wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10 SCIENCE -12 தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செல்லியல்

Total questions: 18

Worksheet time: 36mins

Name
Class
Date
1.

காஸ்பேரியன் பட்டைகள் வேரின் ---------------பகுதியில் காணப்படுகிறது.

a)

புறணி

b)

பித்

c)

பெரிசைக்கிள்

d)

அகத்தோல்

2.

உள்நோக்கிய சைலம் என்பது எதன் சிறப்புப் பண்பாகும்?

a)

அ.வேர்

b)

தண்டு

c)

இலைகள்

d)

ஈ.மலர்கள்

3.

3.சைலமும் புளோயமும் ஒரே ஆரத்தில் அருகருகே அமைந்து காணப்படுவது. --------------------- எனப்படும்.

a)

ஆரப்போக்கு அமைப்பு

b)

சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை

c)

ஒன்றிணைந்தவை

d)

இவற்றில் எதுவுமில்லை

4.

காற்றில்லா சுவாசத்தின் மூலம் உருவாவது

a)

கார்போஹைட்ரேட்

b)

எத்தில் ஆல்கஹால்

c)

அசிட்டைல் கோ.ஏ

d)

பைருவேட்

5.

கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது

a)

பசுங்கணிகம்

b)

மைட்டோகாண்ட்ரியாவின் உட்கூழ்ம மேட்ரிக்ஸ்

c)

புறத்தோல் துளை

d)

மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வு

6.

ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?

a)

ATP யானது ADP யாக மாறும் போது

b)

CO2 நிலை நிறுத்தப்படும் போது

c)

நீர்மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது

d)

இவை அனைத்திலும்

7.

பொருத்துக.

1. புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை----டிரசீனா

2.கேம்பியம்----உணவு கடத்துதல்

3. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை-----பெரணிகள்

4.சைலம்---இரண்டாம் வளர்ச்சி நிலை

5. புளோயம்------நீரைக் கடத்துதல்

a)

3,5,1,2,4

b)

3,5,2,4,1

c)

3,5,4,1,2

d)

1,2,3,4,5

8.

வேரில் புறணியின் உட்புற அடுக்கு -----------------------ஆகும்

(a)  

9.

சைலமும் புளோயமும் வெவ்வேறு ஆரங்களில் காணப்படும் வாகுலார் கற்றை --------------------------அமைவாகும்

(a)  

10.

கிளைக்காலிஸிஸ் நடைபெறும் இடம்-----------------

(a)  

11.

ஒளிச்சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்ஸிஜன் ------------------------------லிருந்து கிடைக்கிறது.

(a)  

12.

செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை----------------------

(a)  

13.

தாவரங்களில் நீரை கடத்துவதில் ஈடுபடும் திசு புளோயம்

(a)  

14.

தாவரத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் மெழுகுப்படலம் கியூடிக்கிள்

(a)  

15.

ஒருவிதையிலைத் தாவரத் தண்டில் சைலத்திற்கும் புளோயத்திற்கும் இடையில் கேம்பியம் காணப்படுகிறது.

(a)  

16.

இருவிதையிலைத் தாவர வேரில் மேற்புறத் தோலுக்கு கீழே பாலிசேட் பாரன்கைமா உள்ளது

(a)  

17.

இலையிடைத் திசு பசுங்கணிகங்களைப் பெற்றுள்ளது

(a)  

18.

காற்று சுவாசத்தை விட காற்றில்லா சுவாசம் அதிக ATP மூலக்கூறுகளை உற்பத்தி செய்கிறது

(a)