்டும் என்று கூறும் திருக்குறள் யாது?
தீயவை தீய பயத்தலால்
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
மோப்பக் குழையும் அனிச்சம்
காலத்தி னாற்செய்த உதவி
