NEW
Font size
Worksheetsஒலி வேறுபாட்டுச் சொற்கள்
Total questions: 12
Worksheet time: 6mins
சிறுவன் கிளி ஒன்றை வளர்த்தான். அந்தக் கிளி அவன் ____________ மீது அமர்ந்து இருந்தது.
தோலில்
தோளில்
இந்தியாவில் தொடர்ந்து கனத்த மழை பெய்தது. அதனால் அங்குக் கடுமையான ___________ ஏற்பட்டது.
வெல்லம்
வெள்ளம்
அம்மா சந்தைக்குச் சென்றார். அவர் ஒரு பெரிய ___________ மீன் வாங்கினார்.
வாளை
வாலை
அமுதாவின் வீட்டில் எலிகள் தொல்லை தாங்கமுடியவில்லை. அவற்றை அடியோடு ___________________ வேண்டுமென்று அவள் நினைத்தாள்.
ஒளிக்க
ஒழிக்க
ஒலிக்க
மீனா வழியில் ஒரு பேனாவைக் கண்டெடுத்தாள். அதில் ‘திரு லிங்கம்’ என்ற பெயர் ________________ இருந்தது.
பொரிக்கப்பட்டு
பொறிக்கப்பட்டு
பாலன் விளையாடும்போது கால் இடறிக் கீழே விழுந்துவிட்டான். விழுந்ததில் அவனது _________ எலும்பு முறிந்துவிட்டது.
விலா
விழா
ஆகாயத்தில் இடி முழக்கம் பேரொலியாகக் கேட்டது. அடுத்த _______________ மின்னல் ஆகாயத்தில் பளிச்சென்று
மின்னியது.
கனம்
கணம்
அன்னை தன் மகனுக்கு அறிவுரை கூறினார். அப்போது அவர் ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் _____________ கூறுவது
தவறான செயல் என்று விளக்கினார்.
குரை
குறை
தாத்தாவின் வீட்டில் எலித் தொல்லை அதிகமாயிற்று. அதைப் பிடிக்க அவர் தந்திரமாக __________ அமைத்தார்.
கன்னி
கண்ணி
தாரணியின் வீட்டில் ஒரு கிளி உள்ளது. அதன் ________________ வளைந்து இருக்கும்.
அலகு
அழகு
சிவநேசன் பிறருக்கு உதவும் _____________ உடையவர். அதனால், அவரைப் பலரும் பாராட்டுவார்கள்.
தன்மை
தண்மை
நாம் நல்லது கெட்டதை வேறுபடுத்தி _________________ கொள்ள வேண்டும். அப்போது தான், நாம் நம் வாழ்வில் முன்னேற முடியும்.
அரிந்து
அறிந்து
