NEW
Font size
Worksheetsபலவுள் தெரிவு வினாக்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
1. கீழ்காணும் சொற்றொடரைப் பிரித்தெழுதப் பட்டுள்ளது, அதில் எது சரியானது?
இக்கண்ணாடி
அ. இக்+ கண்ணாடி
ஆ. இ+ கண்ணாடி
1. சுட்டெழுத்து என்றால் என்ன?
அ. ஒரு குறிப்பிட்ட பொருளையோ மனிதரையோ சுட்டி காட்டும் பொருளில் வரும்
எழுத்தாகும்.
ஆ. ஒரு குறிப்பிட்ட பொருளை மட்டும் சுட்டிகாட்ட பயன்படும்
இ. ஒரு குறிப்பிட்ட மனிதரை மட்டும் சுட்டிகாட்ட பயன்படும்
1. கீழ்காண்பனவற்றுள் எது வினாவெழுத்துக்குறிய சொற்கள் அல்ல?
அ
ஏ
யா
எ
கீழ்கானும் சொற்குவியலில் இன எழுத்துகள் கொண்ட சரியான இனையை தெரிவு செய்க.
i. தங்கம்- சங்கு
ii. பஞ்சம் – இஞ்சி
iii. வணக்கம் – கனிவு
iv. மண்டபம் - நல்வரவு
அ. i,iv
ஆ. ii, iii
இ. i,ii
ஈ. iii,iv
1. கீழ்க்காண்பனவற்றுள் கிரந்த எழுத்து கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அ. ஜூலை மாதம் தலைநகரில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்தது
ஆ. காவிரி மிகவும் பவ்வியமாக நடனம் ஆடினாள்
இ. வைனவர்கள் விஷ்னுவை முழுமுதற்க் கடவுளாக வழிபடுகின்றனர்
1. சுட்டெழுத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
அ. 1
ஆ.3
இ. 4
ஈ. 2
1. கீழ்க்காண்பனவற்றில் தோன்றல் புணர்ச்சி சரியாக அமையப்பெற்ற இணையை தெரிவு செய்.
i. அப்பையன்
ii. எவ்யானை
iii. மெய்ஞ்ஞானம்
iv. கைம்மாறு
அ. i, iv
ஆ. ii,iii
இ. i,ii
ஈ.iii,,iv
1. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
அ. 1
ஆ 4
இ. 3
ஈ. 5
1. கொடுக்கப்பட்டுள்ள கூற்று எவ்வகை வினா ஆகும்?
சொல்லின் உள்ளே நின்று வினாப் பொருள் தரும்
அ. புறவினா
ஆ. அகவினா
புறச்சுட்டு என்றால் என்ன?
அ. ஒரு சொல்லின் புறத்தே (வெளியே) நின்று சுட்டுப்பொருளைத் தருவது
புறச்சுட்டு ஆகும்.
ஆ. ஒரு சொல்லின் புறத்தே (உள்ளே) நின்று சுட்டுப்பொருளைத் தருவது
புறச்சுட்டு ஆகும்.
